பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 அக்டோபர், 2013

ஏசியை பராமரிப்பது எப்படி

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

ஏசியை சரியாகப் பராமரிக்காவிட்டால் நீண்ட நாள் உழைக்காது. அதோடு, குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புஇருக்கிறது. முறையாகப் பராமரிக்காத ஏசி அதிகம் செலவு வைக்கும். எப்படிப் பராமரிப்பது என்பதை விளக்குகிறார் ஏசி மெக்கானிக் இஜாஸ் அகமது.

வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

இந்தியாவில் 21 சதவிகித தொற்றுநோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்னைகள் எண்ணில் அடங்காதவை. தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துக் குடிப்பதற்கெல்லாம் நம்மில் பலருக்கு நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள வாட்டர் கேன் பயன்படுத்தினாலும்கூட கிருமிகளுக்குப் பஞ்சமில்லை. எங்கும் எதிலும் கலப்படம் என்பது குடிநீரையும் விட்டு வைக்கவில்லை. நல்ல தண்ணீர்என்று உத்தரவாதம் தரக்கூடிய ஒரே வசதி வாட்டர் பியூரிஃபையரில்தான் கிடைக்கிறது. 

குளிர் சாதன பெட்டியை எப்படி பராமரிக்கலாம்?


குளிர்சாதனைப் பெட்டியை எப்போதும் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும். அடுப்புகளுக்கருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து  கசியும் வாய்வானது குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறி உடன் சேர்ந்து விபத்து ஏற்பட  வாய்ப்புள்ளது. சூரிய ஓளி படும் இடத்தில்  குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது.

புதன், 28 ஆகஸ்ட், 2013

எலக்ட்ரிக் சாக்

ஆல்டர்னேட்டர், டிரான்ஸ்பார்மர் இவைகளின் நியூட்ரல் ஆனது எர்த்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மனித உடல் ஒரு மின் கடத்தியாதலால், மின்சாரத்துடன் நம் உடம்பு தொடர்பு கொள்ள நேரிடும்போது, நம் வழியாக மின்னோட்டம் எர்த்தை அடைகிறது. நம் உடலில் மின்தடை அளவு குறைவாக இருப்பதால் மின்னோட்டம் பாய்கிறது. இதன் காரணமாக நமது இதயம், நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்படைகிறது.

மின்னோட்ட அளவைப் பொறுத்து காயங்களோ, இதய செயல்பாடு நிருத்தம் அடைவதோ அல்லது உடனடி மரணமோ ஏற்படலாம்.

பொதுவாக நமது உடலின் மின்தடை அளவு ஈரமாக இருக்கும்போது 1000Ω எனவும், ஈரமில்லாதபோது 80000Ω எனவும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இது உடல்நிலையைப் பொறுத்து சிறிது மாறுபடலாம்.

தொழிற்சாலையில விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்

தொழிற்சாலையில் புகை பிடிப்பதை தவிர்க்கவும், அஜாக்கிரதையாக வீசப்பட்ட புகை வஸ்து ஆபத்தான தீ விபத்தினை உண்டாக்கும். எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் எரிபொருட்களை கொண்டு இயக்கப்படுகின்ற பெட்ரோல் இஞ்சின், டீசல் இஞ்சின் போன்றவைகளின் அருகில் சிகரெட், தீப்பெட்டி, மண்ணெண்ணெய் விளக்கு போன்றவைகளை கொண்டு செல்லக்ககூடாது. உடைந்த மின் சுவிட்சிகளை தொடாதீர், உடனே மாற்ற ஏற்பாடு செய்யவும். மின்சாதனங்களிலோ, மின்சாரம் செல்லும் ஓயார்களிலோ தீப்பிடித்துக் கொண்டால் அந்த தீ விபதிதால் ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்செதத்தை தவிர்க்க உடனடியாக Main Switch-யை off செய்ய வேண்டும். எனவே Main Switch-கள் இருக்கின்ற இடத்தை ஒவ்வொரு தொழிலாளர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செயுங்கள். ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்)-ஐ பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.