வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பவர் டிரான்ஸ்பார்மர்

Power Transformer
200 KVA க்கு மேற்பட்ட இவ்வகை டிரான்ஸ்பார்மார்கள் மின் உற்பத்தி நிலையங்களில் மற்றும் துணை மின் நிலையங்களில் டிரான்ஸ்மிசன் லைனின் வோல்டேஜ்-ஐ ஸ்டெப் அப் அல்லது ஸ்டெப் டவுன் செய்யப்பயன்படுகிறது. இவை லோடு நேரத்தில் இணைப்பிலும், லோடு இல்லாத போது இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும். இத்தகைய டிரான்ஸ்பார்மர் புல் லோடுகளில் வேலை செய்யும் போது அதிகபட்ச எபிசென்சி கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய டிரான்ஸ்பார்மரில் வோல்டேஜ் ரெகுலேசன் முக்கியத்துவம் வாய்த்ததாக இருக்காது.

Constructional Details of Power Transformer

செகண்டரி வைண்டிங்
பிரைமரி வைண்டிங்
ஆயில் லெவல் இன்டிகேட்டர்
கன்சர்வேட்டர்
பிரீத்தர்
டிரெயின் காக்
கூலிங் பைப்புகள்
டிரான்ஸ்பார்மர் ஆயில்
எர்த் பாயின்ட்
டெம்பரேச்சர் கேஜ்
எக்ஸ்புளோசன் வென்ட்
ஃபொக்கால்ஸ் ரிலே
செகண்டரி டெர்மினல்கள்
பிரைமரி டெர்மினல்கள்

டிரான்ஸ்பார்மர் டேங்க் (Transformer Tank)
இது இரும்பு அல்லது எக்கினால் செய்யப்பட்ட செவ்வக வடிவ டெங்க் ஆகும். இதில் டிரான்ஸ்பார்மர் ஆயிலை குளிர செய்ய கூலிங் பைப்கள் (பொதுவாக 5 செ.மீ. விட்டம்) அமைக்கப்பட்டிருக்கும். இந்த பைப்கள் உருளை அல்லது தட்டை வடிவில் இருக்கும். இந்த டேங்கினுள் தான் பிரைமரி மற்றும் செகண்டரி வைண்டிங்கள் வைக்கப்பட்டு டிரான்ஸ்பார்மர் ஆயில் நிரப்பப்பட்டிருக்கும்.

கன்சர்வேட்டர் டேங்க் (Conservator Tank)
டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியில் இரும்பு அல்லது எக்கு-ஆல் ஆனா உருளை வடிவ டேங்க் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு கன்சர்வேட்டர் என்று பெயர். இதன் மேல் பகுதியில் குழாய் மூலம் பிரீத்தர் இணைக்கப்பட்டிருக்கும். கீழ் பகுதி குழாய் மூலம் பொக்கால்ஸ் (Buchholz Relay) ரிலேயுடன் டிரான்ஸ்பார்மர் டேங்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும். டிரான்ஸ்பார்மரில் உள்ள ஆயிலின் வெப்பம் அதிகரிக்கும் போது ஆயில் விரிவடைகிறது. இதனால் கன்சர்வேட்டரில் உள்ள ஆயில் மட்டம் உயர்கிறது. ஆயில் அளவைக் காண ஆயில் லெவல் இன்டிகேட்டர் (OIl Level Indicator) கன்சர்வேட்டர் டேங்கில் பொருத்தப்பட்டிருக்கும்.

பிரீத்தர் (Breather)
சிறிய உருளை வடிவமுடைய இது கன்சர்வேட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனுள் கால்சியம் குளோரைடு (சிலிக்கா ஜெல்) நிரப்பப்பட்டிருக்கும். இதன் வழியாக வெளிக்காற்று டிரான்ஸ்பார்மரினுள் நுழையும் போது கால்சியம் குலோரைடு காற்றின் ஈரத்தன்மையை உறிஞ்சிக் கொண்டு சுத்தமான உலர்ந்த காற்றை மட்டும் உள்ளே அனுப்புகிறது. இவ்வாறு செய்வதால் நீல நிறமாக உள்ள சிலிக்கா ஜெல் இளஞ்சிவப்பு (Pink) நிறமாக மாறிவிடுகிறது. ஆகவே இளஞ்சிவப்பு நிறமாக மாறிய சிலிக்கா ஜெல்லை மாற்ற வேண்டும் அல்லது சிலிக்கா ஜெல்லை சூடுபடுத்தி தன் பழைய நீல நிறத்தை அடைந்த பின் மீண்டும் பயன்படுத்தலாம்.

டெம்பரேச்சர் கேஜ் (Temperature Gauge)
இது ஒரு பாதுகாப்பு சாதனமாகும். இது டிரான்ஸ்பார்மர் டேங்கின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் ஆயிலின் வெப்பநிலையை அறிய முடியும்.

எக்ஸ்புளோசன் வெண்ட (Explosion Vent)
 இது ஒரு எமர்ஜென்சி கேஸ் ரிலீஸ்க்கான பாதுகாப்பு சாதனமாகும். ஒரு முனை சிறிது கீழ் நோக்கி வளைந்தவாறு அமைக்கப்பட்ட இந்த பைப்பின் மறுமுனை டிரான்ஸ்பார்மர் டேங்க்யின் மேல் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். இதன் வளைந்த வாய் பகுதியில் டயபிராம் கொண்டு மூடப்பட்டிருக்கும். டிரான்ஸ்பார்மரில் ஏதேனும் சார்ட் சர்க்யூட் காரணமாக ஆயில் அதிக அளவில் வெப்பமடையும் போது அதிக அளவில் கேஸ் உருவாகிறது. இந்த அதிக அழுத்தமான கேஸ் மெல்லிய டயபிராமை உடைத்துக் கொண்டு வெளியேறுவதால் டிரான்ஸ்பார்மர் டேங்க் எந்தவித சேதமும் அடையாமல் தடுக்கப்படுகிறது.

டிரான்ஸ்பார்மர் ஆயில் (Transformer Oil)
டிரான்ஸ்பார்மர்-ல் உள்ள பிரைமரி மற்றும் செகண்டரி வைடிங்களின் இன்சுலேஷனைப் பாதுகாப்பதற்காகவும், வைண்டிங் மற்றும் கோர் மீது ஏற்படும் வெப்ப நிலையைக் குறைப்பதற்காகவும் டிரான்ஸ்பார்மர் ஆயில் பயன்படுகிறது. மிரனால் ஆயில், டிரான்ஸ்பார்மர் ஆயிலாக பயன்படுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை: