சனி, 31 ஆகஸ்ட், 2013

"இன்வெர்ட்டர்' பேட்டரிகளுக்கு தட்டுப்பாடு

மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், "இன்வெர்ட்டர்' பேட்டரிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

தற்போது, வெயில் காலம் துவங்கி உள்ளதால், மின்சாரம் இல்லாமல் பெரிதும் சிரமப்படும் மக்கள், வசதியான வீடுகளில் மட்டும் காணப்பட்ட ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வாங்க துவங்கி உள்ளனர்.அதுவும், புறநகர் பகுதிகளில் மின்வெட்டு நேரம் அதிகமாகி உள்ளதால், அங்கு இன்வெர்ட்டர் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

இன்வெர்ட்டர் இயங்கும்போது அவசரத் தேவைக்கு மிக்ஸி பயன்படுத்தலாமா?

தொடர் மின்வெட்டு. இன்வெர்ட்டர் இயங்கும்போது அவசரத் தேவைக்கு அயர்ன் பாக்ஸ், மிக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்தலாமா?

கருத்துச் சொல்கிறார் இன்வெர்ட்டர் டீலர் கணேஷ்குமார்...

இன்வெர்ட்டர் என்பது உங்கள் வீட்டின் அடிப்படை மின் தேவைக்குத்தான். 4 ஃபேன், 4 லைட் இயங்குவதற்கு ஏற்ற இன்வெர்ட்டர்கள் கிடைக்கின்றன. சில வீடுகளில் 4 ஃபேன் இருக்காது. அதை சரி செய்யும் வகையில் பிளக் பாயின்ட் கனெக்ஷன் கொடுத்திருப்பார்கள்.

டிரான்ஸ்பார்மர் டேப் சேஞ்சிங்

Tap Changing of Transformer
டிரான்ஸ்பார்மரில் இணைக்கபடும் லோடின் அளவைப் பொறுத்து அதன் டெர்மினல் வோல்டேஜ் அளவு மாறுபடும். இந்த மாறுதல் வீட்டு மின் இணைப்பாக இருக்கும்போது ±5% க்கு மேலும் தொழிற்சாலைகளுக்கு ±7% க்கு மேலும் இருக்கக்கூடாது. ஆகவே இந்தகைய வோல்டேஜ் டிராப்பை ஈடுசெய்ய வேண்டியுள்ளது. மேலும் பல ஜெனரேட்டிங் ஸ்டேசன்கள் ஒன்றாக இணைந்து கிரிட் ஆக செயல்படும்போது, ஒன்றிலிருந்து மற்றொரு ஸ்டேசனுக்கு பாயும் வாட்புல் பவர் (Wattful Power) மற்றும் வாட்லெஸ் பவர் (Wattless Power) ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் வோல்டேஜ் அளவை மாற்ற வேண்டியிருக்கும்.

டிரான்ஸ்பார்மரை டிசி சப்ளையில் இணைத்தால் ஏற்படும் விளைவு

டிரான்ஸ்பார்மருக்கு AC சப்ளை கொடுக்கும் போது பிரைமரி வைண்டிங்-ல் ஆல்டர்நேட்டிங் பிளக்ஸ் ஏற்படுகிறது. இதனால் செல்ப் இன்டக்சன் தத்துவத்தின்படி ஒரு EMF தூண்டப்பட்டு (Back EMF) அது டிரான்ஸ்பார்மருக்கு கொடுக்கப்படும் AC சப்ளையை எதிர்க்கிறது. எனவே ரிசல்ட்டன்ஸ் வோல்டேஜ் அளவு குறைவாக இருப்பதால் பிரைமரியில் பாயும் மின்னோட்டம் குறைவாக இருக்கும். ஆனால் டிரான்ஸ்பார்மரை DC மின் சப்ளையில் இணைக்கும்போது, DC-யின் அளவிலும், திசையிலும் மாற்றம் இல்லாததால் Back EMF தூண்டப்படுவதில்லை. இதனால் பிரைமரி வைண்டிங்கில் அதிகமான மின்னோட்டம் பாய்வதால் வெப்பம் ஏற்பட்டு பிரைமரி வைண்டிங் எரிந்து விடும். ஆகையால் டிரான்ஸ்பார்மரை DC சப்ளையில் இணைக்கக் கூடாது.

டிரான்ஸ்பார்மரில் ஏற்படும் இழப்புகள் - Losses in a Transformer

டிரான்ஸ்பார்மரில் சுழலக் கூடிய பாகம் இல்லாததால் உராய்வின் காரணமாக ஏற்படும் இழப்போ (Frictional Losses) அல்லது காற்றின் அழுத்தத்தால் ஏற்படும் இழப்போ (Windage Losses) கிடையாது. ஆனால் வேறு இரு இழப்புகள் உள்ளன.

பேரலல் ஆப்ரேசன் ஆப் டிரான்ஸ்பார்மர் - Parallel Operation of Transformer

டிரான்ஸ்பார்மர்-ஐ பேரலல் (Parallel) ஆக இணைப்பதற்கான காரணங்கள்.

அதிக அளவு லோடு (Load) ஐ இணைக்க முடியும். ஒன்றை இயக்க முடியாத போது மற்றதின் மூலம் ஒரு குறிப்பிட்ட சதவிகித லோடுக்கு மட்டும் சப்ளை கொடுக்க முடியும். காலமுறை பராமரிப்பு செய்வது எளிது. புல் லோடு (Full load) அளவிற்கு ஒரு பெரிய டிரான்ஸ்பார்மர் மட்டும் இருப்பின் பராமரிப்பு மற்றும் சிறிய குறைபாடு ஏற்படும் போது சப்ளை முழுவதும் நிறுத்த வேண்டி இருக்கும். அந்த நிலையை தடுப்பதற்காகவும் புல் லோடு அளவிற்கு குறைந்த கெப்பாசிட்டி உடைய டிரான்ஸ்பார்மர்கள் பேரலல் செய்யப்படுகிறது.

இன்ஸ்ரூமென்ட் டிரான்ஸ்பார்மர் - Instrument Transformer

அதிக அளவிலான வோல்டேஜ் மற்றும் கரண்டை அளக்க இத்தகைய டிரான்ஸ்பார்மர் பயன்படுகின்றது. இது இரு வகைப்படும்.

பொட்டன்சியல் டிரான்ஸ்பார்மர்
கரண்ட் டிரான்ஸ்பார்மர் 

பொக்கால்ஸ் ரிலே - Buchholz Relay

இது ஒரு பாதுகாப்பு சாதனமாகும். 500 KVA-க்கு மேல் உள்ள டிரான்ஸ்பார்மரில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரிலே ஆனது டிரான்ஸ்பார்மரின் ஆயில் டேங்க் மற்றும் கன்சர்வேட்டரை இணைக்கும் குழாயின் இடையில் பொருத்தப்பட்டிருக்கும்.

ஆட்டோ டிரான்ஸ்பார்மர் - Auto Transformer

இந்த வகை டிரான்ஸ்பார்மர் செல்ப் இன்டக்சன் (Self Induction) தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இதில் ஒரே ஒரு வைண்டிங் மட்டுமே இருக்கும். அந்த வைண்டிங்கே பிரைமரி மற்றும் செகண்டரி-ஆக செயல்படும். ஆட்டோ டிரான்ஸ்பார்மர் ஆனது வோல்டேஜ்-ஐ ஸ்டெப் அப் மற்றும் ஸ்டெப் டவுன் செய்ய பயன்படுகிறது.

EMF-யின் வகைகள்

Type of EMF
Dynamically Induced EMF Statically Induced EMF

டைனமிக்கலி இன்டியூசுடு EMF (Dynamically Induced EMF)
நிலையான காந்தப்புலத்தில் கடத்தி நகர்வதன் காரணமாகவோ, அல்லது சுழலும் காந்தபுலத்தில் கடத்தி நிலையாக இருப்பதன் காரணமாகவோ கடத்தியில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. இதற்கு டைனமிக்கலி இன்டியூசுடு EMF (இயக்கத்தால் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை) என்று பெயர்.

டிரான்ஸ்பார்மர் கூலிங் சிஸ்டம்

Transformer Cooling System Necessity of Cooling
டிரான்ஸ்பார்மர்களில் லாசஸ் ஏற்படுவதால் அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. ஆகையால் அதன் வெப்பநிலையைக் குறைக்க குளிராச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதன் எபிசென்சி குறையும்.

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.3

இந்த தொடரின் பகுதி 2-ல் குறிப்பிட்டபடி ARTI எனப்படும் Appropriate Rural Technology Institute-க்கு நான் அனுப்பிய மெயிலுக்கு பதில் அனுப்பி இருக்கிறார்கள். கீழே அவர்கள் தந்துள்ள கட்டண விபரங்கள் உள்ளன.


நான் விபரம் கேட்டிருந்தது, ரூ.2,500-க்கு இவர்கள் அனுப்பக்கூடிய கிட்(KIT)-ல் என்னென்ன பொருட்கள் இருக்கும் என்பதை பற்றிதான். அதைப்பற்றி எதுவுமே பதிலில் இல்லை.

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.2

ஒரு கிலோ எடையுள்ள ஈரப்பதம் இல்லாத மாவு சத்து (Starch) சர்க்கரை சத்து(Sugar), புரத சத்து(Protein) உடைய உணவுப்பொருட்களில் இருந்து ஒரு கிலோ பயோ கேஸ்-ஐ உற்பத்தி செய்யலாம். நம் சமையல் அறை கழிவுகள் 50% மேல் ஈரப்பதம் கொண்டவை.

ஒரு கிலோ பயோ கேஸ்-ல் 750 கிராம் கார்பன் -டை-ஆக்சைடு(CO2) + 250 கிராம் மீதேன்(CH4) வாயு இருக்கும். இந்த மீதேன் வாயு தான் எரிவாயு ஆகும். இது சமையல் வாயுவாகிய LPG-க்கு நிகரானது.

சமையலறை கழிவில் இருந்து சமையல் எரிவாயு.1

நாம் தினமும் வெளியே தூக்கியெறியும் சமயல் கழிவுகளாகிய, அழுகிய காய், பழம், பழத்தொலி, சமைத்த உணவு பொருட்கள் போன்றவற்றிலிருந்து நமக்கு தேவையான சமையல் எரிவாயுவை தயாரிக்க முடியும். இன்னும் ஒரு சில மாதத்தில் ஆயில் கம்பெனிகள் முற்றிலுமாக எரிவாயுவிறகு வழங்கப்பட்டு வரும் மானியத்தை நிறுத்த போகின்றன. இதனால் நாம் உபயோகிக்கும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை சுமார் ரூபாய்.850-ஐ தொடும். அதாவது இரட்டிப்பு விலையாகி விடும்.

இந்த சூழ்நிலையில் வீட்டில் நாமே கேஸை உற்பத்தி செய்வது நல்லது என்பதால் நீங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு. சமையலறை கழிவிலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்ய பயன்படும் சாதனத்தின் பெயர் " பயோ கேஸ் சிஸ்டம்(ANAEROBIC DIGESTER SYSTEM)" ஆகும். மேழே உள்ள படத்தை பாருங்கள்.

இன்வெர்ட்டர் Vs சோலார் பவர் சிஸ்டம் / காற்றாலை மின்சாரம்

மின்வாரியத்தால் வினியோகிக்கப்படும் மின்சாரத்திற்கு மானிய விலையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் குறைந்த செலவில் அனல் மின் நிலையம், ஹைட்ரோ பவர் மின் நிலையம் இவற்றின் மூலமே மின் உற்பத்தி செய்யமுடியும். தமிழகத்தின் மின் தேவையில் 60%-65% மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், சென்னையில் 2 மணி நேரமும் இதர பகுதிகளில் சுமார் 6 மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இந்த மின்வெட்டை சமாளிக்கத்தான் எல்லோரும் சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவற்றை பற்றி யோசிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

சோலார் டி.சி (DC) பவர் சிஸ்டம் - 1

பொதுவாக சோலார் பவர் சிஸ்டத்தை இரண்டு வகையாகபிரிக்கலாம்.

1. சோலார் பேனல்களிலிருந்து பெறப்படும் டி.சி மின்சாரத்தை சார்ஜ் கண்ட்ரோலர் மூலம் ஒழுங்கு படுத்தி 12 வோல்ட் பாட்டரிகளில் சேமித்து அதை கொண்டு 12 வோல்ட் டி.சி மின்சாரத்தில் இயங்கக்கூடிய விளக்கு, பேன் போன்றவற்றை இயக்க பயன்படுத்துவது டி.சி பவர் சிஸ்டம் .

2. மேற்கூறியவாறு பாட்டரிகளில் சேமிக்கப்பட்ட டிசி மின்சாரத்தை இன்வெர்ட்டர் என்ற சாதனத்தின் மூலம் 230வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றி, நாம் உபயோகப்படுத்தும் மின் சாதனங்களை இயக்க பயன்படுத்துவது ஏசி பவர் சிஸ்டம்.

சோலார் சிஸ்டம் அமைத்தல் - உங்கள் சந்தேகமும் விளக்கமும்,

1. அரசு அங்கிகாரம் பெற்ற சப்ளையர்களின் பட்டியலுக்கான லிங் திறக்கவில்லை.

2. எந்த சப்ளையர் நம்பிக்கையானவர்? நியாயமான விலையில் அமைத்து கொடுக்கும் சப்ளையர் யார்?.

3. எனது தேவை இதுதான். இதற்கு எத்தனை வாட் சோலார் சிஸ்டம் தேவை?


இது போன்ற சந்தேகங்கள் உங்களுக்கு வரக்கூடாது. நீங்களே தேவையை கணக்கு பார்த்து நிர்ணயம் செய்து, சரியான சப்ளையரை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு நீங்கள் விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சோலார் மின்சாரம் பற்றிய பதிவு - பல பகுதிகளாக பதிவிடப்பட்டது.

சோலார் மின்சாரத்தின் அடக்க விலை..

சோலார் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் சாதனங்கள் (1) சோலார் பேனல்கள், (2) பேட்டரி, (3)சார்ஜ் கண்டிரோலர் + இன்வெர்ட்டர் அல்லது பவர் கண்டிஷ்னர்.

சோலார் பேனல்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும். எனவே இந்த சிஸ்டத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் என வைத்துக்கொள்ள வேண்டும்.

Do-It-Yourself. 1KW-24V Solar Power System Part.3

இப்பொழுது நீங்கள், நான்கு பேனல்களையும் மொட்டைமாடியிலேயே, பேனலின் பின் பக்கத்திலேயே பேரலெல் இணைப்பை செய்துவிடலாமா? அல்லது தனித்தனியாக ஒவ்வொரு பேனலின் இணைப்பையும் இன்வெர்ட்டர் வைத்திருக்கும் அறைக்கு கொண்டு வரலாமா? என தெளிவான ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

Do-It-Yourself.1KW-24V Solar Power System.Part.2

முந்தைய பதிவில் குறிப்பிட்ட மாதிரி நீங்கள் சோலார் ஆரே அமைப்பதற்கான இரும்பிலான அமைப்பை (Structure) உருவாக்கி விட்டீர்கள். இதை மேல் பக்க பிரேம் தனியாகவும், கால்கள தனியாகவும் செய்து. பிரேமுடன் கால்களை போல்ட் நட்டு போட்டு பிக்ஸ் செய்யும் வகையில் அமைப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் மொட்டை மாடிக்கு எடுத்து செல்ல வசதியாக இருக்கும். அங்கு அதை அசெம்பிள் செய்து கொள்ளலாம்.

Do-It-Yourself.1KW-24V Solar Power System. Part.1

வெளி நாடுகளில் அநேகமாக எல்லா சாதனங்களையும் ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல் தானாக செய்து பார்க்கும் வகையில் தெளிவான விளக்கப்படங்களுடன் Do-It-Yourself என்ற ரக புத்தகங்கள் கிடைக்கின்றன. அதற்கு தேவையான பொருட்களும் தொகுப்பு (Kit Form) வடிவில் கிடைக்கின்றன. நம் நாட்டின் சாபக்கேடு, இவை எதுவுமே இங்கு கிடைப்பதில்லை.

சோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு - ஒரு ஒப்பீடு

தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, சோலார் சிஸ்டம் அமைத்து தரும் கம்பெனிகளின் ரேட்டை ஒப்பிட்டு ஒரு பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். அடுத்த பதிவில் இந்த 1KW சிஸ்டத்தை நீங்கள் அமைப்பது எப்படி என்பதை Do-It-Your self என்ற ரக பதிவை பதிவிடுகிறேன்.

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி.10

இதுவரை பதிவிட்ட 9 பகுதிகளை படித்ததின் மூலம், சோலார் மின்சாரம் என்றால் என்ன? அது எப்படி நமக்கு தேவைப்படும் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றப்படுகிறது, அதற்கு என்னென்ன உபகரணங்கள் தேவை, அவற்றின் வேலை என்ன என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இறுதியாக சில விஷயங்கள்.

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9

 மத்திய அரசின் MNRE -ன் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் முகவரியை தெரிந்து கொள்ள கீழே லிங்க் கொடுத்துள்ளேன். இது பி.டி.எஃப் பைல்.இதிலிருந்து உங்கள் ஊரில் அல்லது அருகாமையில் உள்ள டீலர்களை அணுக உங்களுக்கு வசதியாக இருக்கும். இந்த லிங்க்-கை கிளிக் செய்யவும்

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8

மத்திய அரசு "Ministry of Renewable Energy - (MNRE)" அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது.நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் National Bank for Agricultural and Rural Development - NABARD" மூலமாகவும், மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. அது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7

 கிரிட்-டை சோலார் சிஸ்டம் (Grid-Tie Solar Power System)
கிரிட்-டை என்றால் மின்வாரிய இணைப்புடன் இணைக்கப்பட்டது என பொருள். அதாவது நாம் சோலார் சிஸ்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நம் தேவைக்கு அதிகமாக இருந்தால், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்கவும், குறைவாக இருந்தால் குறைவாக இருந்தால் அதை மின்வாரியத்திடமிருந்து பெறும் வகையில் அமைக்கப்படுவதே கிரிட்-டை சிஸ்டம் ஆகும். உதாரணத்திற்கு நாம் நாள் ஒன்றுக்கு 15 யூனிட் (15,000W) மின்சாரத்தை சோலார் மூலம் உற்பத்தி செய்வதாக வைத்துக்கொள்வோம்

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 6

முந்தைய பதிவில் இறுதியாக பேட்டரி பேங்க் பற்றி விளக்கியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சில விபரங்களை பார்ப்போம்.

பாட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும் டி.சி கரண்ட்(ஆம்பியர்) -ஐ ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த முடியாது. பேட்டரி கரண்டில் 50% தான் பயன் படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் பேட்டரி டிஸ்சார்ஜ் லெவலுக்கு கீழே போய்விடும். இதனால் பாட்டரியின் வாழ்நாள் குறைந்து விடும். எனவே இன்வெர்ட்டர் தானாகவே அந்த லெவலுக்கு கீழே போனால் மின் இணைப்பை துண்டித்து விடும்.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 5.

முந்தைய பதிவில் சோலர்ர் பேனல்களை கொண்டு 12V/24V மின் அழுத்தம் கொண்ட 1KWh (1000 வாட்ஸ்) Solar Array-ஐ அமைக்கும் விதத்தை கூறியுள்ளேன். இனி அடுத்த நிலையாகிய சோலார் ஆரே மூலம் கிடைக்கும் மின்சாரத்தை ஒழுங்கு படுத்துவது (Regulate) பற்றி இனி பார்க்கலாம்.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி 4.

முந்தைய பதிவில் நாம் அமைத்திருக்கும் சோலார் பேனல் அமைப்பு (array) நாள் ஒன்றுக்கு சுமார் 5000 வாட்ஸ் அல்லது 5 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என பார்த்தோம்.

பூமியின் சுழ்ற்சி, சூரியனின் சுழற்சி இவற்றின் அடிப்படையில் பூமியில் ஒவ்வொரு பகுதி அல்லது ஊரிலும் சூரியனுடைய ஒளி கதிர்கள், வெவ்வேறு கோணத்தில் , வெவ்வேறு கால (duration) அளவில் இருக்கும். ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒவ்வொரு மாதமும் விழும் சூரிய ஒளியின் மூலம் தினசரி உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தை கணக்கிட முடியும். இது நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறுபடும். தமிழ் நாட்டில் முக்கியமான ஊர்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக கிடைக்க கூடிய மின்சாரத்தின் அளவை காட்டும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.3

டி.சி. கரண்ட் (DIRECT CURRENT) - ஏஸி கரண்ட் (ALTERNATIVE CURRENT)
டி.சி கரண்ட் என்பது பாட்டரி மற்றும் சோலார் செல், கம்யூடேட்டர் டைப் டைனமோ ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். டிசி மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அதிக அளவு இழப்பு ஏற்படும். எனவே டி.சி மின்சாரம் இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலைகளுக்கு உகந்தது அல்ல.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.2

மின்சார தேவையை கணக்கிடல்
இனி நமக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் மின்சாரம் எவ்வளவு என்பதை கணக்கிட வேண்டும். ஒவ்வொரு சாதனமும் எவ்வளவு மின்சாரத்தை உபயோகப்படுத்தும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

சூரிய ஒளி மின்சாரம் - பகுதி.1

பூமியின் வெப்ப நிலை மாறுபட்டு வருவதால் பருவ மழை இப்பொழுது பொய்த்து வருகிறது. அதனால் நீர் தேக்கங்கள் மூலமாக தண்ணீரின் விசையை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் (Hydro Power Plant) மின் உற்பத்தி குறைந்து வருகிறது.

சூரிய ஒளி மின்சாரம் (SOLAR POWER) - ஒரு விளக்கமான பாடம்

எந்த விஷயமாக இருந்தாலும் அமெரிக்காவை பார், ஜப்பானை பார் என இண்டர்நெட்டில் தகவலை தேடியெடுத்து பதிவு போடுவதே நமக்கு தொழிலாகிவிட்டது. அந்த நாட்டு மக்களின் வாழ்க்கை தரம், நம் நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் இவற்றை ஒப்பிட்டு பார்த்து அதன் பின்பே அது ஒத்து வருமா வராதா என முடிவெடுக்க வேண்டும்.

பவர் டிரான்ஸ்பார்மர்

Power Transformer
200 KVA க்கு மேற்பட்ட இவ்வகை டிரான்ஸ்பார்மார்கள் மின் உற்பத்தி நிலையங்களில் மற்றும் துணை மின் நிலையங்களில் டிரான்ஸ்மிசன் லைனின் வோல்டேஜ்-ஐ ஸ்டெப் அப் அல்லது ஸ்டெப் டவுன் செய்யப்பயன்படுகிறது. இவை லோடு நேரத்தில் இணைப்பிலும், லோடு இல்லாத போது இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும். இத்தகைய டிரான்ஸ்பார்மர் புல் லோடுகளில் வேலை செய்யும் போது அதிகபட்ச எபிசென்சி கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய டிரான்ஸ்பார்மரில் வோல்டேஜ் ரெகுலேசன் முக்கியத்துவம் வாய்த்ததாக இருக்காது.

டிஸ்ட்ரிபூசன் டிரான்ஸ்பார்மர்


Distribution Transformer
டிரான்ஸ்மிசன் லைனில் இருந்து வரக்கூடிய அதிகமான வோல்டேஜ்-ஐ நாம் பயன்படுத்தக் கூடிய ஸ்டேன்டர்டு வோல்டேஜ் அளவுகளாக அதாவது 1 பேஸ் 230 V, 3 பேஸ் 440 V அளவுக்கு குறைத்து தரக்கூடியதற்கு டிஸ்ட்ரிபூசன் டிரான்ஸ்பார்மர் என்று பெயர்.

ஸ்டெப் அப் மற்றும் ஸ்டெப் டவுன் டிரான்ஸ்பார்மர்

ஸ்டெப் அப் டிரான்ஸ்பார்மர் (Step Up Transformer)
இவ்வகை டிரான்ஸ்பார்மரில் பிரைமரி வைண்டிங்-ல் கொடுக்கப்படும் வோல்டேஜ்-ஐ காட்டிலும், செகண்டரி வைண்டிங்-ல் தூண்டப்படும் வோல்டேஜ் அளவு அதிகமாக இருக்கும். இவை ஜெனரேட்டிங் ஸ்டேசனிலிருந்து வோல்டேஜ்-ஐ டிரான்ஸ்மிசன் செய்ய பயன்படுகிறது.

டிரான்ஸ்பார்மரின் வேலை

Construction
இதில் லேமினேட் செய்யப்பட்ட சிலிக்கான் ஸ்டீல் தகடுகள் கோராக அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய தகடுகளின் தடிமன் அளவு 0.35 முதல் 0.5 மி.மீ வரை இருக்கும். இந்த கோரின் இரு புறத்திலும், இரண்டு வைண்டிங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் வோல்டேஜ் உள்ளே செலுத்தப்படும் வைண்டிங்கிற்கு பிரைமரி வைண்டிங் என்றும், வோல்டேஜ் வெளியே பெறப்படும் மற்றொரு வைண்டிங்கிற்கு செகண்டரி வைண்டிங் என்றும் பெயர்.

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஹை ரேட் டிஸ்சார்ஜ் செல் டெஸ்டர் - High Rate Discharge Cell Tester

முழு லோடு கொடுக்கப்படும் நிலையில் பேட்டரியின் டெர்மினல் வோல்டேஜ் எவ்வளவு இருக்கும் என்பதை அளவிட இந்த செல் டெஸ்டர் பயன்படுகிறது.இந்த டெஸ்டரின் முனைகளில் ஒரு லோ ரெசிஸ்டன்ஸ்-வும், ஒரு வோல்ட் மீட்டரும் பொருத்தப்பட்டிருக்கும். டெஸ்டரில் உள்ள மீட்டர் டயலில் 0-3 V அல்லது டிஸ் சார்ஜ், ஆப் சார்ஜ், புல் சார்ஜ் (சிவப்பு, மஞ்சள், பச்சை கலர்கள்) என அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். டெஸ்டரின் இரு முனைகளை பேட்டரியின் இரு முனைகள் மீது வைக்கும் பொது லோ ரெசிஸ்டன்ஸ் வழியாக மிக அதிக மின்னோட்டம் பாயும். இந்நிலையில் பேட்டரியின் டெர்மினல் வோல்டேஜ்-ஐ வோல்ட் மீட்டர் காட்டும். இந் நிலையில் முழு சார்ஜ் பேட்டரியின் வோல்டேஜ் 2 V ஆக இருக்க வேண்டும். இந்த டெஸ்டரை பேட்டரியின் முனைகள் மீது அதிக நேரம் வைத்து டெஸ்ட் செய்தால் பேட்டரி சீக்கிரமே டிஸ்சார்ஜ் ஆகி விடும்.

எர்த்திங் - Earthing

பூமியிலிருந்து 2.5 மீ ஆழத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரோடிலிருந்து கன்டக்டர் வெளியில் எடுக்கப்படும் அமைப்பிற்கு எர்த்திங் என்று பெயர். இதன் மின்னழுத்தம் பூஜ்யமாக இருக்கும்.

எர்த்திங் செய்வதன் அவசியம் (Necessity of Earthing)
மின் பழுது ஏற்பட்டுள்ள இயந்திரங்களையும் மற்றும் கருவிகளையும் தொட நேரிடும் போது ஏற்படும் எலக்ட்ரிக் ஷாக் அல்லது மரணம் இவற்றிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றவும்.

எர்த்திங்கான விதிமுறைகள்

மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செயுங்கள். ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்)-ஐ பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.

டபுள் எர்த்திங் - Double Earthing

 ஒன்றுக்கொன்று 15 மீட்டர் இடைவெளிக்கு குறையாமல் இரண்டு எர்த்கள் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு எர்த் ஒயர் கொண்டு இயந்திரங்கள் எர்த் செய்யப்படும்போது ஒரு எர்த் துண்டிக்கப்பட்டிருந்தாலும் மற்றொரு எர்த் மூலம் இயந்திரம் பாதுகாக்கப்படுகிறது.இரண்டு எர்த்கள் பேரலல்-ஆக இணைக்கப்பகும்போது மொத்த எர்த் ரெசிஸ்டன்ஸ் அளவு பாதியாக குறையும்.

எர்த் ரெசிஸ்டன்ஸ்-ஐ குறைக்கும் முறைகள்

Methods of Reducing Earth Resistance

நீர் ஊற்றுவதன் மூலம் (By Pouring Water)
கோடை காலத்தில் எர்த் எலக்ட்ரோட்டை சுற்றி ஈரப்பதம் இல்லாமல் மிகவும் வறண்டு காணப்படுவதால் ரெசிஸ்டன்ஸ் அதிகரிக்கிறது. எனவே உப்பு கலந்த நீரை புனல் வழியாக குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஊற்றி வருவதன் மூலம் எர்த் ரெசிஸ்டன்ஸ் அளவை குறைக்க முடியும். இம்முறையில் ஒரு குறிப்பிட்ட அளவே ரேசிஸ்டன்ஸ்-ஐ குறைக்க முடியும்.

பாலி பேஸ்-சிங்கிள் பேஸ்

பாலி பேஸ்
3 பேஸ்லிருந்து 1 பேஸ் சப்ளை பெறலாம். சீரான டார்க்கை பெறலாம். இதில் செயல்படும் இயந்திரங்களின் எபிசென்சி, பவர்பேக்டர் அதிகம். மோட்டார் செல்ப் ஸ்டாட் ஆகும். மோட்டாரில் பழுதுபார்ப்பது எளிது. அதிக H.P மோட்டார்கள் தயாரிக்கப் படுகின்றன. குறிப்பிட்ட 3 பேஸ் பவரை டிரான்ஸ்மிசன் செய்ய தேவையானகன்டக்டர் மற்றும் மெட்டலின் அளவு குறைவு. பவர் பூஜ்யமாக வாய்ப்பில்லை.

டிரான்ஸ்பார்மர்

Introduction
மின் உற்பத்தி நிலையங்களுக்கும், உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தக் கூடிய இடங்களுக்கும் இடையில் உள்ள தூரம் பொதுவாக அதிகமாக இருக்கும். உற்பத்தி செய்யப்படும் குறைந்த அளவிலான மின்னழுத்தத்தை ( 13.8 முதல் 28 KV ) அங்கிருந்து அப்படியே டிரான்ஸ்மிசன் செய்தால், மின் ஆற்றல் பயன்படுத்தப்படும் இடத்திற்கு வருவதற்குள் பெரிய அளவில் வோல்டேஜ் டிராப்-ம் அதனால் பவர் லாஸ்-ம்ஏற்படும்.

ஹைட்ரோமீட்டர் - Hydrometer

இதன் மூலம் எலக்ட்ரோலைட்டின் ஸ்பெசிபிக் கிராவிட்டியை அறியலாம். படத்தில் காட்டியபடி நீண்ட கண்ணாடி குழாயின் ஒரு முனையில் ரப்பர் பல்பும் மற்றொரு முனையில் ரப்பர் நாசிலும் (Nazzle) இணைக்கப்பட்டிருக்கும். ஹைட்ரோமீட்டரின் அடிபாகத்தில் சிறிய லெட் உருண்டைகள் செல்லாக்கின் உதவியுடன் அமைக்கப்பட்டும், மேல்பகுதியில் அளவுகள் குறிக்கப்பட்ட அல்லது கலர் கோடுகளுடன் கூடிய தால் உள்ளே ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஹைட்ரோமீட்டர் எலக்ட்ரோலைட்டில் மிதக்கும்படி பெரிய கண்ணாடி குழாயின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். ரப்பர் பல்பு உதவியால் பெரிய குழாயில் எலக்ட்ரோலைட் ஆனது உறிஞ்சப்படுகிறது. அதன் அடர்த்தியைப் பொறுத்து உள் அமைக்கப்பட்ட ஹைட்ரோமீட்டர் மிதக்கும் அளவு மாறுபடுகிறது. கண்ணாடி குழாயில் உள்ள எலக்ட்ரோலைட்டில் ஹைட்ரோமீட்டர் எந்த அளவில் மிதக்கிறதோ அதுவே எலக்ட்ரோலைட்டின் ஸ்பெசிபிக் கிராவிட்டி ஆகும். இதில் அளவுகள் 1180 முதல் 1300 வரை குறிக்கப்பட்டிருக்கும் அல்லது கலர் கோடில் சிவப்பு (டெட்), மஞ்சள் (அப் சார்ஜ்), பச்சை (புல் சார்ஜ்) என கலரில் குறிக்கப்பட்டிருக்கும்.

ப்பெரூல் கான்டாக்ட் கேட்ரிஜ் பியூஸ்

Ferrule Contact Cartridge 

இவை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் சர்க்யூட்களில் பயன் படுத்தப்படுகிறது. 25mA முதல் 32A வரை பல அளவுகளில் கிடைக்கிறது. இதன் பாடி ஆனது கிளாஸ்-ஆல் சிலிண்டர் வடிவில் செய்யபட்டிருக்கும். கிளாஸ் டியூப்-ன் இருபுறமும் மெட்டல் கேப் அமைக்கப்பட்டு அவற்றிற்கு இடையே பியூஸ் எலமெண்ட் பொருத்தப்பட்டிருக்கும். இது இதற்கென அமைக்கப்பட்ட பியூஸ் சாக்கெட்டிலோ அல்லது பியூஸ் யூனிட்டிலோ பொருத்தப்படும்.

கிட் - கேட் பியூஸ் - Kit-Kat Fuse

இந்த பியூஸ் யூனிட் ஆனது கேரியர் (Carrier) மற்றும் பேஸ் (Base) என இரு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டும் போர்சிலினால் செய்யப்பட்டு அதில் காண்டக்ட் முனைகள் அமைக்கப்பட்டிருக்கும். பியூஸ் பேஸ் கான்டக்ட்வுடன் சப்ளைபேஸ்-யின், இன்புட் மற்றும் அவுட்புட் லைன்கள் இணைக்கப் பட்டிருக்கும். பியூஸ் கேரியரில் பியூஸ் ஒயர் பொருத்தப்பட்டு, பியூஸ் பேஸ்-சில் (Base) அமைக்கப்படுகிறது.

   இதன் பியூஸ் ஒயர் உருகிவிட்டாள் எளிதில் பியூஸ் ஒயரை மாற்றி கொள்ள முடியுமாததால் ரீ ஓயரபில் டைப் பியூஸ் (Rewirable Type Fuse) எனவும் அழைக்கப்படும்.

கன்டக்டர், இன்சுலேட்டர்

கன்டக்டர் (CONDUCTOR)
மின்னோட்டம் பாய்வதற்கு ஏற்ப மிக குறைந்த மின்தடை கொண்ட பொருள் மின் கடத்தி அல்லது கன்டக்டர் எனப்படும். பெரும்பாலும் அனைத்து உலோகங்களும் ஒரு நல்ல மின் கடத்தியாகும்.

எலக்ட்ரிக் சாக்

ஆல்டர்னேட்டர், டிரான்ஸ்பார்மர் இவைகளின் நியூட்ரல் ஆனது எர்த்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மனித உடல் ஒரு மின் கடத்தியாதலால், மின்சாரத்துடன் நம் உடம்பு தொடர்பு கொள்ள நேரிடும்போது, நம் வழியாக மின்னோட்டம் எர்த்தை அடைகிறது. நம் உடலில் மின்தடை அளவு குறைவாக இருப்பதால் மின்னோட்டம் பாய்கிறது. இதன் காரணமாக நமது இதயம், நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது.

மின்னோட்ட அளவைப் பொறுத்து காயங்களோ, இதய செயல்பாடு நிருத்தம் அடைவதோ அல்லது உடனடி மரணமோ ஏற்படலாம்.

பொதுவாக நமது உடலின் மின்தடை அளவு ஈரமாக இருக்கும்போது 1000Ω எனவும், ஈரமில்லாதபோது 80000Ω எனவும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உடல்நிலையைப் பொறுத்து சிறிது மாறுபடலாம்.

மின் உபகரணங்களை பழுது பார்க்கும்போது

அவற்றின் இயங்கு முறை பற்றி தெளிவாக தெரிந்திருத்தல் வேண்டும். பழுதடைந்த ஒயர், பிளக், சுவிட்ச் போன்றவைகள் நீக்கப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும். சப்ளையுடன் இயந்திரத்திற்குரிய தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர்தான் வேலையைத் துவக்க வேண்டும். பிளக் ஒயர்களை பிடித்து இழுக்கக் கூடாது. வேலை முடிந்த பின் எர்த் சரியாக இணைக்கப்பட்டுள்ளத என சரிபார்க்க வேண்டும்.

மின்சார சிக்கனம்

இல்லம் மற்றும் வணிகம்
தேவை உள்ள இடங்களில் தேவையான நேரங்களில் மட்டும் மின்சாரத்தை உபயோகிப்பீர். தரகுள்ள மின் சாதனங்களை உபயோகிப்பீர். பழுதடைந்த மின் சாதனங்களை உடனுக்குடன் சரி செய்வீர். குளிர் சாதன பெட்டியை அடிக்கடி திறப்பதை தவிர்ப்பீர். குழல் விளக்குகளுக்கு எலக்ட்ரானிக் சோக் உபயோகிப்பீர். சாதாரண துழல் விளக்குகளுக்குப் பதிலாக கையடக்க குழல் விளக்குகளை உபயோகிக்கவும். தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஸ்டெபிலைசர் உபயோகிக்கவும். வீட்டின் உள்புறம் வர்ணம் பூசும்போது மிதமான (Light Colour) வண்ணம் உபயோகியுங்கள்.

தொழிற்சாலையில விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்

தொழிற்சாலையில் புகை பிடிப்பதை தவிர்க்கவும், அஜாக்கிரதையாக வீசப்பட்ட புகை வஸ்து ஆபத்தான தீ விபத்தினை உண்டாக்கும். எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் எரிபொருட்களை கொண்டு இயக்கப்படுகின்ற பெட்ரோல் இஞ்சின், டீசல் இஞ்சின் போன்றவைகளின் அருகில் சிகரெட், தீப்பெட்டி, மண்ணெண்ணெய் விளக்கு போன்றவைகளை கொண்டு செல்லக்ககூடாது. உடைந்த மின் சுவிட்சிகளை தொடாதீர், உடனே மாற்ற ஏற்பாடு செய்யவும். மின்சாதனங்களிலோ, மின்சாரம் செல்லும் ஓயார்களிலோ தீப்பிடித்துக் கொண்டால் அந்த தீ விபதிதால் ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்செதத்தை தவிர்க்க உடனடியாக Main Switch-யை off செய்ய வேண்டும். எனவே Main Switch-கள் இருக்கின்ற இடத்தை ஒவ்வொரு தொழிலாளர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

எரிசக்தி சேமிப்பு வழிமுறைகள்

தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின் சேமிப்பில் சிறந்த வழி. குளிர்பதன பெட்டியினை, சுவற்றில் இருந்து 30 செ.மீ தள்ளியும் வெப்பத்தை வெளியிடும் கருவிகளுக்கு அருகாமையில் இல்லாதவாறும் பொருத்தப்பட வேண்டும். கோடை வெப்பத்திலிருந்து விடுபட முதலில் உட்கூரை மின் விசிறி (சீலிங் பேன்) அல்லது மேசை விசிறியினைப் (டேபிள் பேன்) பயன்படுத்தலாம். உட்கூரை மின் விசிறிகளைப் பயன் படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு முப்பது பைசாக்கள் செலவாகும்.

மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செயுங்கள். ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்)-ஐ பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

இன்வெர்ட்டர் வாங்க போறீங்களா இதோ சில டிப்ஸ்!!!

தமிழகத்தில் தற்போது எந்த வியாபாரம் நன்றாக நடக்கிறதோ இல்லையோ இன்வெர்ட்டர் வியாபாரம் தூள் கிளப்புகிறது.மின் தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர்களை விற்கும் நிறுவனங்களும்,வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம், ஒரு மாதத்தில் 15இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது.இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து என்பதை பார்போம்.

மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்

இன்றைய உலகில் கைபேசியில் தொடங்கி கணனி என்று நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறது இதனால் ஏகத்துக்கும் செலவாகும் மின்சாரத்தால் மாசக்கடைசியில் நமது கழுத்தை நெறிக்கிறது மின்சார பில். எனவே மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம்.

சிங்கிள் பேஸ் எனர்ஜி மீட்டர்

இது ஒரு இண்டகிரேட்டிங் டைப் இன்ஸ்ட்ருமென்ட் ஆகும். இந்த வகை இன்ஸ்ட்ருமென்டில் டிரைவிங், பிரேக்கிங், ரெக்கார்டிங் டிவைஸ்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

மின் திறனையும், அது பயன்படுத்தப்படும் காலத்தையும் பெருக்கினால் கிடைப்பது மின் ஆற்றல் ஆகும். இதனை அளக்க எனர்ஜி மீட்டர் பயன் படுகிறது. இது எலக்ட்ரோ மேக்னட்டிக் இன்டக்சன் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

சீரிஸ் மேக்னட் (Series Magnet)
ஒர் அயன்கோரில் தடித்த ஒயரால் சில சுற்றுகள் கொண்ட காயிலாக சுற்றப்பட்டு லோடுக்கு சீரிஸ் ஆக இணைக்கப்பட்டுள்ளது.

ஒயரிங் சிஸ்டத்தில் ஏற்படும் குறைபாடுகள் - General Defects in Wiring System


லீக்கேஜ் (Leakage)

பேஸ் ஒயரிலிருந்து நியூட்ரல் ஒயருக்கோ, எர்த் கன்டக்டருக்கோ அல்லது அருகில் உள்ள மெட்டலுக்கோ மின் கசிவு ஏற்படுவதையே லீக்கேஜ் கரண்ட் எனக் குறிப்பிடுகிறோம்.

கொடுக்கப்படும் வோல்டேஜ்-யை தாங்கும் அளவிற்கு கன்டக்டரின் மேலுள்ள இன்சுலேஷன் இல்லாதிருத்தல்.

ஒயரிங் செய்வதற்கான விதிமுறைகள் - Rules for Wiring

ஏசி மற்றும் டிசி சர்க்யூட்கள் தனித்தனியாக ஒயரிங் செய்யப்பட வேண்டும். டிசி சர்க்யூட்டில் +ve ஆனது சிவப்பு நிறத்திலும், -ve ஆனது கருப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட வேண்டும்.

ஏசி-யில் மூன்று பேஸ்கள் தலா சிவப்பு, மஞ்சள், நீளம் நிறத்திலும், நியூட்ரல் கருப்பு  நிறத்திலும்,  எர்த் பச்சை மற்றும் மஞ்சள் (கிரீனிஸ்-எல்லோ) நிறத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

செலக்சன் ஆப் ஒயரிங்

ஒரு குறிப்பிட்ட வகை ஒயாரிங்கை தேர்ந்தெடுக்கும் முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒயரிங் செய்து முடிக்க ஆகும் செலவு.

ஒயரிங் செய்யக்கூடிய இடத்தின் தட்பவெப்ப நிலை.

தேவைப்படும் மெக்கானிக்கல் ஸ்ட்ரென்த்.

தீப்பிடிக்க கூடிய வாய்ப்புகள்.

செய்து முடிக்கப்பட்ட பின் கிடைக்க வேண்டிய தோற்ற அமைப்பு.

எதிர்காலத்தில் ஏதேனும் புதிய சப்-சர்க்யூட்கள் அமைப்பதற்கான வழி வகை.

பழுதை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அமைப்பு.

ஒயரிங் சிஸ்டம்

சப்ளையை மெயினிலிருந்து பல பகுதிகளுக்கும் பின்வரும் மூன்று முறைகளில் கொண்டு செல்லலாம்.

Tree System Ring Main System Distribution Board System

ட்ரி சிஸ்டம் (Tree System)
மெயின் சர்க்யூட்டில் இருந்து நமக்கு தேவைப்படகூடிய இடத்தில் டேப்பிங் எடுத்து சப்-சர்க்யூட்கள் அமைக்கும் முறையாகும்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சோலார்

ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.

CFL-ஆ, டியூப் லைட்டா?!

CFL-தான் சிறந்தது என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், ஹாலிலோ அல்லது பெரிய அறைகளிலோ CFL பல்புக்களை மாட்டினால் தூங்கி வழிகிறது! என்னதான் 20W அல்லது 30W CFL வாங்கிப் போட்டாலும், ஒரு சாதாரண டியூப் லைட்டின் வெளிச்சத்தை அடித்துக்கொள்ள முடியாது! 9W CFL பல்ப்பின் வெளிச்சம், 40W குண்டு பல்ப்பின் வெளிச்சத்துக்கு  ஒப்பானது என்று வாங்கும்போது  நமக்கு பல்பு கொடுக்கிறார்கள்! :D ஆனால், அதுவோ ஒப்புக்குத்தான் வெளிச்சம் தருகிறது. பால்கனி, சிறிய அறை, குளியலறை, கழிவறை இவற்றிற்கு மட்டும்தான் இவை உகந்தது என்று நினைக்கிறேன்! 5W மஞ்சள் நிற CFL-ஐ படுக்கையறையில் போட்டால், அந்த மந்த வெளிச்சத்தில் உடனே தூக்கம் வந்து விடுகிறது!

சனி, 10 ஆகஸ்ட், 2013

ப்ளோரசண்ட் லேம்ப்

இத்தகைய லேம்ப் ஹாட் கேத்தொடு டைப் ஆகும். இவை குறைந்த அழுத்த வகையாக இருப்பதால் நீண்ட கண்ணாடி குழாய் வடிவத்தில் அமைக்கப்பட்டு குழாயின் உட் புறத்தில் புளோரசண்ட் பவுடர் பூசப்பட்டு அதனுள் பதரசமும் சிறிதளவு ஆர்கான் வாயுவும் அடைக்கப்பட்டிருக்கும். சப்ளை கிடைத்தவுடன் துவக்கத்தில் பாதரசம் திரவ நிலையில் இருப்பதால் ஆர்கான் வாயு மூலம் கன்டக்சன் நடைபெறுகிறது. இந்த நீண்ட கண்ணாடி குழாயின் இரு புறத்தில் இரு டங்ஸ்டன் பிளமெண்ட்கள் உள்ளன. டங்ஸ்டன் வெப்பப்படுத்தும் போது அதிக அளவில் எலக்ட்ரான்களை வெளியிடுவதற்காக அதன் மீது பேரியம் ஆக்ஸைடு பூசப்பட்டிருக்கும். டியூப்லைட் ஒளிர துவக்கத்தில் சுமார் 1000 வோல்ட்டும். எரியத் துவங்கிய பின் ஆப்ரேட்டிங் வோல்டேஜ் 110 V கொடுக்க ஒரு சோக் காயிலும், குளோ டைப் ஸ்டாட்டர் ஒன்றும் சீரிஸ்-ஆக இணைக்கப்பட்டிருக்கும்.

வீட்டு வயரிங் - பகுதி.11

2-வே சுவிட்ச் இணைப்பை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக வீடுகளில் படுக்கை அறை, வராண்டா, மாடிப்படி ஆகிய இடங்களில் உள்ள விளக்குகளுக்கு 2-வே சுவிட்ச் பயன்படுத்தப்படும். படுக்கை அறையை பொறுத்தவரை மின் விசிறிக்கும் பயன்படுத்தப்படும்.

உதாரணத்திற்கு வராண்டா விளக்கு இணைப்பை எடுத்துக்கொள்ளலாம். இந்த சர்கியூட்டிற்கு 2-வே (Two Way) சுவிட்ச் இணைப்பு எப்படி கொடுக்கப்படுகிறது, அது எப்படி செயல்படுகிறது, அதன் உபயோகம் இவற்றை பார்க்கலாம்.

வீட்டு வயரிங் - பகுதி.10

மின் பழுதுகளை பற்றியும் அவற்றை நீக்குவது பற்றியும் இனி பார்க்கலாம். பொதுவாக பழுதுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை 1).ஷார்ட் சர்க்கியூட் (Short Circuit), 2). லூஸ் காண்டாக்ட் (Loose Contact), 3).மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகள்.

வீட்டு வயரிங் - பகுதி.9


முந்தைய பதிவுகளில் பீங்கானால் செய்யப்பட்ட பியூஸ் யூனிட்களை சப்ளையின் மெயின் பியூஸ் யூனிட்டாகவும், செக்சன் பியூஸ் யூனிட்டாகவும் பயன்படுத்தப்படுவதை பற்றி பார்த்தோம். தொழில் நுட்பம் வளர வளர, சாதனங்களில் மாற்றம் வருவது இயற்கையே. அதன்படி பீங்கானினால் ஆன பியூஸ் யூனிட்களுக்கு பதிலாக Miniature Circuit Breaker (MCB), Isolator, Earth Leakage Circuit Breaker (ELCB) / Residual Current Circuit Breaker(RCCB) என பல சாதனங்கள் இப்பொழுது கிடைக்கிறது. இவற்றின் செயல்பாடு, பயன்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

டியூப் லைட்

இந்த பதிவில், டியூப் லைட் எப்படி இயங்குகிறது என்பதையும் அதன் வயரிங் இணைப்பையும் இப்பொழுது பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் டியூப் லைட் பட்டி (பிட்டிங்ஸ்) காண்பிக்கப்பட்டுள்ளது. டியூப் லைட்டை மாட்டுவதற்கு இரு புறமும் ஹோல்டர்கள், ஒரு சோக், ஒரு ஸ்டார்ட்டர் ஃபேஸ், ஸ்டார்ட்டர் & டியூப் (படத்தில் காண்பிக்கப்படவில்லை) ஆகியவை உள்ளன.

வீட்டு வயரிங் - பகுதி.8

மூன்று அறைகள் கொண்ட வீட்டின் 3-பேஸ் மின் இணைப்பில், பேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சை எப்படி பொருத்துவது என்பதை பார்க்கலாம். முதலில் இந்த சுவிட்ச் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

வீட்டு வயரிங் - பகுதி.7

முந்தைய பதிவில் மூன்று அறைகள் கொண்ட வீட்டிற்கு சிங்கிள் பேஸ் மின் இணைப்பிற்கான வயரிங்கை எவ்விதம் மெயின் போர்டு அல்லது மீட்டர் போர்டில் செய்ய வேண்டும் என்பதை பார்த்தோம். இனி அதே வீட்டிற்கு 3-பேஸ் மின் இணைப்பிற்கு எவ்விதம் வயரிங் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கிள் பேஸ் இணைப்பில் வீட்டின் மூன்று அறைகளுக்கும்(சர்கியூட்) தனித்தனி பியூஸ் யூனிட் வழியாக லைன் சப்ளையை கொண்டு சென்றோம். 3-பேஸ் மின் இணைப்பில், ஒவ்வொரு பேஸ் சப்ளையையும் தனித்தனியாக ஒவ்வொரு அறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவுதான். கீழே உள்ள படத்தை பாருங்கள்

வீட்டு வயரிங் - பகுதி.6

இந்த தொடர் பதிவின் 5-வ்து பகுதியில், ஒரு அறையில் எவ்வாறு கன்சீல்டு வயரிங் செய்ய வேண்டும் என்பதை விவரித்துள்ளேன். இவ்வாறு மூன்று அறைகளிலும்(உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் இருந்தே மூன்று அறைகள் கொண்ட வீட்டையே குறிப்பிட்டுள்ளேன்) வயரிங் செய்யப்படும். ஒவ்வொரு அறையிலிருந்தும் சப்ளை வயர்கள் தனித்தனியாக, தனித்தனி பைப் மூலம் மெயின் போர்டு வைக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வரப்படும். சிலர் பைப் செலவை குறைக்க ஒரே பைப்பில் மூன்று அறைகளுக்கும் உரிய சப்ளை வயர்களை கொண்டு வருவார்கள். கீழே உள்ள படம் அதை காட்டுகிறது.