சனி, 10 ஆகஸ்ட், 2013

ப்ளோரசண்ட் லேம்ப்

இத்தகைய லேம்ப் ஹாட் கேத்தொடு டைப் ஆகும். இவை குறைந்த அழுத்த வகையாக இருப்பதால் நீண்ட கண்ணாடி குழாய் வடிவத்தில் அமைக்கப்பட்டு குழாயின் உட் புறத்தில் புளோரசண்ட் பவுடர் பூசப்பட்டு அதனுள் பதரசமும் சிறிதளவு ஆர்கான் வாயுவும் அடைக்கப்பட்டிருக்கும். சப்ளை கிடைத்தவுடன் துவக்கத்தில் பாதரசம் திரவ நிலையில் இருப்பதால் ஆர்கான் வாயு மூலம் கன்டக்சன் நடைபெறுகிறது. இந்த நீண்ட கண்ணாடி குழாயின் இரு புறத்தில் இரு டங்ஸ்டன் பிளமெண்ட்கள் உள்ளன. டங்ஸ்டன் வெப்பப்படுத்தும் போது அதிக அளவில் எலக்ட்ரான்களை வெளியிடுவதற்காக அதன் மீது பேரியம் ஆக்ஸைடு பூசப்பட்டிருக்கும். டியூப்லைட் ஒளிர துவக்கத்தில் சுமார் 1000 வோல்ட்டும். எரியத் துவங்கிய பின் ஆப்ரேட்டிங் வோல்டேஜ் 110 V கொடுக்க ஒரு சோக் காயிலும், குளோ டைப் ஸ்டாட்டர் ஒன்றும் சீரிஸ்-ஆக இணைக்கப்பட்டிருக்கும்.

இத்தகைய ஸ்டாட்டர் இருவகைப்படும்.

தெர்மல் டைப் ஸ்டாட்டர் (Thermal Type Starter)
குளோ டைப் ஸ்டாட்டர் (Glow Type Starter) 


Glow Type Starter

ஸ்டாட்டரில் இரண்டு பைமெட்டாலிக் எலக்ட்ரோடுகளும், சிறிதளவு ஹீலியம் வாயுவும் அடைக்கப்பட்டிருக்கும். பைமெட்டாலிக் எலக்ட்ரோடுட்டின் ஆயுட் காலத்தைக் கூட்டவும், ரேடியோ இன்டர்பிரன்ஸ்-ஐ குறைக்கவும் ஒரு சிறிய கன்டென்சர், எலக்ட்ரோடுகளுக்கு பேரலல் ஆக இணைக்கப்பட்டிருக்கும். எலக்ட்ரோடுகள் நார்மல் நிலையில் ஓபன் ஆக இருக்கும்.




சுவிட்ச்-ஐ ON செய்தவுடன் சிறிதளவு மின்னோட்டமானது சோக், பிளமென்ட் மற்றும் ஸ்டாட்டரின் ஒரு எலக்ட்ரோடிலிருந்து மற்றொரு எலக்ட்ரோடிற்கு ஹீலியம் வாயு வழியாக பாயத்துவங்கும். ஹீலியம் வாயு வழியாக மின்னோட்டம் பாயத் துவங்குவதால் வெப்பம் ஏற்பட்டு பை-மெட்டாலிக் ஸ்ட்ரிப் வளைந்து ஒன்றை ஒன்று தொடும். இதனால் முழு அளவு மின்னோட்டம் செல்லும். இந்நிலையில் எலக்ட்ரோடு முனைகளுக்கு இடையே வோல்டேஜ் பூஜ்யம் ஆவதால் அவை அடுத்த சில வினாடிகளிலேயே குளிர்ச்சி அடைந்து ஒன்றையொன்று தொடாமல் விலகி இருக்கும். இதனால் சோக் மற்றும் பிளமென்ட் வழியாக செல்லும் மின்னோட்டம் திடீரென தடைப்படுவதனால் சோக்-ல் சப்ளை வோல்டேஜ்-ஐ போல் 4 முதல் 5 மடங்கு வோல்டேஜ் தூண்டப்படுகிறது. ஸ்டாட்டரினால் சோக்கில் தூண்டப்பட்ட ஹை வோல்டேஜ் பிளமென்ட்க்கு கிடைப்பதால் எலக்ட்ரான்கள் ஓட்டம் துவங்குகிறது.

இந்த எலக்ட்ரான்கள் ஆர்கான் மற்றும் மெர்க்குரி வாயுவின் எலக்ட்ரான்களோடு மோதி புற ஊதாக் கதிர்களை (Ultra Violet Rays) ரேடியேட் செய்யும். இத்தகைய கதிர்கள் (Rays) டியூபில் பூசப்பட்டுள்ள புளோரசண்ட்கோட்டிங் மீது மோதி வெளிச்சத்தைக் கொடுக்கிறது. பல்பு ஒளிர துவங்கிய உடன் சோக் ஆனது பேலஸ்ட் போல் செயல்பட்டு குறைந்த வோல்டேஜ்-ஐ கொடுக்கிறது. பல்பு ஒளிர துவங்கிய பின் ஸ்டாட்டரை சர்க்யூட்டிலிருந்து நீக்கினாலும் லேம்ப் தொடர்ந்து ஒளிரும். இவை நிழலற்ற ஒளியை கொடுக்கும். 1 வாட் பவருக்கு 40 லூமன் ஒளி கிடைக்கும்.

பொதுவாக இவை 7500 மணி நேரம் ஒளிரக்கூடியது. ஆனால் ஹை மற்றும் லோ வோல்ட் மற்றும் அடிக்கடி சுவிட்சிங் ஆபரேசன் செய்வதால் அதன் உபயோக காலம் குறைகிறது. ஒவ்வொரு சுவிட்சிங் ஆபரேசனுக்கும் ஏறத்தாள 3 மணி நேரம் டியூப்லைட் லைப் குறைகிறது. 4000 - 5000 மணி நேரம் பயன்படுத்திய பின் டியூபின் வெளிச்ச அளவு 15 முதல் 20% குறைகிறது

கருத்துகள் இல்லை: