சனி, 31 ஆகஸ்ட், 2013

பொக்கால்ஸ் ரிலே - Buchholz Relay

இது ஒரு பாதுகாப்பு சாதனமாகும். 500 KVA-க்கு மேல் உள்ள டிரான்ஸ்பார்மரில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரிலே ஆனது டிரான்ஸ்பார்மரின் ஆயில் டேங்க் மற்றும் கன்சர்வேட்டரை இணைக்கும் குழாயின் இடையில் பொருத்தப்பட்டிருக்கும்.


இதன் உள்பகுதியில் இரு கோள வடிவத்தில் மிதவைகள் (Float) மேலும், கீழும் நகருமாறு ஹின்ச் (Hinge) போன்ற அமைப்பை ஆதாரமாக கொண்டு பொருத்தப்பட்டிருக்கும். மிதவைகளின் உட்புறத்தில் மெர்க்குரி சுவிட்ச்கள் அமைக்கப்பட்டிருக்கும்.

டிரான்ஸ்பார்மரில் ஏதாவது சிறிய குறை ஏற்பட்டு வைண்டிங் இன்சுலேஷன் ரெசிஸ்டன்ஸ் குறையும் போதும், கோர் அதிக வெப்பமடையும் போதும், ஆயில் அளவு குறைவாக இருக்கும்போதும், ஓவர் லோடு ஆகும் போதும் ஆயில் வெப்பமடைந்து ஆவியாகி சிறிய குமிழ்களாக வாயு (ஏறத்தாழ 70% ஹைட்ரஜன் வாயு) உருவாகி அவை இந்த அமைப்பின் மேல் பகுதியை அடைகிறது. இவ்வாறு உருவான வாயுவின் அழுத்தம் குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் மேல் பகுதியில் உள்ள மிதவை அமைந்த மெர்க்குரி சுவிட்ச் பூர்த்தி அடைந்து அலாரம் அடிக்கிறது. இந்த அலார சப்தத்தின் மூலம் அருகில் உள்ள மின் பணியாளரின் கவனம் ஈர்க்கப்பட்டு குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது.

மேலும் பெரிய குறைபாடுகளான சார்ட் சர்க்யூட் மற்றும் எர்த் குறைபாடு காரணமாக இன்சுலேஷன் ரெசிஸ்டன்ஸ் அளவு மிகவும் குறையும் போதும் ஆபத்தான அளவுக்கு மின்னோட்டம் அதிகரிக்கும் போதும் ஆயில் அதிக வெப்பமடைந்து பைப்பின் வழியாக வேகமாக கன்சர்வேட்டரை அடையும். இந்நிலையில் ஆயில் வேகமாக வெளியேறும் பாதையில் அமைந்துள்ள மற்றொரு மிதவையிலுள்ள மெர்க்குரி சுவிட்ச் பூர்த்தி அடைவதால் அதனுடன் இணைக்கப்பட்ட ரிலே மூலம் சர்க்யூட் பிரேக்கர் இயக்கப்பட்டு மின் இணைப்பைத் துண்டித்து டிரான்ஸ்பார்மரைப் பாதுகாக்கிறது.

டிரான்ஸ்பார்மரில் ஆயில் குறைந்தாலோ, சார்ட் சர்க்யூட் ஏற்பட்டாலோ அல்லது எர்த் குறைவு ஏற்பட்டாலோ முதலில் அலாரம் அடிப்பதோடு, பிறகு டிரான்ஸ்பார்மரை தவிர மற்ற பகுதிகளான கனெக்டிங் கேபிள் போன்றவற்றை பாதுகாக்க பிற பாதுகாப்பு சாதனங்கள் தேவைப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: