முந்தைய பதிவில் மூன்று அறைகள் கொண்ட வீட்டிற்கு சிங்கிள் பேஸ் மின் இணைப்பிற்கான வயரிங்கை எவ்விதம் மெயின் போர்டு அல்லது மீட்டர் போர்டில் செய்ய வேண்டும் என்பதை பார்த்தோம். இனி அதே வீட்டிற்கு 3-பேஸ் மின் இணைப்பிற்கு எவ்விதம் வயரிங் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிங்கிள் பேஸ் இணைப்பில் வீட்டின் மூன்று அறைகளுக்கும்(சர்கியூட்) தனித்தனி பியூஸ் யூனிட் வழியாக லைன் சப்ளையை கொண்டு சென்றோம். 3-பேஸ் மின் இணைப்பில், ஒவ்வொரு பேஸ் சப்ளையையும் தனித்தனியாக ஒவ்வொரு அறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வளவுதான். கீழே உள்ள படத்தை பாருங்கள்
இந்த படத்தில் சிகப்பு நிற வயர் P1 , மஞ்சள் நிற வயர் P2 , ஊதா நிற வயர் P3 , கருப்பு நிற வயர் N எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான்கு வயர்களுமே மின்வாரிய சப்ளையை தரும் கேபிளாகும். பொதுவாக இது போன்ற 3 பேஸ் கேபிள்-ஐ 3.5 கோர் பி.வி.சி ஆர்மர்டு பவர் கேபிள் என்று அழைப்பர். இது பற்றி பின்னால் விரிவாக பார்க்கலாம். சிகப்பு, மஞ்சள், ஊதா ஆகிய வயர்கள் வழியாக மூன்று பேஸ் சப்ளையும், கருப்பு வயர் வழியாக நியூட்ரல் சப்ளையும் வரும்.
>
இந்த கேபிள்கள் எப்படி 3பேஸ் மீட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
சிகப்பு வயர் ----- 1 கனெக்டர்
மஞ்சள்---------------3
ஊதா------------------ 5
கருப்பு---------------- 7
என கேபிள்கள் மீட்டரில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விதம் மீட்டரினுள் செல்லும் சப்ளை, அடுத கனெக்டர் வழியாக வெளிவரும். அதாவது 1-வது முனைவழியாக செல்லும் பேஸ் முனை 2 வழியாக வெளிவரும். இதை போலவே 3-4, 5-6, 7-8 என வெளிவரும். இதில் முனை-7 உள்ளே செல்லும் நியூட்ரலுக்கும் , முனை-8 வெளியே வரும் நியூட்ரலுக்கும் ஆகும்.
இனி படத்தை பாருங்கள். முதல் முனை வழியாக செல்லும் பேஸ்(சிகப்பு) இரண்டாவது முனை வழியாக வெளிவந்து மூன்றாவது பியூஸ் யூனிட்டின் கீழ் பக்க முனைக்கு செல்கிறது. மீட்டரின் மூன்றாவது முனை வழியாக செல்லும் பேஸ்(மஞ்சள்), நான்காவது முனை வழியாக வெளி வந்து இரண்டாவது பியூஸ் யூனிட்டின் கீழ் பக்க முனைக்கு செல்கிறது. அதைப்போலவே ஐந்தாவது முனை வழியாக மீட்டருக்குள் செல்லும் பேஸ்(ஊதா), ஆறாவது முனை வழியாக வெளியே வந்து முதல் பியூஸ் யூனிட்டின் கீழ் பக்க முனைக்கு செல்கிறது. ஏழாவது முனை வழியாக மீட்டருக்குள் செல்லும் நியூட்ரல்(கருப்பு) எட்டாவது முனை வழியாக வெளியே வந்து நேரடியாக நியூட்ரல் லிங்குக்கு செல்கிறது.
மூன்று மெயின் பியூஸ் யூனிட்டுக்குள் செல்லும் பேஸ்(சிகப்பு, மஞள்&ஊதா) அந்தந்த யூனிட்டின் மேல்பக்க டெர்மினல் மூலமாக வெளியே வந்து 3-பேஸ் மெயின் சுவிட்ச்சின் மூன்று பியூஸ் யூனிட்டுக்கும் செல்கிறது. மேல்பக்க டெர்மினல்கள் வழியாக அவை செகஷன் பியூஸ் யூனிட்டுக்கு செல்கிறது.
வீட்டின் மூன்று அறைகளில் இருந்து வரும் சப்ளை வயர்களின் (3 பைப்புகள் வழியாக) பேஸ் முனைகள்(சிகப்பு வயர்கள்) முறையே 1,2,3 ஆகிய பியூஸ் யூனிட்களின் (செகஷன் பியூஸ் யூனிட்) மேல்பக்க கனெக்டருடன் இணைக்கப்பட்டுள்ளன. பைப் வழியாக வரும் நியூட்ரல் வயர்கள் நியூட்ரல் லிங்குடன் இணைக்கப்பட்டுள்ளன. அதைப்போலவே பைப் வழியாக வரும் எர்த் வயர்கள்(பச்சை) எர்த் லிங்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது முதல் பேஸ்(சிகப்பு), மீட்டர்-மெயின் கேரியர்- மெயின் சுவிட்ச்- செகஷன் பியூஸ் இவற்றின் வழியாக வீட்டின் முதல் அறைக்கு செல்லும். நியூட்ரல் நியூட்ரல் லிங் வழியாகவும், எர்த் எர்த் லிங் வழியாகவும் செல்லும். இதனால் அந்த அறைக்கு மின் சப்ளை கிடைக்கும். இதைப்போலவே மற்ற இரண்டு அறைகளுக்கும் சப்ளை கிடைக்கும்.
ஏதாவது ஒரு பேஸ் சப்ளை இல்லையென்றால், அது சம்பந்தப்பட்ட அறையில் மட்டும் மின்சாரம் இருக்காது. 3 பேஸ் சப்ளை வாங்கியும் இப்படி ஒரு அறைக்கு மின்சாரம் இல்லையே என யாரும் புலம்பக்கூடாது அல்லவா? இத பிரச்சனையை தீர்க்க ஒரு வழி உண்டு. அதுதான் பேஸ் சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சை பொருத்துவது. இது இருவகைப்படும். 1) கையால் நாமே திருப்பக்கூடிய சுவிட்ச்சு(Manual). 2) ஆட்டோ சேஞ்ச் ஓவர் .
இங்கே காட்டப்பட்டுள்ள படம் கையால் நாமே திருப்பக்கூடிய சுவிச்சை காட்டுகிறது. இது போல 3 சுவிச்சுகளை நாம் பொருத்தினால் எந்த பேஸ் போனாலும் மின்சாரத்தை பெற முடியும்.
கீழே காட்டப்பட்டுள்ள படம், பேஸ் சப்ளை போனால் தானாகவே வேறு பேஸ்-க்கு இணைப்பை மாற்றி மின்சாரத்தை தரக்கூடிய ஆட்டோ பேஸ் சேஞ்சர் ஆகும்.
இவை எப்படி வேலை செய்கிறது, எங்கு பொருத்த வேண்டும், எப்படி இணைப்பு கொடுக்க வேண்டும் என்பதை விளக்க படங்களுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம்.............

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக