சனி, 31 ஆகஸ்ட், 2013

EMF-யின் வகைகள்

Type of EMF
Dynamically Induced EMF Statically Induced EMF

டைனமிக்கலி இன்டியூசுடு EMF (Dynamically Induced EMF)
நிலையான காந்தப்புலத்தில் கடத்தி நகர்வதன் காரணமாகவோ, அல்லது சுழலும் காந்தபுலத்தில் கடத்தி நிலையாக இருப்பதன் காரணமாகவோ கடத்தியில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. இதற்கு டைனமிக்கலி இன்டியூசுடு EMF (இயக்கத்தால் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை) என்று பெயர்.


ஸ்டேட்டிகலி இன்டியூசுடு EMF (Statically Induced EMF)
மேக்னடிக் பீல்டு அளவு மாறுபாட்டால் ஒரு நிலையான கடத்தியில் தூண்டப்படும் EMF-க்கு ஸ்டேட்டிகலி இன்டியூசுடு EMF என்று பெயர். இது இரு வகைப்படும்.

Mutual Induction Self Induction

மீட்சுவல் இன்டக்சன் (Mutual Induction)
ஒன்றுகொன்று ஆருகில் அமைக்கப்பட்ட இரு காயில்களில் ஒன்றிற்கு மின்னோட்டம் கொடுக்கப்படும் போது, அதனை சுற்றி மாறுபடும் மேக்னடிக் பீல்டு உருவாகிறது. இந்த பீல்டானது அருகில் உள்ள இரண்டாவது காயிலை வெட்டுகிறது. இதனால் இரண்டாவது காயிலில் ஒரு EMF தூண்டப்படுகிறது. அதற்கு மீட்சுவல் இன்டக்சன் என்று பெயர்.

செல்ப் இன்டக்சன் (Self Induction)
ஒரு காயிலுக்கு ஏசி மின்னோட்டம் கொடுக்கப்படும்போது அதில் உருவாகும் காந்தப்புலத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இந்த மாறுபடும் காந்தப்புலத்தில் காயில் நிலையாக அமைந்துள்ளதால் அக்காயிலிலும் ஒரு EMF தூண்டப்படுகிறது. இந்த EMF செல்ப் இன்டியூசுடு EMF எனப்படும். இந்த பண்பிற்கு செல்ப் இன்டக்சன் என்று பெயர். இந்த EMF தான் உருவாகக் காரணமான மின்னழுத்தத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும்.

கருத்துகள் இல்லை: