சனி, 31 ஆகஸ்ட், 2013

டிரான்ஸ்பார்மர் டேப் சேஞ்சிங்

Tap Changing of Transformer
டிரான்ஸ்பார்மரில் இணைக்கபடும் லோடின் அளவைப் பொறுத்து அதன் டெர்மினல் வோல்டேஜ் அளவு மாறுபடும். இந்த மாறுதல் வீட்டு மின் இணைப்பாக இருக்கும்போது ±5% க்கு மேலும் தொழிற்சாலைகளுக்கு ±7% க்கு மேலும் இருக்கக்கூடாது. ஆகவே இந்தகைய வோல்டேஜ் டிராப்பை ஈடுசெய்ய வேண்டியுள்ளது. மேலும் பல ஜெனரேட்டிங் ஸ்டேசன்கள் ஒன்றாக இணைந்து கிரிட் ஆக செயல்படும்போது, ஒன்றிலிருந்து மற்றொரு ஸ்டேசனுக்கு பாயும் வாட்புல் பவர் (Wattful Power) மற்றும் வாட்லெஸ் பவர் (Wattless Power) ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் வோல்டேஜ் அளவை மாற்ற வேண்டியிருக்கும்.


  ஆகவே டிஸ்ட்ரிபூசன் டிரான்ஸ்பார்மரில் குறைந்த மின்னோட்டம் பாயும்  வைண்டிங்-ல் (பிரைமரி) பல டேப்பிங்கள் எடுக்கப்படுவதின் மூலம் வைண்டிங் சுற்றுகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க முடியும். அவ்வாறு செய்வதின் மூலம் டிரான்ஸ்பார்மரின் வோல்டேஜ் ரேசியோ அளவை மாற்றி லோடு அளவினை பொறுத்து தேவையான அளவு வோல்டேஜ்-ஐ வழங்கமுடியும். இத்தகைய மாற்றங்களை இரண்டு முறைகளில் செய்யலாம்.

ஆஃப் லோடு டேப் சேஞ்சிங் ஆன் லோடு டேப் சேஞ்சிங்

ஆஃப் லோடு டேப் சேஞ்சிங் (Off - Load Tap Changing)
இம்முறையில் டிரான்ஸ்பார்மரிலிருந்து லோடை துண்டித்த பிறகு அதன்
டேப்பிங்-ஐ நம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். இம்முறை பொதுவாக சிறிய அளவிலான டிரான்ஸ்பார்மர்களில் பயன்படுகிறது.

ஆன் லோடு டேப் சேஞ்சிங் (On - Load Tap Changing)
இம்முறையில் டிரான்ஸ்பார்மரிலுள்ள லோடை துண்டிக்காமலேயே டேப்பிங்களை மாற்ற அதற்கென உரிய ஆட்டோமேட்டிக் கியர் மெக்கானிசம் மூலம் செய்யப்படுகிறது. இத்தகைய கியர் மெக்கானிசம் டிரான்ஸ்பார்மரின் ஆயில் டேங்கில் மூழ்க வைக்கப்பட்டு ஆட்டோமேட்டிக் வோல்டேஜ் ரெகுலேட்டர் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இம்முறை பெரிய அளவிலான டிரான்ஸ்பார்மர்களில் பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை: