புதன், 28 ஆகஸ்ட், 2013

தொழிற்சாலையில விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள்

தொழிற்சாலையில் புகை பிடிப்பதை தவிர்க்கவும், அஜாக்கிரதையாக வீசப்பட்ட புகை வஸ்து ஆபத்தான தீ விபத்தினை உண்டாக்கும். எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் எரிபொருட்களை கொண்டு இயக்கப்படுகின்ற பெட்ரோல் இஞ்சின், டீசல் இஞ்சின் போன்றவைகளின் அருகில் சிகரெட், தீப்பெட்டி, மண்ணெண்ணெய் விளக்கு போன்றவைகளை கொண்டு செல்லக்ககூடாது. உடைந்த மின் சுவிட்சிகளை தொடாதீர், உடனே மாற்ற ஏற்பாடு செய்யவும். மின்சாதனங்களிலோ, மின்சாரம் செல்லும் ஓயார்களிலோ தீப்பிடித்துக் கொண்டால் அந்த தீ விபதிதால் ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்செதத்தை தவிர்க்க உடனடியாக Main Switch-யை off செய்ய வேண்டும். எனவே Main Switch-கள் இருக்கின்ற இடத்தை ஒவ்வொரு தொழிலாளர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மின் தீ விபத்து ஏர்ப்ட்டல் தண்ணீரை ஊற்றாதீர். Main Switch-யை உடனடியாக off செய்யயும். மின் தீ விபத்து ஏற்பட்டால் கரியமிலவாயு  தீயனைப்பனை பயன்படுத்தி  தீயை  அணைக்கவும். எண்ணையினால் ஏற்படும் தீயை அணைக்க தீயின்மேல் தண்ணீரை உற்றாதீர். இதனால் தீ மேலும் பரவும் நுரை (foam) தீயணைப்பியை பயன்படுத்தி அணைக்கவும். தொழிலாளரின் ஆடையில் தீப்பிடித்துக் கொண்டால் ஓடாதீர், ஓடினால் தீ வேகமாக பரவும். தரையில் மெதுவாக உருண்டு புரண்டு ஆடையில் பற்றின தீயை அனைத்துக் கொள்ளவும். மேலும் அருகில் தண்ணீர் இருந்தால் தங்கள் மேல் ஊற்றி கொண்டும் தீயை அணைக்கலாம். தொழலாளர்கள் பணியின்போது மதுபானம் அருந்த்தியவராய் இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். தொழிர்சாலையில் தீபிடித்துக் கொண்டால் Main Supply -யை off செய்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது     என்பதை      உறுதிசெய்த        பின்னரே  தண்ணீரை  கொண்டு தீயை அனைக்கவும். 

தரமான பருத்தி ஆடைகளை மட்டுமே தொழலாளர்கள் பணியின்போது அணிய வேண்டும். பாலியஸ்டர் உடைகளை மிக முக்கியமாக அணியக்கூடாது. எல்லாவிதமான தீயனைப்பானையும் இயக்கி தீயை அணைக்கவும், எந்த தீயனைப்பானை எந்த வகையான தீ விபத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தொழிலாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். தீ விபத்துகள் எளிதில் உண்டாகின்ற இடங்களின் அருகே தீயை உடனே அணைப்பதற்கு வசதியாக தீயனைப்பான்கள் கண்டிப்பாக போருத்தப்பட்டிடுக்க வேண்டும்.

தீயை அனைப்பதற்கு வசதியாக தொழிர்சாலையில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட வேண்டும். தீப்பிடித்துக் கொண்டால் தாமதிக்காமல் உடனே தீயணைப்புத் துறைக்கு தெரியப்படுத்தவும், தீயணைப்பு துறையின் தொலைபேசி எண்கள் தொழிலாளர்களின் கண்களில் படும் இடங்களில் எழுதி விதித்திருக்க வேண்டும். தீப்பிடித்துக் கொண்டால் பதற்றமடையாமல் புத்திசாலிதனமாக வேகமாக செயல்படவும். தீ பாதுகாப்பற்ற சூழலில் பணி செயாதீர். அனைத்துப் பணியாளர்கல் மற்றும் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அன்பாக பழகவும், இதனால் மன அழுத்தம் இல்லாமல் எந்த வேலையையும், விபத்தில்லாமல் சிறப்பாக செய்ய முடியும்.

தொழிலாளர்கள் தொழிற்கூடத்தில் பணியில் இருக்கும்போது கண்டிப்பாக தலைக்கவசம் அணியவும். ஒரு தொழிலாளர்மீது மிசாரம் தாக்கினால் உங்கள் கைகளால் அவரை தொடாதீர், Main Switch-யை off செய்து விட்டு அவருக்கு உரிய முதலுதவி (செயற்கை சுவாசம்) அளிக்கவும்.

கருத்துகள் இல்லை: