சனி, 31 ஆகஸ்ட், 2013

Do-It-Yourself. 1KW-24V Solar Power System Part.3

இப்பொழுது நீங்கள், நான்கு பேனல்களையும் மொட்டைமாடியிலேயே, பேனலின் பின் பக்கத்திலேயே பேரலெல் இணைப்பை செய்துவிடலாமா? அல்லது தனித்தனியாக ஒவ்வொரு பேனலின் இணைப்பையும் இன்வெர்ட்டர் வைத்திருக்கும் அறைக்கு கொண்டு வரலாமா? என தெளிவான ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.



இவற்றில் நான் கீழே குறிப்பிடும் முறைதான் வசதியானது. எளிதானது. எனவே இதன்படி செய்யுங்கள். நான்கு பேனலகளையும் மொட்டை மாடியிலேயே பேரலல் ஆக இணைப்பதற்கு பதில் இரண்டிரண்டு பேனல்களாக இணைத்தால் இரண்டு அவுட் புட்கள மட்டுமே கிடைக்கும். இதை இன்வெர்டருடன் இணைக்க 2.5 sq mm வயரே போதுமானது. ஒரு அவுட் புட்-க்கு 2 வயர் வீதம் இரண்டு அவுட்புட்-க்கு 4 வயர்களும் எர்த்துக்கு ஒரு வயரும் ஆக மொத்தத்தில் 5 வயர்களே தேவை. படத்தை பார்க்கவும்.


கீழே உள்ள படத்தில் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனலில் இருந்து அதன் அவுட்புட் வயர் பி.வி.சி பைப் மூலம் இன்வெர்ட்டர் வைத்திருக்கும் அறைக்கு எப்படி கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை பார்க்கவும்.


இனி அவுட் வயர், இன்வெர்ட்டர், பாட்டரி ஆகியவற்றை இணைப்பதை பார்க்கலாம்.

முதல் இரண்டு பேனல்களை பேரல்லிலும், அடுத்த இரண்டை தனியாக பேரலிலும் இணைத்துக்கொள்ளுங்கள். சோலார் பேனலில் வயர் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அதை கழற்றிவிடுங்கள். அதன் பின் "0" டைப் லக்ஸ் உபயோகித்து கீழ் கண்டவாறு இணைப்பு கொடுங்கள்.


இப்பொழுது 2 சிகப்பு வயர்கள், 2 கருப்பு வயர்கள், 1 பச்சை வயர் என ஐந்து அவுட்புட் வயர்கள் இருக்கும். இவற்றை 3/4 இஞ்ச் பி.வி.சி பைப் மூலம் இன்வெர்ட்டர் வைத்திருக்கும் அறைக்குள் கொண்டுவர வேண்டும். அவுட்புட் வயர்கள் எல்லாம் 2.5 sq mm அளவுள்ள வயர்களே. நீளம் நீங்கள் அமைக்கும் சோலார் பேனலிருந்து அறை வரை தேவைப்படும் நீளமாகும்.

இவ்விதம் கொண்டுவரப்பட்ட சோலார் அவுட்புட் வயர்களில் இரண்டு சிகப்பு வயர்களை ஒன்றாக இணைக்க வேண்டும். அது போல இரண்டு கருப்பு வயர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும். சுவரில் 40 Amps Double Pole Isolator -ஐ பொருத்துங்கள். இது மெயின் சுவிட்ச் போலத்தான். கீழே உள்ள படத்தில் காட்டிய படி சிகப்பு கருப்பு வயர்களை அதன் மேல் பக்கத்தில் உள்ள கனெக்ட்டரில் இணைத்து விடுங்கள். ஐசோலேட்டரின் கீழ் பக்கத்தில் உள்ள இருகனெக்டரின் இரு முனைகளையும் பவர் கண்டிஷ்னருடன் இணைக்க 6sq mm வயரை உபயோகிக்க வேண்டும். இந்த வயரும் சிகப்பு மற்றும் கருப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும். ஐசோலேட்டரின் மேல் பக்கத்தில் முதல் துளையில் சோலார் அவுட்புட்டின் சிகப்பு வயரை ( பாசிடிவ்) இணைத்திருந்தால், கீழ்பக்த்தில் முதல் துளையில் 6 sq mm சிகப்பு வயரை இணைக்க வேண்டும். அதைப்போலவே தான் கருப்பு வயரும். படத்தை பார்த்தால் புரியும்.

பச்சை கலர் எர்த் வயரையும், ஐசோலேட்டரின் கீழ் பக்கத்தில் இணைக்கப்பட்ட கருப்பு சிகப்பு வயர் ஆக மூன்று வயர்களையும் பவர்கண்டிஷ்னரில் சோலார் அவுட்புட் இணைப்பிற்கான கனெக்டரில் மாட்டிவிட வேண்டும்.

இனி பாட்டரி பேங் பற்றி பார்க்கலாம். இந்த சிஸ்டம் 24 வோல்ட் டி.சி-ல் இயங்கக்கூடியது. எனவே 150 ஆம்பியர் பாட்டரிகள் இரண்டு சீரியல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. சீரியல் இணைப்பு பற்றி முந்தைய பதிவுகளில் விளக்கமாக கூறியுள்ளேன். சீயலில் இணைக்கும் பொழுது 24 வோல்ட்டாக மாறிவிடும். அதாவது 150 ஆம்ப்பியர்-24 வோல்ட் ஆக மாறிவிடும். இணைப்பு படம்  கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பாட்டரி பேங்கின் பாசிடிவ் முனையை இன்வெர்ட்டரின் பாட்டரி இணைப்பிற்கான கனெக்டரில் பாசிடிவ் முனையுடனும், அதைபோலவே நெகடிவ முனையை இன்வெர்டரின் பாட்டரி கனெக்ட்டருடனும் இணைக்க வேண்டும். இதற்கு 6sq mm வயரையே இணைக்க வேண்டும். பாசிடிவ்-க்கு சிகப்பு கலர் வயரையும், நெகடிவ்-க்கு கருப்பு கலர் வயரையும் உபயோகப்படுத்த வேண்டும்.

இனி இன்வெர்ட்டரில் ஏசி அவுட்புட்-ல் Phase, Neutral, Earth கனெக்டர்கள் இருக்கும். இதை 2.5 Sq mm வயரால் ( சிகப்பு, கருப்பு, பச்சை) சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சுடன் (10Amp -15Amp)இணைத்து விடவேண்டும். அதைப்போலவே மின்வாரிய சப்ளையையும் (சிங்கிள் பேஸ் சப்ளை) இந்த சுவிச்சில் இணைக்க வேண்டும். இந்த சுவிட்ச்சின் அவுட்புட்டை நம் வீட்டின் லைட், பேன் போன்றவற்றின் சர்க்கியூட்டுடன் இணைக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் செய்ய முடியாது. எலெக்ட்ரீஷியனால் தான் செய்ய முடியும். வாட்டர் ஹீட்டர், ஏசி போன்றவற்றை இதில் இணைக்ககூடாது.

சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தில் இன்வெர்ட்டரிலிருந்து சோலார் மின்சாரத்தை உபயோகிக்குமாறு இந்த சுவிட்ச்சை மாற்றி விட வேண்டும். நாம் உபயோகிக்கும் மின்சாரம் போக, மீதி கிடைக்கும் சோலார் மின்சாரம் பாட்டரியில் சேமிக்கப்படும். மாலையில் சுவிட்ச்சை மின்வாரிய சப்ளைக்கு மாற்றிவிட வேண்டும். பவர்கட் ஏற்பட்டால் இந்த சுவிட்ச்சை சோலாருக்கு மாற்றினால் பாட்டரி மின்சாரம் இன்வெர்ட்டர் மூலம் நமக்கு கிடைக்கும்.

இந்த சிஸ்டத்தை அமைக்க ஆகும் செலவு விபரம் கீழே பட்டியலாக தரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: