புதன், 28 ஆகஸ்ட், 2013

எர்த்திங் - Earthing

பூமியிலிருந்து 2.5 மீ ஆழத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரோடிலிருந்து கன்டக்டர் வெளியில் எடுக்கப்படும் அமைப்பிற்கு எர்த்திங் என்று பெயர். இதன் மின்னழுத்தம் பூஜ்யமாக இருக்கும்.

எர்த்திங் செய்வதன் அவசியம் (Necessity of Earthing)
மின் பழுது ஏற்பட்டுள்ள இயந்திரங்களையும் மற்றும் கருவிகளையும் தொட நேரிடும் போது ஏற்படும் எலக்ட்ரிக் ஷாக் அல்லது மரணம் இவற்றிலிருந்து மனித உயிர்களைக் காப்பாற்றவும்.



இடி, மின்னலில் இருந்து பெரிய கட்டிடங்கள், டிரான்ஸ்மிஷன் லைன் மற்றும் மின் இயந்திரங்களைப் பாதுகாக்கவும்.

லைன் வோல்டேஜ் மாறாமல் நிலையாக இருப்பதற்காகவும் எர்த்திங் செய்யப்படுகிறது.

Good Earthing
மிக அதிக அளவு மின்னோட்டம் செல்லும் படியாக மிகக் குறைந்த ரெசிஸ்டன்ஸ் கொண்டதாக இருந்தால் அதனை நல்ல எர்த்திங் எனக் கூறுகிறோம். பொதுவாக ஏர்த் ரெசிஸ்டன்ஸ் அளவு 3 Ω க்கும் (பாறைகள் உடைய பகுதி எனில் 8 Ω க்கும்) அதிகமாகாமல் இருக்கவேண்டும். இத்தகைய நல்ல எர்த்திங் அளவு 1 Ω ஆகும்.

கருத்துகள் இல்லை: