புதன், 28 ஆகஸ்ட், 2013

எர்த்திங்கான விதிமுறைகள்

மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செயுங்கள். ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்)-ஐ பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.

சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமையுங்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் வீட்டின் ஓயரிங்குகளை சோதனை செய்து தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளுங்கள். கோவில் திருவிழா, திருமண விழா போன்ற நிகழ்சிகளின் போது தற்காலிக மின்சார அமைப்புகளை உரிமம் பெற்ற மின் ஒப்பந்தகாரர் மூலமாக மட்டுமே மிகவும் கவனமாக செய்யவும். குளியலறையிலும் கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் போருத்தாதீர்கள். மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டாதீர்கள். மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லாடீர்கள். உடன் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளியுங்கள். மேனிலை மின்சார கம்பிகளின் அருகில் குழந்தைகளை பட்டம் விட அனுமதிக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை: