எர்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எர்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2013

எர்த்திங் - Earthing

பூமியிலிருந்து 2.5 மீ ஆழத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரோடிலிருந்து கன்டக்டர் வெளியில் எடுக்கப்படும் அமைப்பிற்கு எர்த்திங் என்று பெயர். இதன் மின்னழுத்தம் பூஜ்யமாக இருக்கும்.

எர்த்திங் செய்வதன் அவசியம் (Necessity of Earthing)
மின் பழுது ஏற்பட்டுள்ள இயந்திரங்களையும் மற்றும் கருவிகளையும் தொட நேரிடும் போது ஏற்படும் எலக்ட்ரிக் ஷாக் அல்லது மரணம் இவற்றிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றவும்.

எர்த்திங்கான விதிமுறைகள்

மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செயுங்கள். ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துங்கள். ஈ.எல்.சி.பி. (மின் கசிவு தடுப்பான்)-ஐ பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர். உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விடுங்கள். பழுதுபட்ட மின்சார சாதனங்களை உபயோகிக்காதீர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போடுவதுடன் அதனைக் குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்கவும்.

டபுள் எர்த்திங் - Double Earthing

 ஒன்றுக்கொன்று 15 மீட்டர் இடைவெளிக்கு குறையாமல் இரண்டு எர்த்கள் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு எர்த் ஒயர் கொண்டு இயந்திரங்கள் எர்த் செய்யப்படும்போது ஒரு எர்த் துண்டிக்கப்பட்டிருந்தாலும் மற்றொரு எர்த் மூலம் இயந்திரம் பாதுகாக்கப்படுகிறது.இரண்டு எர்த்கள் பேரலல்-ஆக இணைக்கப்பகும்போது மொத்த எர்த் ரெசிஸ்டன்ஸ் அளவு பாதியாக குறையும்.

எர்த் ரெசிஸ்டன்ஸ்-ஐ குறைக்கும் முறைகள்

Methods of Reducing Earth Resistance

நீர் ஊற்றுவதன் மூலம் (By Pouring Water)
கோடை காலத்தில் எர்த் எலக்ட்ரோட்டை சுற்றி ஈரப்பதம் இல்லாமல் மிகவும் வறண்டு காணப்படுவதால் ரெசிஸ்டன்ஸ் அதிகரிக்கிறது. எனவே உப்பு கலந்த நீரை புனல் வழியாக குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஊற்றி வருவதன் மூலம் எர்த் ரெசிஸ்டன்ஸ் அளவை குறைக்க முடியும். இம்முறையில் ஒரு குறிப்பிட்ட அளவே ரேசிஸ்டன்ஸ்-ஐ குறைக்க முடியும்.