வயரிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வயரிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 செப்டம்பர், 2013

சனி, 14 செப்டம்பர், 2013

மின்சாரம் நின்றுவிட்டால் நான் என்ன செய்வது?

சில வேளைகளில் பாரிய ஒரு புயல்காற்று அல்லது விபத்து ஒன்றினால் மின்சாரம் பாயும் கம்பிகள் சேதமடையும் பொழுதுமின்சக்தி நின்று விடும். மின்சாரத்தை வழங்கும் நிறுவனம் திருத்த வேலைகளைச் செய்வதற்காக மின்வழங்குவதை நிறுத்தி விடும் சந்தர்ப்பத்திலும்பரவலான மின்துண்டிப்பு ஏற்படலாம். மின்சாரத்தை வழங்கும் வியாபார நிறுவனம் முடிந்த அளவு விரைவாக மின்சாரம் மீண்டும் வழங்குவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்யும். இருந்தபோதிலும், மின்சக்தி திரும்புவதற்குச் சில மணித்தியாலங்கள் அல்லது சில நாட்கள் கூட எடுக்கலாம். இப்படியாக மின்சாரம் தடைப்படும் பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும் .

திங்கள், 9 செப்டம்பர், 2013

வீட்டு வயரிங் பற்றிய தகவல்

பெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது.அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்  செய்யும் முறையில் நான் சொல்வதையும் சேர்த்தால் வேலை நன்றாக  இருக்கும். அதாவது வீட்டு  சுவரின் உள்ளாகவோ அல்லது சுவரின்  வெளியாகவோ தான் நாம் வயரின் செய்வோம். 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

சிங்கிள் பேஸ் எனர்ஜி மீட்டர்

இது ஒரு இண்டகிரேட்டிங் டைப் இன்ஸ்ட்ருமென்ட் ஆகும். இந்த வகை இன்ஸ்ட்ருமென்டில் டிரைவிங், பிரேக்கிங், ரெக்கார்டிங் டிவைஸ்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

மின் திறனையும், அது பயன்படுத்தப்படும் காலத்தையும் பெருக்கினால் கிடைப்பது மின் ஆற்றல் ஆகும். இதனை அளக்க எனர்ஜி மீட்டர் பயன் படுகிறது. இது எலக்ட்ரோ மேக்னட்டிக் இன்டக்சன் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

சீரிஸ் மேக்னட் (Series Magnet)
ஒர் அயன்கோரில் தடித்த ஒயரால் சில சுற்றுகள் கொண்ட காயிலாக சுற்றப்பட்டு லோடுக்கு சீரிஸ் ஆக இணைக்கப்பட்டுள்ளது.

ஒயரிங் சிஸ்டத்தில் ஏற்படும் குறைபாடுகள் - General Defects in Wiring System


லீக்கேஜ் (Leakage)

பேஸ் ஒயரிலிருந்து நியூட்ரல் ஒயருக்கோ, எர்த் கன்டக்டருக்கோ அல்லது அருகில் உள்ள மெட்டலுக்கோ மின் கசிவு ஏற்படுவதையே லீக்கேஜ் கரண்ட் எனக் குறிப்பிடுகிறோம்.

கொடுக்கப்படும் வோல்டேஜ்-யை தாங்கும் அளவிற்கு கன்டக்டரின் மேலுள்ள இன்சுலேஷன் இல்லாதிருத்தல்.

ஒயரிங் செய்வதற்கான விதிமுறைகள் - Rules for Wiring

ஏசி மற்றும் டிசி சர்க்யூட்கள் தனித்தனியாக ஒயரிங் செய்யப்பட வேண்டும். டிசி சர்க்யூட்டில் +ve ஆனது சிவப்பு நிறத்திலும், -ve ஆனது கருப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட வேண்டும்.

ஏசி-யில் மூன்று பேஸ்கள் தலா சிவப்பு, மஞ்சள், நீளம் நிறத்திலும், நியூட்ரல் கருப்பு  நிறத்திலும்,  எர்த் பச்சை மற்றும் மஞ்சள் (கிரீனிஸ்-எல்லோ) நிறத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

செலக்சன் ஆப் ஒயரிங்

ஒரு குறிப்பிட்ட வகை ஒயாரிங்கை தேர்ந்தெடுக்கும் முன் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒயரிங் செய்து முடிக்க ஆகும் செலவு.

ஒயரிங் செய்யக்கூடிய இடத்தின் தட்பவெப்ப நிலை.

தேவைப்படும் மெக்கானிக்கல் ஸ்ட்ரென்த்.

தீப்பிடிக்க கூடிய வாய்ப்புகள்.

செய்து முடிக்கப்பட்ட பின் கிடைக்க வேண்டிய தோற்ற அமைப்பு.

எதிர்காலத்தில் ஏதேனும் புதிய சப்-சர்க்யூட்கள் அமைப்பதற்கான வழி வகை.

பழுதை நிவர்த்தி செய்வதற்கு தேவையான அமைப்பு.

ஒயரிங் சிஸ்டம்

சப்ளையை மெயினிலிருந்து பல பகுதிகளுக்கும் பின்வரும் மூன்று முறைகளில் கொண்டு செல்லலாம்.

Tree System Ring Main System Distribution Board System

ட்ரி சிஸ்டம் (Tree System)
மெயின் சர்க்யூட்டில் இருந்து நமக்கு தேவைப்படகூடிய இடத்தில் டேப்பிங் எடுத்து சப்-சர்க்யூட்கள் அமைக்கும் முறையாகும்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

வீட்டு வயரிங் - பகுதி.11

2-வே சுவிட்ச் இணைப்பை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக வீடுகளில் படுக்கை அறை, வராண்டா, மாடிப்படி ஆகிய இடங்களில் உள்ள விளக்குகளுக்கு 2-வே சுவிட்ச் பயன்படுத்தப்படும். படுக்கை அறையை பொறுத்தவரை மின் விசிறிக்கும் பயன்படுத்தப்படும்.

உதாரணத்திற்கு வராண்டா விளக்கு இணைப்பை எடுத்துக்கொள்ளலாம். இந்த சர்கியூட்டிற்கு 2-வே (Two Way) சுவிட்ச் இணைப்பு எப்படி கொடுக்கப்படுகிறது, அது எப்படி செயல்படுகிறது, அதன் உபயோகம் இவற்றை பார்க்கலாம்.

வீட்டு வயரிங் - பகுதி.10

மின் பழுதுகளை பற்றியும் அவற்றை நீக்குவது பற்றியும் இனி பார்க்கலாம். பொதுவாக பழுதுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை 1).ஷார்ட் சர்க்கியூட் (Short Circuit), 2). லூஸ் காண்டாக்ட் (Loose Contact), 3).மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகள்.

வீட்டு வயரிங் - பகுதி.9


முந்தைய பதிவுகளில் பீங்கானால் செய்யப்பட்ட பியூஸ் யூனிட்களை சப்ளையின் மெயின் பியூஸ் யூனிட்டாகவும், செக்சன் பியூஸ் யூனிட்டாகவும் பயன்படுத்தப்படுவதை பற்றி பார்த்தோம். தொழில் நுட்பம் வளர வளர, சாதனங்களில் மாற்றம் வருவது இயற்கையே. அதன்படி பீங்கானினால் ஆன பியூஸ் யூனிட்களுக்கு பதிலாக Miniature Circuit Breaker (MCB), Isolator, Earth Leakage Circuit Breaker (ELCB) / Residual Current Circuit Breaker(RCCB) என பல சாதனங்கள் இப்பொழுது கிடைக்கிறது. இவற்றின் செயல்பாடு, பயன்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..

டியூப் லைட்

இந்த பதிவில், டியூப் லைட் எப்படி இயங்குகிறது என்பதையும் அதன் வயரிங் இணைப்பையும் இப்பொழுது பார்க்கலாம். கீழே உள்ள படத்தில் டியூப் லைட் பட்டி (பிட்டிங்ஸ்) காண்பிக்கப்பட்டுள்ளது. டியூப் லைட்டை மாட்டுவதற்கு இரு புறமும் ஹோல்டர்கள், ஒரு சோக், ஒரு ஸ்டார்ட்டர் ஃபேஸ், ஸ்டார்ட்டர் & டியூப் (படத்தில் காண்பிக்கப்படவில்லை) ஆகியவை உள்ளன.

வீட்டு வயரிங் - பகுதி.8

மூன்று அறைகள் கொண்ட வீட்டின் 3-பேஸ் மின் இணைப்பில், பேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சை எப்படி பொருத்துவது என்பதை பார்க்கலாம். முதலில் இந்த சுவிட்ச் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

வீட்டு வயரிங் - பகுதி.7

முந்தைய பதிவில் மூன்று அறைகள் கொண்ட வீட்டிற்கு சிங்கிள் பேஸ் மின் இணைப்பிற்கான வயரிங்கை எவ்விதம் மெயின் போர்டு அல்லது மீட்டர் போர்டில் செய்ய வேண்டும் என்பதை பார்த்தோம். இனி அதே வீட்டிற்கு 3-பேஸ் மின் இணைப்பிற்கு எவ்விதம் வயரிங் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கிள் பேஸ் இணைப்பில் வீட்டின் மூன்று அறைகளுக்கும்(சர்கியூட்) தனித்தனி பியூஸ் யூனிட் வழியாக லைன் சப்ளையை கொண்டு சென்றோம். 3-பேஸ் மின் இணைப்பில், ஒவ்வொரு பேஸ் சப்ளையையும் தனித்தனியாக ஒவ்வொரு அறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவுதான். கீழே உள்ள படத்தை பாருங்கள்

வீட்டு வயரிங் - பகுதி.6

இந்த தொடர் பதிவின் 5-வ்து பகுதியில், ஒரு அறையில் எவ்வாறு கன்சீல்டு வயரிங் செய்ய வேண்டும் என்பதை விவரித்துள்ளேன். இவ்வாறு மூன்று அறைகளிலும்(உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் இருந்தே மூன்று அறைகள் கொண்ட வீட்டையே குறிப்பிட்டுள்ளேன்) வயரிங் செய்யப்படும். ஒவ்வொரு அறையிலிருந்தும் சப்ளை வயர்கள் தனித்தனியாக, தனித்தனி பைப் மூலம் மெயின் போர்டு வைக்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வரப்படும். சிலர் பைப் செலவை குறைக்க ஒரே பைப்பில் மூன்று அறைகளுக்கும் உரிய சப்ளை வயர்களை கொண்டு வருவார்கள். கீழே உள்ள படம் அதை காட்டுகிறது.

திங்கள், 17 ஜூன், 2013

வீட்டு வயரிங் - பகுதி.5

minsaraulagamஎலெக்ட்ரிக்கல் வயர்களின் முனையில் அதன் இன்சுலேஷனை நீக்கி செப்பு கம்பிகளை எடுத்து சுவிட்ச், சாக்கெட் போன்றவற்றில் இணைக்கும் பொழுது, ஒரு வயரின் ஏதாவது ஒரு கம்பி மற்ற வயரின் இணைப்பை தொட்டுவிடும் வகையில் இருக்கக்ககூடாது. அப்படி இருந்தால் ஷார்ட் சர்க்கியூட் ஆகிவிடும். ஒவ்வொறு வயரிலும் மெல்லிய செப்பு கம்பிகள் பல இருக்கும். இவற்றின் எண்ணிக்கையும் கனமும் அந்த வயரின் கெப்பாசிட்டியை (மின் கடத்தும் திறன்) பொருத்து மாறுபடும். அதனால் எப்பொழுதும் வயரின் நுனியில் இன்சுலேஷனை நீக்கியவுடன், செப்பு கம்பிகளை நன்றாக முறுக்கி(TWIST) விட வேண்டும். படத்தை பார்க்கவும்.

வீட்டு வயரிங் - பகுதி.4

இந்த பதிவில் முதலில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களை பற்றி பார்க்கலாம். பல்பை பொருத்துவதற்கு ஹோல்டர் (HOLDER) பயன்படுகிறது. பட்டன் ஹோல்டர்,  ஆங்கிள் ஹோல்டர்,   பென்டன் ஹோல்டர் என மூன்று வகைப்படும். படத்தை பார்க்கவும்.


ஞாயிறு, 16 ஜூன், 2013

வீட்டு வயரிங் - பகுதி.3

முந்தைய பதிவில் காட்டப்பட்ட அதே படம் ஒரே ஒரு மாற்றத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நியூட்ரல் லைன் இணைப்பிலாமல் உள்ளது. இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை காட்ட பெருக்கல் அடையாளம் போடப்பட்டுள்ளது. இப்பொழுது என்ன நடக்கும்?

வீட்டு வயரிங் - பகுதி.2

ஏ.சி மின்சாரத்திற்கு பேஸ், நியூட்ரல் என்ற இரு முனைகள் உண்டு என முன் பதிவில் பார்த்தோம். அதில் நியூட்ரல் என்பது நமக்கு மின்சாரத்தை வழங்கும் டிரான்ஸ்பார்மர்-ன் எர்த் ஆகும். பேஸ் என்ற முனையில் மட்டுமே மின்சாரம் வரும். எனவே நியூட்ரல் நம் உயிருக்கு எவ்வித ஆபத்தையும் உண்டாக்காது. பேஸ் வயரை மட்டும் நாம் கவனமாக கையாள வேண்டும். மின்சாரத்தை கடத்தக்கூடிய அதாவது மின்சாரம் எளிதில் செல்லக்கூடிய பொருட்கள் Good Conductor எனவும், மின்சாரத்தை கடத்தாத பொருட்கள் Bad Conductor என சொல்லப்படும்.

வீட்டு வயரிங் - பகுதி.1

டி.சி மின்சாரத்தில், மின்சாரம்(எலெக்ட்டிரான்) ஒரே திசையில் தொடர்ச்சியாக செல்லும். ஆனால் ஏ.சி மின்சாரத்தில் அது இரு திசையிலும் மாறி மாறி செல்லும். இவ்வாறு ஒரு வினாடிக்கு எத்தனை முறை திசைமாறி செல்கிறதோ அது சைக்கிள் அல்லது ஹெர்ட்ஸ் என சொல்லப்படுகிறது. கீழே உள்ள படத்தை பாருங்கள்.
DC-current_cropped
நாம் உபயோகப்படுத்தும் மின்சாரம் இரண்டு வகையானது. (1) ஆல்ட்டர் நேட் கரண்ட் (AC - Alternate Current) (2). டயரக்ட் கரண்ட்(DC-Direct Current). இதில் ஏசி கரண்டுதான் நாம் அன்றாடம் வீட்டில் உபயோகப்படுத்தும் மின்சாரம் ஆகும். டிசி கரண்ட் என்பது டார்ச் லைட்-டிரான்ஸ்சிஸ்டர் பாட்டரி, மொபைல் போன் பாட்டரி, பைக்-கார் பாட்டரி போன்றவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரமாகும். மொத்தத்தில் இது பாட்டரியிலிருந்து கிடைக்கும் மின்சாரமாகும். இனி ஏசி மின்சாரத்தின் உபயோகம், தனித்தன்மைகள் இவை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நாம் உபயோகிக்கும் ஃபேன், பல்பு, டி.வி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மிஷின் எல்லாமே சிங்கிள் பேஸ் 230 வோல்ட் ஏசி மின்சாரத்தில் இயங்கக்கூடியவை. உதாரணத்திற்கு உங்கள் டேபிள் ஃபேன்-ன் அடிப்பக்க மூடி அல்லது டி.வி-ன் பின் பக்க மூடி இவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரை பாருங்கள். 230V AC 50Cyc/Hz என குறிப்பிடப்பட்டிருக்கும். அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள தன்மை கொண்ட மின்சாரத்தில்தான் அது இயங்கும் என்பதற்கான அறிவிப்பு அது.


ஒரு பல்பு பாட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் எந்த ஒரு சாதனத்திற்கும் இரு முனைகள்(இணைப்பு-TERMINAL) உண்டு. அதைப்போலவே டி.சி. மின்சாரமாக இருந்தாலும் சரி அல்லது ஏசி மின்சாரமாக இருந்தாலும் சரி இரு முனைகள் உண்டு. நடைமுறையில் பாட்டரி மின்சாரத்தின் இரு முனைகளையும் பாசிடிவ் (POSITIVE), நெகடிவ்(NEGATIVE) என அழைப்பர். இவற்றின் குறியீடு பாசிடிவ்-க்கு (+) எனவும் நெகடிவ்-க்கு (-)ஆகும். கல்ர் குறியீடு, பாசிடிவ்-க்கு சிகப்பும், நெகடிவ்-க்கு கருப்பும் ஆகும். இனி மேலே உள்ள படத்தை பாருங்கள். பாட்டரியின் பாசிடிவ் முனையும், நெகடிவ் முனையும் பல்பினுடைய இரு முனைகளுடன் தனித்தனியாக இணைக்க பட்டுள்ளது. பாட்டரியின் நெகடிவ் முனையிலிருந்து மின்சாரம்(எலெக்ட்ரான்) பல்பின் ஒருமுனைவழியாக பல்பின் டங்ஸ்டன் இழையினுள் சென்று பல்பின் மறு முனை வழியாக பாட்டரியின் பாசிடிவ் முனையை வந்தடைகிறது. மறுபடியும் தொடர்சியாக இதே பாதையில் அல்லது திசையில் செல்லுகிறது. அது செல்லும் திசையை படத்தில் அம்பு குறியீட்டின் மூலம் காட்டப்பட்டுள்ளது.

இனி ஏசி மின்சாரத்தை பற்றி பார்க்கலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

DC-current_cropped இந்த படத்தில் முந்தைய படத்தில் காட்டப்பட்டுள்ள அதே பல்பு ஏ.சி மின்சாரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஏ.சி மின்சாத்துக்கு பேஸ்(PHASE), நியூட்ரல்(NEUTRAL) என இரு முனைகள் உண்டு. அவற்றின் குறியீடு P,N ஆகும். ஏசி மின்சாரம் "N" முனை வழியாக பல்புக்கு சென்று, பல்பின் மறு முனை வழியாக ஏசி மின்சாரத்தின் பேஸ்(P) முனையை வந்தடைகிறது.இதை பச்சை நிறத்திலான அம்பு குறி காட்டுகிறது. அதன் பின் எதிர் திசையில் அதாவது ஏசி மின்சாரம் "P" முனை வழியாக பல்புக்கு சென்று "N" முனைக்கு வந்தடைகிறது. இதை சிகப்பு நிற அம்பு குறியீடு காட்டுகிறது. இவ்விதம் ஏசி மின்சாரம் இரு திசையிலும் செல்லும். இந்த திசை மாற்றம் வினாடிக்கு எத்தனை முறை நடைபெறுகிறதோ அதுதான் Cycles per Second அல்லது Hz per Second ஆகும். நம் நாட்டில் நம் உபயோகத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் 50 cyc /Hz ஆகும்.

இனி வோல்ட், கரண்ட், வாட் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.


பேச்சு வழக்கில் நாம் கரண்ட் என்று சொல்வோம். அது மின்சாரத்தை குறிக்கும். ஃபேன் மெதுவாக சுற்றினாலோ அல்லது டியூப் லைட் எரியாமல் விட்டு விட்டு எரிந்தால் லோ வோல்ட் என்று சொவோம். அடுத்தபடி கடையில் பல்பு வாங்கும் பொழுது 40W அல்லது 60 வாட் பல்பு கொடுங்கள் என்று கேட்ப்போம். அதற்கு மேல் நமக்கு மின்சாரத்தை பற்றி தெரியாது. அவசியம் வோல்ட், கரண்ட், வாட்ஸ் என்றால் என்ன? அவை ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு உடையது என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

வோல்ட் (VOLT)



மின்சாரத்திலிருக்கும் எலெக்ட்ரான்களை (ELECTRONS) லோடு அல்லது சர்க்கியூட் என அழைக்கப்படும் நம் மின்சாதனத்திற்கு அனுப்பும் அழுத்தமே வோல்ட் ஆகும். எனவேதான் வோல்ட்டை மின் அழுத்தம் என தமிழில் சொல்கிறோம். மேலே உள்ள படத்தில் தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயத்தில் தண்ணீர் தொட்டி இருக்கிறது. அதன் அடிப்பாகத்தில் 1 cm அளவுள்ள குழாய் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அதே தொட்டி 10 மீட்டர் உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது முதல் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது அதன் வெளியேறு குழாய் வழியாக வெளிவரும் தண்ணீரின் அழுத்தம் குறைவாக இருக்கும். 10 மீட்டர் உயரத்திலிருந்து வெளிவரும் தண்னீரின் அழுத்தம் 10 மடங்கு அதிகமாக இருக்கும்.6 வோல்ட், 12 வோல்ட், 24 வோல்ட் பாட்டரிகளை இப்பொழுது ஒப்பிட்டு பார்ப்போம். 24 வோல்ட் பாட்டரி 6 வோல்ட் பாட்டரியை விட 4 மடங்கு மின் அழுத்தம் அதிகமானது. அதைப்போல 12 வோல்ட் பாட்டரியை விட 2 மடங்கு அதிக மின் அழுத்தம் கொண்டது.

கரண்ட் (CURRENT)
தண்ணீர் தொட்டியிலிருந்து குழாய் வழியாக வாட்டர் மாலிகுல்ஸ் என்ற தண்ணீர் வெளியேறும் அளவை போல மின்சார எலெக்டிரான்ஸ் வெளியேறும் அளவை கரண்ட் குறிக்கும். அதாவது நம் சாதனம் உபயோகிக்கும் எலெக்டிரான்ஸ் அளவை குறிக்கும். பொதுவாக கரண்ட் என்பது ஆம்பியர் என அழைக்கப்படும்.


மேலே உள்ள படத்தை பாருங்கள். முதல் தொட்டியின் அவுட்லெட் பைப் 1 செ.மி, இரண்டாவது படத்தில் 10 செ.மி பைப் இணைக்கப்பட்டுள்ளது. 1 செ.மி அளவிலுள்ள குழாய் 1 மணி நேரத்தில் 100 லிட்டர் தண்ணீர் வெளிவருவதாக வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 10 செ.மி அளவுள்ள குழாய் மூலம் 100 லிட்டருக்கு அதிகமாக பல மடங்கு தண்ணீர் வெளிவருமல்லவா?. ஆமாம். அதைப்போலவே மின் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள சாதனம் அதிக அளவில் மின்சாரத்தை எடுக்கக்கூடியதென்றால், அதற்கேற்ப இணைப்பு வயரின் பருமனை ( cross-sectional area) அதிகரிக்க வேண்டும்.

இப்பொழுது Ohms's Law பற்றி தெரிந்து கொள்வோம்.

POWER = VOLTAGE X CURRENT ( P = V x I )
or
WATT = VOLTAGE X AMPERE ( W = V x A )

இதுதான் அடிப்படை விதி. இப்பொழுது வாட், வோல்ட், ஆம்பியர் இவற்றில் ஏதாவது 2 தெரிந்திருந்தால் மூன்றாவதை கண்டுபிடித்து விட முடியும். உதாரணத்திற்கு டி.வியை எடுத்துக்கொள்ளலாம். அது இயங்கும் வோல்ட் 220. 100 வாட் என டிவி. காபினட்டில் போட்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அது எவ்வளவு கரண்டை எடுக்கும்?
W = V x A
ie 100 W = 220 x A
ie 100 / 220 = A (Watt divided by Volt)
ie = 0.455 Amp

அதாவது 0.455 ஆம்பியர் கரண்ட் அதற்கு தேவை.

இனி சீரியஸ் (SERIES CONNECTION) இணைப்பு மற்றும் பேரலல் (PARALLEL CONNECTION) பற்றி பார்க்கலாம்.

சீரியஸ் இணைப்பு



( ஒவ்வொரு பாட்டரியும் 1.5 V / 1.7 Amp )

இந்த படத்தில் 3 பாட்டரிகள் (1.5V,1.7Amp) சீர்யஸ் முறையில் இணைக்க பட்டுள்ளது.முதல் பாட்டரியின் பாசிடிவ் முனை இரண்டாவது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும், 2-வது பாட்டரியின் பாஸிடிவ் முனை 3-வது பாட்டரியின் நெகடிவ் முனையிடனும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது 1-வது பாட்டரியின் நெகடிவ் முனையும் 3-வது பாட்டரியின் பாஸிடிவ் முனையும் எதனுடனும் இணைக்கப்படாமல் உள்ளது இந்த இரு முனைகளின் வழியாக நமக்கு 4.5 வோல்ட் / 1.7 ஆம்பியர் கிடைக்கும்.

பாரலெல் (PARALLEL) இணைப்பு





மேலே குறிப்பிடப்பட்ட அதே பாட்டரிகள் பாரெலெல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மூன்று பாட்டரிகளின் பாஸிடிவ் முனைகள் ஒன்றாகவும் நெகடிவ் முனைகள் ஒன்றாகவும் இணைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக நமக்கு 1.5 V / 5.1 ஆம்பியர் மின்சாரம் கிடைக்கும்.

சீரியஸில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) மட்டுமே கூடுதலாகும். ஆம்பியர் அதிகரிக்காது.

பேரலில் இணைக்கும் பொழுது மின் அழுத்தம் (வோல்ட்) அதிகரிக்காது. ஆம்பியர் மட்டுமே அதிகரிக்கும்.

வீட்டில் உபயோகிக்கும் அனைத்து சாதனங்களும் பேரலெல் முறையில் முறையிலேயே நம் மின் இணைப்பிலிருந்து மின்சாரத்தை பெறுகிறது. அடுத்த பதிவில் நமக்கு வ்ழங்கப்படும் மின்சாரம் பற்றியும், வீட்டில் செய்யப்படும் மின்சார வயரிங் பற்றியும் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்................