சனி, 31 ஆகஸ்ட், 2013

இன்வெர்ட்டர் Vs சோலார் பவர் சிஸ்டம் / காற்றாலை மின்சாரம்

மின்வாரியத்தால் வினியோகிக்கப்படும் மின்சாரத்திற்கு மானிய விலையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் குறைந்த செலவில் அனல் மின் நிலையம், ஹைட்ரோ பவர் மின் நிலையம் இவற்றின் மூலமே மின் உற்பத்தி செய்யமுடியும். தமிழகத்தின் மின் தேவையில் 60%-65% மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதால், சென்னையில் 2 மணி நேரமும் இதர பகுதிகளில் சுமார் 6 மணி நேரமும் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இந்த மின்வெட்டை சமாளிக்கத்தான் எல்லோரும் சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவற்றை பற்றி யோசிக்கிறார்கள் என நினைக்கிறேன்.


இது சரியென்றால் தயவு செய்து சோலார் மின்சாரம், காற்றாலை மின்சாரம் இவற்றை பற்றி யோசிப்பதை விட்டு விடுங்கள். காரணம் இவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அதிக முதலீடு தேவை. உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு மின்வாரிய ரேட்டை விட பலமடங்கு வரும்.

எனவே மின் வெட்டு நேரத்தில், நம் அன்றாட வேலைகள் பாதிக்காமல் இருக்க இன்வெர்ட்டரை பயன் படுத்தலாம். இதன் மூலம் மின் சப்ளை இருக்கும் பொழுது மின்சாரத்தை பாட்டரியில் சேமித்து வைத்து , சப்ளை இல்லாத நேரத்தில் மின்சாதனங்களை இயக்கலாம்.

இன்வெர்ட்டரை வாங்குவதற்கு முன் அதன் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு மின் வெட்டு நேரத்தில் உபயோகப்படுத்தக்கூடிய மின் சாதனங்கள் எவை, அதற்கு தேவையான மின் சக்தி ( வாட்ஸ்) எவ்வளவு, எவ்வளவு நேரம் உபயோகப்படுத்துவோம் என்பதை முதலில் கணக்கிடவேண்டும்.

சென்னையில் வசிப்பவர்களுக்கு:

சென்னையில் காலை6-8, 8-10, 10-12, 12-2, 2-4, 4-6 என ஆறு ஷிப்டுகளில் மின் வெட்டை அமுல் படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் காலை 6 - 12 வரையிலான நேரத்தில் உள்ள ஷிப்ட்டில் தான் சமையல் வேலை செய்வோம். 12-6 மணி வரையிலான நேரத்தில் மின் விசிறி மட்டுமே இயங்க மின்சாரம் தேவை. இதன் அடிப்படையில் நடுத்தர வர்க்கத்தினருடைய மின் தேவையை கீழே பார்ப்போம்.

மிக்ஸி
600 வாட்ஸ் - 15 நிமிடம் ----------------------- = 150 வாட்ஸ்
டியூப் லைட் -2
கிச்சன் 1, ஏதாவது ஒரு அறை -1 - 2 மணி நேரம் = 160 வாட்ஸ்
மின்விசிறி
60 + 80 வாட்ஸ் -- 2 மணி நேரம் ------------ = 280 வாட்ஸ்
(சமையல் அறை எக்ஸ்சாஸ்ட் ஃபேன் 1 =60 வாட்ஸ்
ஏதாவது ஒரு அறை சீலிங் ஃபேன் 1 , 80 வாட்ஸ்)

ஆக மொத்தம் நமக்கு தேவைப்படும் மின்சாரம் (வாட்ஸ்)------ = 590 வாட்ஸ்
அதாவது 600 வாட்ஸ்

ஒரே நேரத்தில் நாம் உபயோகிக்கும் சாதனங்களின் வாட்ஸ்

2 மின்விசிறிகள் (60+80வாட்ஸ்) -------------------------------------------- = 140 வாட்ஸ்
2 டியூப் லைட்டுகள்(40+40) ----------------------------------------------------- = 80 வாட்ஸ்
மிக்ஸி -------------((600வாட்ஸ்) --------------------------------------------- = 600 வாட்ஸ்
ஆக மொத்தம் = 820 வாட்ஸ்
அதாவது 850 வாட்ஸ்(1062.5VA)
இரண்டு மணி நேர மின்வெட்டை சமாளிக்க நமக்கு தேவையான இன்வெர்ட்டர் எது என்பதை பற்றி பார்க்கலாம். இன்வெர்ட்டர் ஒரே நேரத்தில் 850 வாட்ஸ் மின்சாரத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். 850 வாட்ஸ் (1062.5VA). (1வாட்ஸ் என்பது 1.25 VA ஆகும்.) தேவை என்பதை 1000 வாட்ஸ்(1250VA) என அதிகப்படியான திறன் கொண்ட இன்வெர்ட்டரை தேர்வு செய்ய வேண்டும். அதனால் அதிகப்படியான லோடை( மின் சாதனங்களை) அவசர சூழ்நிலையில் இணைக்க முடியும்.

பொதுவாக இன்வெர்ட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் அதன் திறனை வாட்ஸ்-ல் குறிப்பிடாமல் VA என்றே குறிப்பிடுவார்கள். உதாரணத்திற்கு "மைக்ரோடெக்" இன்வெர்ட்டரை எடுத்துக்கொள்வோம். நிறைய மாடல்களில் கிடைக்கிறது. இவை 12 V அல்லது 24V பாட்டரியில் இயங்கக்கூடியது. சில மாடல்களின் விபரத்தை கீழே தந்துள்ளேன்

மைக்ட்ரொடெக் இன்வெர்ட்டர்

UPS SWE2 625 VA -12V
UPS SWE2 875 VA -12V
UPS SWE2 1550VA -24V
UPS 24X7 DG650 - 12V
UPS 24X7 DG 900 -12V
UPS 24X7 DG1600 - 24V

இதில் பச்சை நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்ட மாடல்கள் முறையே 1240 வாட்ஸ், 1280 வாட்ஸ் திறன் கொண்டவை. நம் கணக்கின் படி 1000 வாட்ஸ்-க்கு அதிகமானவை. எனவே இதை தேர்வு செய்யலாம். இவை 24 வோல்ட் பாட்டரியில் இயங்கக்கூடியவை. அதாவது இரண்டு 12வோல்ட் பாட்டரிகளை சீர்ஸ் முறையில் இணைத்தால் அது 24 வோல்டாக மாறும். இரண்டு 100Ah -12V பாட்டரிகளை சீரிஸ்-ல் இணைத்தால் 100Ah -24V பாட்டரியாக மாறிவிடும்.

100Ah மின்சாரத்தில் 50% அதாவது 50Ah மட்டுமே நாம் பயன்படுத்தக்கூடியது. மீதி ரிசர்வ் மின்சாரமாக பாட்டரியிலேயே இருக்கும். 50Ah -24V என்பது 1200 வாட்ஸ் ஆகும். (Ohms Law : Watts = Volt X Amp)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் படி நமக்கு 2 மணி நேர மின் வெட்டை சமாளிக்க 600 வாட்ஸ் தேவை. நமக்கு 1200 வாட்ஸ் கிடைப்பதால் 4-மணி நேரம் அல்லது அதிகமான சாதனங்களை உபயோகிக்க முடியும்.

இன்வெர்ட்டரை பொறுத்தவரை "மைக்ரொடெக்" தரமான உத்தரவாதமான இன்வெர்ட்டராகும். இந்த கம்பெனியின் டீலர்கள், சர்வீஸ் செண்டர் பரவலாக எல்ல இடங்களிலும் இருக்கிறது. நான் மைக்ரொடெக் இன்வெர்ட்டரைதான் உபயோகித்து வருகிறேன். வாங்கி ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை ரிப்பேர் எதுவும் ஆகவில்லை.நன்றாக செயல்படுகிறது.

கருத்துகள் இல்லை: