சனி, 31 ஆகஸ்ட், 2013

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9

 மத்திய அரசின் MNRE -ன் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் முகவரியை தெரிந்து கொள்ள கீழே லிங்க் கொடுத்துள்ளேன். இது பி.டி.எஃப் பைல்.இதிலிருந்து உங்கள் ஊரில் அல்லது அருகாமையில் உள்ள டீலர்களை அணுக உங்களுக்கு வசதியாக இருக்கும். இந்த லிங்க்-கை கிளிக் செய்யவும்


இனி மத்திய அரசின் இந்த மானிய திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்படி செயல்படுத்துகிறது என்பதை பார்க்கலாம். 1 வாட்ஸ்-க்கு பாட்டரியுடன் கூடிய சிஸ்டத்திற்கு ரூ.81 /-, பாட்டரி இல்லாத சிஸ்டத்திற்கு ரூ.57 /- என்ற கணக்கில் மானியம் வழங்குகிறது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



தமிழ்க அரசின் "Tamil Nadu Energy Development Agency தான் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இவர்களால் அங்கிகரிக்கப்பட்ட டீலர்களின் விபரப்பட்டியலின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

இந்த பட்டியலில், இந்த திட்டத்திற்காகவே உருவான லெட்டர் ஹெட் கம்பெனிகளும் இருக்கலாம். இவர்களிடம் தரமான பொருட்களையோ அல்லது நியாயமான விலையையோ எதிர்பார்க்க முடியாது. அதோடு இந்த சிஸ்டம் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக்கூடியது. பி.வி மாடுல்ஸ்-களுக்கு 25 ஆண்டு கால உத்திரவாதம் உண்டு. இதை லெட்டர்ஹெட் கம்பெனிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எனவே டீலர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனம் வேண்டும். 

கருத்துகள் இல்லை: