சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 24 அக்டோபர், 2013
ஏசியை பராமரிப்பது எப்படி
Labels:
உங்கள் கவனத்திற்கு,
ஏசி,
சிக்கனம்,
சிறப்பு,
டிப்ஸ்,
பராமரிப்பு,
பாதுகாப்பு
ஸ்விட்ச் பாக்ஸ் சிக்கனம் தேவை
Labels:
உங்கள் கவனத்திற்கு,
எலக்ட்ரிக்கல்,
சிக்கனம்,
சிறப்பு,
மின்சாரம்
வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!
இந்தியாவில் 21 சதவிகித தொற்றுநோய்கள் தண்ணீர் மூலமே பரவுகின்றன என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பாதுகாப்பான தண்ணீர் பருகாததால் ஏற்படும் பிரச்னைகள் எண்ணில் அடங்காதவை. தண்ணீரைக் காய்ச்சி, வடிகட்டி, ஆற வைத்துக் குடிப்பதற்கெல்லாம் நம்மில் பலருக்கு நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை. ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள வாட்டர் கேன் பயன்படுத்தினாலும்கூட கிருமிகளுக்குப் பஞ்சமில்லை. எங்கும் எதிலும் கலப்படம் என்பது குடிநீரையும் விட்டு வைக்கவில்லை. ‘நல்ல தண்ணீர்’ என்று உத்தரவாதம் தரக்கூடிய ஒரே வசதி வாட்டர் பியூரிஃபையரில்தான் கிடைக்கிறது.
Labels:
உங்கள் கவனத்திற்கு,
சிறப்பு,
பாதுகாப்பு,
வாட்டர் பியூரி ஃபையர்,
RO sytem
சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...
சிலிண்டர் வாங்கும் போது, முதலில் காலாவதி தேதியை கவனியுங்கள். காலாவதியாகும் நாட்கள் குறித்த குறிப்புகள் சிலிண்டர் கைப்பிடியின் உட்புறமாக எழுதப்பட்டிருக்கும். ஆங்கில எழுத்துக்களில் ஏ, பி, சி மற்றும் டி என அகர வரிசையில் குறித்து அதோடு 2 இலக்க எண் இருக்கும். இந்த ஆங்கில எழுத்துகள் மாதத்தை குறிக்கக் கூடியவை.
Labels:
உங்கள் கவனத்திற்கு,
காஸ் அடுப்பு,
சமையல் எரிவாயு,
சிறப்பு
இடி, மின்னல் நேரங்களில் டிவி, மிக்ஸி, கணினி, போனை பயன்படுத்தாதீர்கள்: மின் ஆய்வாளர் வேண்டுகோள்
இடி மற்றும் மின்னல் நேரங்களில், டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசியை
பயன்படுத்தாதீர்கள் என்று தமிழ்நாடு அரசு தலைமை மின் ஆய்வாளர் பொதுமக்களுக்கு
வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது பருவமழை, புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில்
மின்சார பாதுகாப்பிற்கு பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும். அதன் விவரம் வருமாறு:
சனி, 5 அக்டோபர், 2013
சொந்த தொழில் செய்ய ஆர்வம் உள்ளவரா?
அடிப்படை
மின்னியல் செய்முறை பயிற்சிகள்,மின்சாரம் தயாரிக்கும் முறை, சுவிட்ச் போர்டு,டெஸ்ட் போர்டு, சர்வீஸ் கனெக்சன், டிரான்ஸ்பார்மர், வீட்டுக்கு எர்த் போடும் முறை, வீட்டு சிங்கிள் பேஸ்,த்ரீ பேஸ் வயரிங் மின் இணைப்பு முறைகள், இன்வேட்டர்
இணைப்பு முறைகள், பிளம்பிங்,மோட்டார்
இணைப்பு முறைகள் கற்றுத் தரப்படும். சீலிங் பேன், டேபிள்
பேன், கிரைண்டர், மிக்ஸி, மோட்டார்களுக்கு ரீவைண்டிங் கற்றுத் தரப்படும். அயர்ன்
பாக்ஸ், சீலிங் பேன், டேபிள் பேன்,
எக்ஸாஸ்ட் பேன், கொசுவிரட்டி, சீரியல் லைட், எமர்ஜென்சி லைட், வாட்டர் ஹீட்டர், ப்ரட் ரோஸ்டர், காபி மேக்கர், ப்ளண்டர், ஹேர்
டிரையர், ஹேர் டிரிம்மர், வேப்பரைஸர்,
வேக்ஸ் ஹீட்டர், ரூம் கன்வெக்டர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாஷிங்
மெஷின், ஏர்கூலர், ட்ரில் மெஷின்,
கட்டிங் மெஷின், பொக்கர் மெஷின், தையல் மெசின் மோட்டார், முட்டை மெசின், ஜுசர் மெசின், ரைஸ் குக்கர், கேஸ்
அடுப்பு, கொசு பேட், ஸ்டெப்லைசர்,
பிரஸர் குக்கர் வகைகள், தண்ணீர்
சுத்திகரிப்பான் (RO SYSTEM) போன்றவற்றின் பழுதுகளைக்
கண்டறிதல், பழுது நீக்குதல், சன்டைரக்ட்,
வீடியோகான், ஏர்டெல், பிக்டிவி,
டஸ்டிவி பொருத்துதல் ,கம்பியூட்டர் பேசிக்
போன்றவை கற்றுத் தரப்படும் மற்றும் சின்ன சின்ன புரோஜேக்ட் ஒர்க்ஸ் அனைத்தும்
ஒளிவு மறைவின்றி நேர்முக பயிற்சிகளுடன் கற்றுத் தரப்படும்
தொடர்புக்கு
minsaraulagam@gmail.com
deenzr@gmail.com
மேலும்
உங்களது சந்தேகங்கஙகளையும் அனுப்பலாம்,,,,,, நன்றி....

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013
மின் உபயோகத்தைக் குறைக்க சில டிப்ஸ்
இன்றைய உலகில் கைபேசியில் தொடங்கி கணனி என்று நாம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை நம்பியே இருக்கிறது இதனால் ஏகத்துக்கும் செலவாகும் மின்சாரத்தால் மாசக்கடைசியில் நமது கழுத்தை நெறிக்கிறது மின்சார பில். எனவே மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம்.
வெள்ளி, 28 ஜூன், 2013
மின்சாரம்
விஞ்ஞானம் இல்லாத உலகத்தை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்! பைத்தியம் பிடித்துவிடும்! உலகை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் ஒரே சக்தி விஞ்ஞானம்தான். விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ மின்சாரம் இல்லாமல் சாத்தியமா? இல்லை அல்லவா? எனவே, நவீன உலகில் அனைத்துக்கும் அடிப்படையான பரமாத்மா என்றால் அது மின்சாரம்தான். ஆகவே அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். பயப்படவேண்டாம். ஷாக் அடிக்காத மொழியில் எளிமையாகவே மின்சாரத்தைப் பற்றிய அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளமுடியும். மின்சாரம் என்றால் என்ன என்பது தொடங்கி மின் உற்பத்தி, மின்சார சேமிப்பு வரை அனைத்தைக் குறித்தும் அறிமுகப்படுத்துகிறது இந்த தளம். தொடர்ந்து பார்வையிட்டு பின்னுடம் இடவும் நன்றி,
சனி, 19 ஜனவரி, 2013
மின்சாரத்தைச் சேமிப்பதற்கும் மின் வெட்டு சமயம் இருட்டைச் சமாளிப்பதற்குமான டிப்ஸ்கள் !!!!!
தவிர்க்கவே முடியாதது... தமிழகமும் மின் வெட்டும் என்றாகிவிட்டது!மின்சாரம் இருக்கும் நேரங்களில் அதை அதீதமாகச் செலவழிப்பது, மின் வெட்டு நேரத்தை இன்னும் அதிகரிக்கவே செய்யும். ஆகவே, மின் சிக்கனம் தேவை இக்கணம்.
டாஸ்க் லைட்டிங்’ எனும் முறையைப் பின்பற்றலாம். அதாவது, உங்கள் வேலைக்குத் தேவையான மின்சாரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். உதாரணமாக, படுக்கை அறையில் புத்தகம் படிக்கும் சமயம், மொத்த அறைக்குமான விளக்கை ஒளிரவிடாமல், டேபிள் லேம்ப்பை மட்டும் பயன்படுத்துவது.
செல்போன், லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்தவுடன் அதன் ப்ளக்கை மின்சார இணைப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். என்னதான் சுவிட்சை ஆஃப் செய்தாலும், அதில் மின்சாரம் கடந்துகொண்டேதான் இருக்கும். அதனால் மின்சாரம் விரயமாவதுடன், மின் சாதனப் பொருட்களுக்குச் சேதமும் உண்டாகலாம்.
குளிர்சாதனப் பெட்டியின் 'கன்டென்சர் காயில்’-ஐ வாரம் ஒரு முறை சுத்தப்படுத்துங்கள். அதில் படியும் தூசி, குளிர்சாதனப் பெட்டியின் செயல்பாட்டுத் திறனைக் குறைத்து 25 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.
மேஜை விளக்கினை அறையின் ஓரத்தில் வைக்கவும். அதனால், விளக்கின் ஒளி இருபுறச் சுவர்களிலும் பட்டு பிரகாசமாகப் பிரதிபலிக்கும்.
வீட்டு உபயோகத்துக்கு என்றால், 'டெஸ்க்டாப்’ கணினியைவிட லேப்டாப்பே சிறந்தது. லேப்டாப் கணினியைவிட டெஸ்க்டாப் கணினி ஐந்து மடங்கு அதிகமான மின்சாரத்தை உட்கொள்ளும். ஒருவேளை டெஸ்க்டாப் கணினி வாங்கினாலும், அதற்கு எல்.சி.டி. மானிட்டரையே தேர்ந்தெடுங்கள்.
கணினியில் ஸ்க்ரீன்சேவர்கள் வைத்தால், மின்சாரப் பயன்பாடு குறையும் என்பது தவறு. பயன்பாடு இல்லாத நேரத்தில், மானிட்டரை அணைத்துவிடுவதே சிறந்தது.
வாஷிங் மெஷினின் அதிகபட்சக் கொள்ளவுக்குத் துணிகளை நிரப்புங்கள்.
ப்ரிஜ்ஜின் குளிர்நிலையை 37 டிகிரி முதல் 40 டிகிரிக்குள் செட் செய்துகொள்ளுங்கள்.
திரவப் பொருட்களை மூடிவைத்து பிறகு ஃப்ரிஜ்ஜுக்குள் வைக்கவும். திறந்துவைத்தால், ஃப்ரிஜ்ஜுக்குள் ஈரப்பதம் அதிகமாகும். அதனால், அதிக வேலைப் பளு காரணமாக மின்சாரம் கூடுதலாகச் செலவாகும்.
டிஸ்போஸபிள் பேட்டரிகளைவிட ரீ-சார்ஜ் வசதியுள்ள பேட்டரிகளைப் பயன்படுத்தலாம்.
மின் வெட்டு சமயங்களைச் சமாளிக்க, சந்தையில் என்னவெல்லாம் பொருட்கள் கிடைக்கின்றன...
எமர்ஜென்ஸி ஃபேன்:
டூ இன் ஒன் அல்லது த்ரீ இன் ஒன் ஆகக் கிடைக்கிறது இந்த எமர்ஜென்ஸி ஃபேன். எமர்ஜென்ஸி விளக்கும் ஃபேனும் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனத்தின் விலை 650 முதல் 800 வரை. ஃபேன், விளக்கு மற்றும் எஃப்.எம். ரேடியோ ஆகியவை இணைந்த சாதனம் 1,000 முதல் 1,200 வரை. சார்ஜ் செய்துகொண்டு மின்சாரம் இல்லாத சமயங்களில் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தச் சாதனங்களை முழுமையாக சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு, ஃபேன், விளக்கு, எஃப்.எம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால், நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை இயங்கும். மூன்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் ஒரு மணி நேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும்.
மொபைல் பவர் பேக்-அப்:
மின் வெட்டு சமயம் உங்கள் அலைபேசியை சார்ஜ் ஏற்றிக்கொள்ள உதவும் சாதனம் இது. மின்சாரம் இருக்கும் சமயம் இதை முழுக்க சார்ஜ் செய்துவிட வேண்டும். சுமார் மூன்று மணி நேரங்களில் இது சார்ஜ் ஆகிவிடும். பிறகு, மின்சாரம் இல்லாத சமயம் அலைபேசியில் இந்தச் சாதனம் மூலம் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இரண்டு அலைபேசிகளை இதன் மூலம் சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதன் விலை 1,600 முதல் 2,000 வரை!
மினி இன்வெர்ட்டர்:
வழக்கமான இன்வெர்ட்டரின் மினி வடிவம். இதன் மூலம் லேப்டாப் இயக்கம், மொபைல் சார்ஜ் ஆகியவற்றின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இதன் விலை 2,500 முதல் 3,500 வரை.
சோலார் லேம்ப்:
வெயிலில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருளைப் போக்கும் விளக்குகள் இவை. போட்டோவால்டிக் சோலார் பேனல் மூலம் சார்ஜ் ஆகும் பேட்டரி இந்தச் சாதனத்தின் எல்.இ.டி. விளக்கை ஒளிரவைக்கும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துவிட்டால், இதன் சோலார் பேனல் சக்தியை உள்வாங்கிக்கொண்டு, மின் வெட்டு சமயங்களில் ஆபத்பாந்த வனாக ஒளி கொடுக்கும். முழுக்க சார்ஜ் ஏற்றிக்கொண்ட பிறகு இது சுமார் ஆறு மணி நேரம் வரை ஒளி கொடுக்கும். விலை 500 முதல் 800 வரை!

புதன், 5 செப்டம்பர், 2012
மின்சாதனங்கள்.. உஷார் டிப்ஸ்!
‘மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வே இல்லை. நமக்கு வரமாகக் கிடைத்திருக்கிற மின்சாரத்தை, சாபமாக்கிக் கொள்ளாமல் அதை சரியாகப் பயன்படுத்தும் விதம் பற்றி எடுத்துச் சொல்கிறார்கள் நிபுணர்கள். மின்சாதனப் பொருள்களை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள். மூன்று பின்கள் உள்ள பிளக்&ஐயே பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.
ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்&ல் ‘பின்’ செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்&ஐ வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை. டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது. மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.
முக்கியமான மின்சாதனங்களுக்கு (ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..) தனித் தனியாக ‘எர்த் கனெக்ஷன்’ கொடுப்பது பாதுகாப்பானது. எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் (ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு ‘எர்த்’ கொடுக்கவேண்டும்). கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த் கொடுத்த இடத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.
பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட் பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால், அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும். வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி ‘பின்’களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல ‘பிளக்’குகளை செருகிவைக்கக் கூடாது. தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது. சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும். மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு. எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.
லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது. கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் (தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி), டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும். மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.
பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும். கூடுதல் பாதுகாப்புக்கு E L C B ( Earth Leaker Circle Breaker) என்ற கருவியை மெயின் &ல் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே ‘ஆன்’ ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.’’
மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன். மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர், மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.
மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும். மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது. ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.
மின்சாரம் உடலில் பாய்ந்த உடன் இதயம் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. அதனால், இடது மார்புப் பகுதியை அழுத்தி இதயத்தை இயங்கச் செய்யவேண்டும். அந்த நபர் மூர்ச்சையாகியிருந்தால், வாய் வழியாக செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பிறகு வாய் இறுக்கமாக மூடிக்கொள்ளாதவாறு நீளமான பொருளில் அல்லது ஒரு ஸ்பூனில் துணியைச் சுற்றி பற்களுக்கு இடையே வைத்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)