செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ஒயரிங் செய்வதற்கான விதிமுறைகள் - Rules for Wiring

ஏசி மற்றும் டிசி சர்க்யூட்கள் தனித்தனியாக ஒயரிங் செய்யப்பட வேண்டும். டிசி சர்க்யூட்டில் +ve ஆனது சிவப்பு நிறத்திலும், -ve ஆனது கருப்பு நிறத்திலும் குறிப்பிடப்பட வேண்டும்.

ஏசி-யில் மூன்று பேஸ்கள் தலா சிவப்பு, மஞ்சள், நீளம் நிறத்திலும், நியூட்ரல் கருப்பு  நிறத்திலும்,  எர்த் பச்சை மற்றும் மஞ்சள் (கிரீனிஸ்-எல்லோ) நிறத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.


250V-க்கு மேல் பயன்படுத்தப்படும் சர்க்யூட்டில் "அபாயம்" என்ற குறியீடுகள் குறிப்பிடப்பட வேண்டும்.

ஒரு லைட்டிங் (Lighting) சப்-சர்க்யூட்டில் 10 பாயின்ட் அல்லது 800 வாட்ஸ் லோடும், பவர் (Power) சப்-சர்க்யூட்டில் 2 பாயின்ட் அல்லது 3000 வாட்ஸ் லோடு வரை தான் இணைக்கப்பட வேண்டும்.

லோடு மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் கணக்கிட்டு அதற்கு தகுந்தவாறு மின் உபகரணங்கள் பொருத்தப்பட வேண்டும்.

உலோகத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து ஒயரிங் உபகரணங்களும் எர்த்திங் செய்யப்பட வேண்டும்.

எர்த் தொடர்பு கடத்தியில் சுவிட்ச் அல்லது பியூஸ் இணைக்கக்ககூடாது.

பியூஸ் யூனிட்டின் அதன் வழியாக செல்லக்கூடிய மின்னோட்ட அளவிற்கு தகுந்த பியூஸ் ஒயர் பொருத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு சப்-சர்க்யூட்டும் டிஸ்ட்ரிபூசன் போர்டிலிருந்து தனித்தனி பியூஸ் வழியாக இணைக்கப்பட வேண்டும்.

தரையிலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் சுவிட்ச் போர்டு (உள் நுழையும் பாதைக்கு இடது கை பக்கமாக) அமைக்கப்பட வேண்டும்.

மின்விசிறிக்கு தரையிலிருந்து 2.75 மீட்டர் உயரத்திலும், லேம்ப்களுக்கு 2.5 மீட்டர் உயரத்திலும் பாயின்ட்கள் அமைக்கப்பட வேண்டும்.

ரவுண்ட் பிளாக் ஆனது இரு ஸ்குருகளால் பொருத்தப்பட வேண்டும்.

மோட்டாருக்கு உரிய மெயின் சுவிட்ச், ஸ்டாட்டர் ஆகியவை பயன்படுத்துவதற்கு ஏற்ற உயரத்தில் அமைக்கப்பட வேண்டும்.

மீடியம் மற்றும் அதற்கு மேற்பட்ட வோல்டேஜ்களில் இயங்கும் இயந்திரங்களுக்கு இரண்டு எர்த்கள் இணைக்கப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: