சனி, 10 ஆகஸ்ட், 2013

வீட்டு வயரிங் - பகுதி.8

மூன்று அறைகள் கொண்ட வீட்டின் 3-பேஸ் மின் இணைப்பில், பேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சை எப்படி பொருத்துவது என்பதை பார்க்கலாம். முதலில் இந்த சுவிட்ச் எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.


இந்த சுவிட்ச்சில் நான்கு காண்டாக்ட்-கள் உள்ளன. அவை 1,2,3, OFF ஆகும். இதில் 3-பேஸ் சப்ளையின் மூன்று பேஸ்களையும் வ்ரிசை கிரமத்தில் சிகப்பு பேஸ் 1-வது காண்டாக்கிலும், மஞ்சள் பேஸ் 2-வது காண்டாக்டிலும், நீல நிற பேஸ் 3- வது காண்டாக்ட்டிலும் இணைக்க வேண்டும். இந்த பேஸ் கனெக் ஷனை மெயின் சுவிட்ச் பியூஸ் யூனிட்களின் மேல் பக்க இணைப்பிலிருந்து (அவுட் புட்) எடுக்க வேண்டும். சுவிட்சின் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ள சுழலும் காண்டாக்ட்டுடன் உள்ள டெர்மினலுடன் செக்ஷன் பியூஸ் யூனிட்டின் கீழ் பக்க (இன்புட் டெர்மினல்) டெர்மினலுடன் இணைக்க வேண்டும்.


இப்பொழுது சுவிட்ச்சின் கைப்பிடியை 1-வது நம்பரை நோக்கி திருப்பினால் 1-வது காண்டாக்ட்டுடன் இணைக்கப்பட்டுள்ள சிகப்பு பேஸ்-உடன் தொடர்பு ஏற்பட்டு பியூஸ் யூனிட்டுக்கு சப்ளை வரும். இதைப்போலவே சுவிட்ச்சை 2,3 ஆகிய நம்பர்களை நோக்கி திருப்பும் பொழுது மஞ்சள் நிற பேஸ், நீல நிற பேஸ் என மாறி பியூஸ் யூனிட்டுக்கு செல்லும். எனவே ஒரு பேஸ் இல்லையென்றால் வேறு ஒரு பேஸ்-க்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

மூன்று அறைகளிலும் உள்ள லோடு(இணைப்பு சாதனங்களின் வாட்ஸ்) குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒரு சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சே போதுமானது. மூன்று செகஷன் பியூஸ் யூனிட்களின் கீழ் பக்க கனெக்ட்டர்கள் அனைத்தும் லூப் செய்து விட வேண்டும். அதாவது கீழ் பக்க கனெக்ட்டர்களையும் ஒன்றாக இணைத்து விட வேண்டும். கீழே படம் கொடுக்கப்பட்டுள்ளது.


இவ்விதம் இணைக்கும் பொழுது ஏதாவது ஒரு பேஸ் சப்ளையில்தான் வீட்டிலுள்ள மின் சாதனக்கள் இயங்கும்.

வீட்டில் லோடு அதிகம் என்றால் மூன்று பேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச்களை இணைக்க வேண்டும். அதன் இணைப்பு படம் கிழே காட்டப்பட்டுள்ளது.

இதை எவ்வாறு மின் இணைப்பில் இணைக்க வேண்டும் என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.

கீழே உள்ள படம் மெட்டல் பாக்ஸ்-ல் ஒரு சுவிட்சு பொருத்தப்பட்டுள்ளதையும், அடுத்த படம் மூன்று சுவிட்ச்கள் பாக்ஸ்-ல் பொருத்தப்பட்டுள்ளதையும் காட்டுகிறது.


இதில் இண்டிகேட்டர்கள் மாட்டப்பட்டுள்ளது.

மீண்டும் சந்திப்போம்.........

கருத்துகள் இல்லை: