சனி, 10 ஆகஸ்ட், 2013

வீட்டு வயரிங் - பகுதி.10

மின் பழுதுகளை பற்றியும் அவற்றை நீக்குவது பற்றியும் இனி பார்க்கலாம். பொதுவாக பழுதுகளை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை 1).ஷார்ட் சர்க்கியூட் (Short Circuit), 2). லூஸ் காண்டாக்ட் (Loose Contact), 3).மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகள்.


ஷார்ட் சர்க்கியூட்:
மின்சார பழுதுகளிலேயே மிகவும் ஆபத்தானது இது. இதன் காரணமாகவே தீ விபத்துக்கள் ஏற்படுகிறது. மின்சார வயரிங்களுக்கு பயன்படுத்தப்படும் வயர் செப்பு ன்கம்பியால் ஆனது. முன் காலத்தில் இந்த செப்பு கம்பி ஒற்றை வயராக (Single Strand) இருக்கும். அதாவது 1/18 வயர் என்றால் அதில் 18 கேஜ் கம்பி ஒன்று இருக்கும். 3/20 என்றால் மூன்று 20 கேஜ் கம்பிகள் இருக்கும். 7/20 என்றால் ஏழு 20 கேஜ் கம்பிகள் இருக்கும். இப்படி ஒற்றை கம்பியை உபயோகிப்பதால் ஏற்படும் மின் இழப்பை தவிர்க்க இப்பொழுது பல மெல்லிய கம்பிகள் உபயோகப்படுத்தப்படுகிறது. இது மல்டி ஸ்ட்ராண்ட்(Multi Strand) என அழைக்கப்படுகிறது. 1/18, 3/20,7/20 என்ற அளவுகளில் இல்லாமல் தற்பொழுது மெட்ரிக் சிஸ்டத்தில் 1sq mm, 1.5sq mm, 2.5sq mm, 4sq mm , 6sq mm,10sq mm என்ற அளவுகளில் தயாரிக்கப்படுகிறது.
ஃபினோலெக்ஸ் என்ற நிறுவன தயாரிப்பு வயர்களில் கீழ் கண்டவாறு செப்பு கம்பிகள் பயன்படுத்தப்படுகிறது. இது கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும்.

1sq mm = 32 x 0.2mm (அதாவது 0.2mm கனமுள்ள 32 கம்பிகள்)
1.5sq mm =30 x.0.25mm / 48 x 0.2mm
2.5sq mm =50X0.25 mm / 80x 0.2mm
4sq mm= 56 X0.3mm
6sq mm = 84 X 0.3 mm

வய்ரை சுவிட்ச், சாக்கெட், சீலிங் ரோஸ், ஹோல்டர், பியூஸ் யூனிட் ஆகியவற்றில் இணைப்பு கொடுக்க நுனிப்பகுதியிலுள்ள பிளாஸ்டிக் இன்சுலேஷனை நீக்கி செப்பு கம்பியை வெளியே எடுப்போம். அவற்றை நன்றாக முறுக்கிய பின்பே டெரிமினலுள் நுழைத்து ஸ்குருவை டைட் செய்ய வேண்டும். அவ்வாறு நன்றாக டுவிஸ்ட் செய்யாமல் இணைக்கும் பொழுது ஒரு சில செப்பு கம்பிகள் தனியாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். இவை சப்ளையின் நியூட்ரல் வயரை/ டெர்மினல் இவற்றை தொட வாய்ப்பு ஏற்படும். அச்சமயம் ஷார்ட் சர்க்கியூட் ஏற்படும்.

ஒரு வயரின் மின்சாரத்தை கடத்தும் திறனுக்கு அதிகமான கரண்டை எடுக்கக்கூடிய சாதனத்தை இணைக்கும் பொழுது வயர் சூடாகி, அதன் மீதுள்ள இன்ஸ்சுலேஷன் உருகிவிடும். அப்பொழுது செப்பு கம்பி வெளியே வந்து, அத்துடன் உருகிய நிலையில் இருக்கும் நியூட்ரலை தொட்டு ஷார்ட் சர்க்கியூட் ஏற்படும்.

லூஸ் காண்டாக்ட்
மேலே குறிப்பிட்டபடி வயர் இணைப்பின் பொழுது, கனெக்டருக்குள் வயரின் நுனியை நுழைத்து நன்றாக ஸ்குருவை டைட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத பட்ச்சத்தில் அந்த இணைப்பு லூஸ் ஆகிவிடும். அதனால் மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அப்பொழுது ஸ்பார்க் ஏற்பட்டு வயரிங்கின் பிளாஸ்டிக் இன்சுலேஷன் உருகி தீ விபத்து ஏற்படும்.

மின் சாதன பழுதுகள்
டேபிள் ஃபேன், அயர்ன் பாக்ஸ், ஏர் கூலர், மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்களை பிளக் பாயிண்டில் இணைத்து பயன்படுத்துவது வழக்கம். இவற்றில் ஷார்ட் சர்க்கியூட் அல்லாத பழுது ஏற்பட்டு இருக்குமானால், சாதனம் இயங்காது. ஆனால் மின் சப்ளை இருக்கும். ஷார்ட் சக்கியூட் ஏற்பட்டு இருக்குமானால் அதற்கான செக் ஷன் பியூஸ் யூனிட்டில் பியூஸ் போய் விடும். பியூஸ் வயர் தேவையான அளவுக்கு அதிகமான கனத்தில் போடப்பட்டிருக்குமானால், பியூஸ் போகாமல் வயரின் இன்சுலேஷன் தீ பற்றிக்கொள்ளும். எனவே சரியான அளவு பியூஸ் வயர்களையே பியூஸ் யூனிட்டில் பயன்படுத்த வேண்டும். சரியான அளவு என்றால் என்ன என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். உதாரணத்திற்கு தண்ணீர் மோட்டாருக்கான இணைப்பை எடுத்துக்கொள்வோம். 1 HP மோட்டார் பம்பு என்றால் அது இயங்க தேவையான மின்சாரம் 4 ஆம்பியர்(1HP = 756 Watts. W = V x A ie A=W / V ie 800/230 = 3.75 Amps. அதாவது 4 ஆம்பியர் . இதற்கு 5 ஆம்பியர் பியூஸ் வயரை உபயோகிக்க வேண்டும். MCB என்றால் அதன் குறைந்த பட்ச அளவே 6 ஆம்பியர் என்பதால் 6 ஆம்பியர் MCB-ஐ உபயோகிக்க வேண்டும்.

<br
இனி வயரிங்களுக்கு பயன்படுத்தும் வயர்களின் அளவு, அவ்ற்றின் மின்சாரத்தை கடத்தும் திறன் இவற்றை பார்க்கலாம். கீழே தரமான வயர்களின்
திறன் பட்டியலாக தரப்பட்டுள்ளது.

1. சுவிட்ச் போர்டிலிருந்து டியூப் லைட், லைட் ஹோல்டர், ஃபேன் போன்றவற்றிற்கு 1 sq mm அல்லது 1.5 sq mm வயர் உபயோகப்படுத்தப்படும். இதை லைட் பேஸ் என சொல்லுவார்கள்.
2. சுவிட்ச் போர்டிலிருந்து மேற்குறிப்பிட்ட இணைப்புகளுக்கான பொது நியூட்ரலுக்கு (Common Neutral) 2.5 sq mm வயரை உபயோகப்படுத்தவேண்டும்.
3. சுவிட்ச் போர்டிலுள்ள 5 ஆம்பியர் பிளக் சாக்கெட்டுக்கு 2.5 sq mm வயரை உபயோகப்படுத்த வேண்டும்.
4. கிரைண்டர், மிக்ஸி போன்றவற்றிற்கான பிளக் சாக்கெட் வயரிங்க்கு 2.5 sq mm உபயோகிக்க வேண்டும்.
5. வாட்டர் ஹீட்டர், ஏர் கண்டிஷ்னர் போன்றவற்றிற்கு 4 sq mm வயரை உபயோகிக்க வேண்டும்.
6. பிளக் சாக்கெட், ஏசி பாயிண்ட், ஹீட்டர் கிரைண்டர் போன்ற அனைத்து சாதனங்களுக்கும் உரிய வயரிங்கில் எர்த்துக்கு 1.5 sq mm வயரை பயன்படுத்த வேண்டும்.
7. அனைத்து நியூட்ரலுக்கும் 2.5 sq mm வயரை உபயோகித்தால் போதும்.


அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்...................

கருத்துகள் இல்லை: