சனி, 31 ஆகஸ்ட், 2013

டிரான்ஸ்பார்மர் கூலிங் சிஸ்டம்

Transformer Cooling System Necessity of Cooling
டிரான்ஸ்பார்மர்களில் லாசஸ் ஏற்படுவதால் அதன் வெப்பநிலை அதிகரிக்கிறது. ஆகையால் அதன் வெப்பநிலையைக் குறைக்க குளிராச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதன் எபிசென்சி குறையும்.


காற்றின் மூலம் தானாக குளிர்தல் (Self Air Cooled)
வெளிக்காற்றானது கோர் மற்றும் காயிலின் மீது படுவதன் மூலம் அவற்றில் ஏற்படும் வெப்பம் ஆனது குறைக்கப்படுகிறது. இம்முறை சிறிய டிரான்ஸ்பார்மர்களுக்கு ஏற்றது.

விசையுடன் காற்றை செலுத்தி குளிர்வித்தல் (Forced Air Cooled)
இம்முறையில் ஒரு மின் விசிறி மூலம் காற்றை விசையுடன் கோர் மற்றும் காயிலின் மீது செலுத்துவதால் வெப்பம் குறைக்கப்படுகிறது. இம்முறை இதர முறைகள் பான்படுத்த முடியாத இடங்களில் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

எண்ணெயில் மூழ்க வைத்து தானாக குளிர்வித்தல் (Oil Immersed Self Air Cooled)
இம்முறையில் டிரான்ஸ்பார்மர் வைண்டிங்கள் ஒரு எண்ணெய் டேங்கில் மூழ்கியிருக்கும்படி வைக்கப்பட்டிருக்கும். டிரான்ஸ்பார்மரின் கோர் மற்றும் வைண்டிங்யில் ஏற்படும் வெப்பம் ஆனது டெங்கிலுள்ள ஆயிலில் கடத்தப்பட்டு, பின்பு ஆயில் குளிர்விக்கப்படுகிறது. டேங்கினுள் உள்ள ஆயிலுடன் தொடர்பு கொள்ளுமாறு வெளிபுறம் குழாய்கள் பொருத்துவதன் மூலம் அல்லது டேங்கில் சுவரை மேடு பள்ளமாக அமைப்பதன் மூலம் வெளிக்காற்றுடன் தொடர்பு கொள்ளச் செய்து ஆயிலின் வெப்பநிலை குறைக்கப்படுகிறது. இம்முறை 300 KVA வரையிலான டிரான்ஸ்பார்மர்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

நீரின் மூலம் குளிர்வித்தல் (Oil Forced Water Cooled)
இம்முறையில் ஆயிலானது ஒரு பம்ப் மோட்டாரை பயன்படுத்தி குழாய்கள் மூலம் வெளியே எடுத்து வந்து குளிர்ந்த நீர் கொண்ட டேங்க் வழியாக கொண்டு செல்லப்பட்டு குளிரச் செய்யப்படுகிறது. பிறகு மீண்டும் டிரான்ஸ்பார்மருக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை: