இந்த பதிவில், டியூப் லைட் எப்படி இயங்குகிறது என்பதையும் அதன் வயரிங் இணைப்பையும் இப்பொழுது பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் டியூப் லைட் பட்டி (பிட்டிங்ஸ்) காண்பிக்கப்பட்டுள்ளது. டியூப் லைட்டை மாட்டுவதற்கு இரு புறமும் ஹோல்டர்கள், ஒரு சோக், ஒரு ஸ்டார்ட்டர் ஃபேஸ், ஸ்டார்ட்டர் & டியூப் (படத்தில் காண்பிக்கப்படவில்லை) ஆகியவை உள்ளன.
இவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள படத்தில், முதல் படம் விளக்குகிறது.
230 வோல்ட் ஏ.சி மின் சப்ளையின் பேஸ் முனை, சோக் எனப்படும் மேக்னடிக் பாலஸ்ட்டின் ஒரு முனையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. சோக்கின் மறு முனை இடது பக்கம் (LEFT) உள்ள ஹோலடரின் ஒரு முனையில் இணைக்கப்பட்டுள்ளது. ஹோல்டரின் ம்றுமுனை ஸ்டார்ட்டர் பேஸ்-ன் ஒரு முனையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. ஸ்டார்ட்டர் பேஸ்-ன் மறுமுனை வலது பக்கமுள்ள (RIGHT) ஹோல்டரின் முதல் முனையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. ஹோல்டரின் இரண்டாவது முனை மின் சப்ளையின் நியூட்ரலுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இதில் டியூப்பையும், ஸ்டார்ட்டரையும் இணைத்தால் மின் சுற்று பூர்த்தியாகி விடும். மின் சப்ளையின் பேஸ், சோக்கின் முதல் முனைவழியா சோக்குக்கு சென்று மறு முனை வழியாக இடது பக்க டியூப் ஹோலடருக்கு சென்று டியூப்பின் பிலமெண்ட்க்கு செல்கிறது. பிலமெட்ட்டின் மறு முனை வழியாக வெளியே வந்து, ஹோல்டரின் இரண்டாம் முனை வழியாக ஸ்டார்ட்டர் பேஸ்-க்கு செல்கிறது. ஸ்டார்ட்டரினுள் இருக்கும் பல்பு வழியாக வலது பக்கமுள்ள ஹோல்டருக்கு சென்று, டியூப்பின் பிலமெண்ட் வழியாக நியூட்ரலை வந்து அடையும்.
டியூப் லைட் எரிய தேவையான சக்தி கிடைத்தவுடன் ஸ்டார்ட்டரினுள் இருக்கும் பல்பின் பிலமெண்ட் உஷ்ணமடைந்து தானாகவே இணப்பை துண்டித்துக்கொள்ளும். போதுமான சக்தி கிடைக்கும் வரை இந்த ஸ்டார்ட்டர் பல்பு பல முறை விட்டு விட்டு எரியும்.அப்பொழுது டியூப் லைட்டும் விட்டு விட்டு எரியும். சரியான அளவு மின்சக்தி கிடைத்தவுடன் டியூப் லைட் எரிய ஆரம்பிக்கும். அதே சமயம் ஸ்டார்ட்டர் பல்பு ஆஃப் ஆகிவிடும்.
ஸ்டார்ட்டர் பல்பு விட்டு விட்டு எரியும் தன்மையை இழந்து பிலமெண்ட் இணைப்பில்லாமல் போனால் டியூப்பில் சிமிட்டல் (Flicker) இருக்காது. டியூப் லைட் எரியாது. ஸ்டார்ட்டர் பல்பு விட்டு விட்டு எரியும் தன்மையை இழந்து நிரந்தரமாக பிலமெண்ட் இணைப்பு நிலையில் இருந்தால் டியூப் லைட் சுவிட்ச்சை ஆன் செய்தவுடன் சிமிட்டல் இல்லாமல் பல்பின் இரு முனையிலும் பழுப்பு நிறமாக வெளிச்சம் தெரியும். இது ஸ்டார்ட்டர் ரிப்பேர் என்பதற்கான் அறிகுறி. டியூப் லைட் எரியும் பொழுது ஸ்டார்ட்டரை கழட்டி விட்டாலும் லைட் எரியும். காரணம் டியூப் எரிய, ஆரம்பத்தில் மட்டுமே அது தேவை. அதனால்த்தான் அதன் பெயர் ஸ்டார்ட்டர் என வந்தது.
இரண்டாவது படத்தில் எலெக்ட்ரானிக்ஸ் சோக் இணைத்த டியூப் லைட் பிட்டிங்-ன் இணைப்பு காட்டப்பட்டுள்ளது. இதில் மேக்னடிக் சோக்குக்கு பதில் எலெக்ட்ரானிக்ஸ் சோக் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்டர் செய்யும் வேலையும் இந்த சோக்கே செய்வதால் ஸ்டார்ட்டர் தேவையில்லை.
இந்த சோக்கின் இடது கைப்பக்கம் இரு வயர்கள் இருக்கும் (சிகப்பு & கருப்பு). இவற்றை மின் சப்ளையின் பேஸ் வயரை சிகப்பு வயருடனும், கருப்பு வயரை நியூட்ரலுடனும் இனைக்க வேண்டும். சோக்கின் வலது பக்கத்தில் இரண்டு ஜோடி வயர்கள் வெளியே வந்திருக்கும். இவை தனித்தனி நிறங்களில் இருக்கும். அதாவது முதல் ஜோடி ஒரு நிறத்திலும் மற்றது வேறு நிறத்திலும் இருக்கும். ஒரு ஜோடி வயர் இடது பக்கமுள்ள ஹோல்டருடனும், அடுத்த ஜோடி வலது பக்கத்திலுள்ள ஹோல்டருடனும் இணைக்கப்பட்டிருக்கும். இணைப்பு அவ்வளவுதான்.
எலெக்ட்ரானிக்ஸ் சோக், லோ வோல்ட்டேஜ் மற்றும் ஹை வோல்ட்டேஜ் இவற்றில் இயங்கக்கூடியது. எனவே சுவிச்சை ஆன் செய்தவுடன் சாதாரண பல்பு எரிவதை போல உடனடியாக டியூப் லைட்டும் எரியும்.
அடுத்த பதிவில் சந்திப்போம்............

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக