சனி, 31 ஆகஸ்ட், 2013

சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8

மத்திய அரசு "Ministry of Renewable Energy - (MNRE)" அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது.நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் National Bank for Agricultural and Rural Development - NABARD" மூலமாகவும், மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. அது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.


 நிதி உதவி தேவைப்படுபவர்கள் நபார்டு வங்கியை  தொடர்பு கொண்டு  விபரங்களை பெற்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மானிய தொகை நீக்கி மீதியுள்ள தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாக வழங்கப்படும். MNRE-யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்தே வாங்கவேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளையும் கடன் வழங்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

MNRE-யால் அங்கீகரிக்கப்பட்ட மாடல்கள், அவற்றின் விலை, அதற்கு கிடைக்கும் மானியம் இவற்றை விளக்கும் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களுக்கு அதில் உபயோகப்படுத்தப்படும் பி.வி. மாடுல்ஸ்(சோலார் பேனல்) வாட்ஸ்சின் அளவை பொருத்து ஒரு வாட்-க்கு ரூ. 108 /- என்ற அளவில் மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

வங்கி கடன் தேவை இல்லை என்றால் நாம் நேரடியாக அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் அல்லது உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்களே மானிய தொகைக்கு ஏற்பாடு செய்வார்கள். வாங்கப்படும் சிஸ்டத்திற்கு MNRE பொறுப்பு கிடையாது. எனவே அவர்களுடைய பட்டியலில் உள்ள நல்ல டீலரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. உத்திரவாதம், சர்வீஸ் ஆகியவற்றை செய்து தருபவராக இருக்கவேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் மிக குறைந்த வாட்ஸ் கொண்டது என்பதால், கிராமப்பகுதி மக்களுக்கே பயன்படும் என நினைக்கிறேன்

அடுத்த பதிவில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள், அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் விபரங்களை தருகிறேன். 370 பக்கங்கள் கொண்ட பி.டி.எஃப் பைலாக என்னிடம் இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் உள்ள டீலர்களின் விபரத்தை தனியாக பிரிக்க வேண்டும். மொத்தமாக உங்களுக்கு தரலாம் என்றால் அதை எப்படி அப்லோடு செய்து லிங்க்-ஐ பெறுவது என தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை: