சனி, 31 ஆகஸ்ட், 2013

பேரலல் ஆப்ரேசன் ஆப் டிரான்ஸ்பார்மர் - Parallel Operation of Transformer

டிரான்ஸ்பார்மர்-ஐ பேரலல் (Parallel) ஆக இணைப்பதற்கான காரணங்கள்.

அதிக அளவு லோடு (Load) ஐ இணைக்க முடியும். ஒன்றை இயக்க முடியாத போது மற்றதின் மூலம் ஒரு குறிப்பிட்ட சதவிகித லோடுக்கு மட்டும் சப்ளை கொடுக்க முடியும். காலமுறை பராமரிப்பு செய்வது எளிது. புல் லோடு (Full load) அளவிற்கு ஒரு பெரிய டிரான்ஸ்பார்மர் மட்டும் இருப்பின் பராமரிப்பு மற்றும் சிறிய குறைபாடு ஏற்படும் போது சப்ளை முழுவதும் நிறுத்த வேண்டி இருக்கும். அந்த நிலையை தடுப்பதற்காகவும் புல் லோடு அளவிற்கு குறைந்த கெப்பாசிட்டி உடைய டிரான்ஸ்பார்மர்கள் பேரலல் செய்யப்படுகிறது.

நிபந்தனைகள் (Condition)

டிரான்ஸ்பார்மரை பேரலல் செய்வதற்கு முன் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள்.
சமமான அளவு வோல்டேஜ் உடையதாக இருக்க வேண்டும். சமமான அளவு இம்பிடன்ஸ் உடையதாக இருக்க வேண்டும். சிங்கிள் பேஸ் டிரான்ஸ்பார்மர் எனில் பொலாரிட்டியும் 3 பேஸ் டிரான்ஸ்பார்மர் எனில் RYB பேஸ் சீகுவன்சி (Phase Sequency) யும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: