செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

சிங்கிள் பேஸ் எனர்ஜி மீட்டர்

இது ஒரு இண்டகிரேட்டிங் டைப் இன்ஸ்ட்ருமென்ட் ஆகும். இந்த வகை இன்ஸ்ட்ருமென்டில் டிரைவிங், பிரேக்கிங், ரெக்கார்டிங் டிவைஸ்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

மின் திறனையும், அது பயன்படுத்தப்படும் காலத்தையும் பெருக்கினால் கிடைப்பது மின் ஆற்றல் ஆகும். இதனை அளக்க எனர்ஜி மீட்டர் பயன் படுகிறது. இது எலக்ட்ரோ மேக்னட்டிக் இன்டக்சன் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

சீரிஸ் மேக்னட் (Series Magnet)
ஒர் அயன்கோரில் தடித்த ஒயரால் சில சுற்றுகள் கொண்ட காயிலாக சுற்றப்பட்டு லோடுக்கு சீரிஸ் ஆக இணைக்கப்பட்டுள்ளது.


சண்ட் மேக்னட் (Shunt Magnet)

ஒரு E வடிவ அயன் கோரில் அதிக இன்டன்சன் கொண்டதாக மெல்லிய ஒயரினால் அதிக சுற்றுகள் கொண்ட காயிலாக சுற்றப் பட்டு சப்ளைக்கு பேரலல் ஆக இணைக்கப்பட்டிருக்கும்.

சேடிங் ரிங்ஸ் (Shading Ring)
நிலையான தாமிர வளையங்கள் (Copper Shading Ring) சண்ட் மேக்னட்க்கு நடுவில் அமைக்கப்பட்டு இருக்கும். இவை பிரசர் காயிலில் உள்ள வோல்டேஜ்க்கும் அதன் பிளக்ஸ்க்கும் 90 டிகிரி கோண வித்தியாசத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. உராய்வினால் ஏற்படும் லாஸ்-ஐ ஈடு செய்ய மேலும் இரண்டு நகரக் கூடிய காப்பர் சேடிங் ரிங் அமைக்கப்பட்டிருக்கு.
பிரேக்கிங் மேக்னட் (Breaking Magnet)
மீட்டருக்கு தேவையான பிரேக்கிங் சிஸ்டத்தை ஏற்படுத்துவதற்காக U வடிவ நிலை காந்தத்திற்கு நடுவே அலுமினிய தகடு சுழலும் படி அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு பிரேக்கிங் மேக்னட் என்று பெயர்.

Working Principle
மீட்டருக்கு சப்ளை கொடுக்கும் போது பிரசர் காயிலில் சப்ளை வோல்டேஜ்க்கு நேர் விகிதத்தில் மின்னோட்டம் பாய்வதால் அதில் ஒரு காந்தபுலம் உருவாகிறது.

அதே நேரத்தில் கரண்ட் காயில் வழியாக லோடு மின்னோட்டம் செல்வதால் அந்த மின்னோட்ட அளவிற்கு ஏற்ப அதிலும் காந்தபுலம் உருவாகிறது. இந்த இரு காந்தபுலமும் அலுமினிய தகட்டால் வெட்டப்படுவதால் அதில் எடிகராண்ட் உருவாகிறது. இந்த எடிகராண்ட்-ம் இரு காந்த புலங்களுடன் ஒன்றோடொன்று செயல்படுவதால் அலுமினிய தகட்டில் டார்க் உருவாகி சுழலும். அதனால் தகட்டுடன் இணைந்துள்ள ஸ்பிண்டில் சுழன்று பற்சக்கர அமைப்பு நகர்ந்து அளவினைக்காட்டுகிறது.

லோடு இல்லாத போது அலுமினிய தகடானது சுழல்வதை (Creeping error) தடுக்க அலுமினிய தகட்டில் எதிர் எதிராக இரு துளையிடப்பட்டிருக்கும். அவை பிரேக்கிங் மேக்னடிற்கு கீழ்வரும் போது அலுமினிய தகட்டை சுழலாமல் நிறுத்துவதற்கு உதவுகிறது.

கருத்துகள் இல்லை: