வியாழன், 24 அக்டோபர், 2013

இடி, மின்னல் நேரங்களில் டிவி, மிக்ஸி, கணினி, போனை பயன்படுத்தாதீர்கள்: மின் ஆய்வாளர் வேண்டுகோள்

இடி மற்றும் மின்னல் நேரங்களில்டி.வி.மிக்ஸிகிரைண்டர்கணினி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தாதீர்கள் என்று தமிழ்நாடு அரசு தலைமை மின் ஆய்வாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது பருவமழைபுயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மின்சார பாதுகாப்பிற்கு பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் விவரம் வருமாறு:

வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டுகளில்ஈ.எல்.சி.பி. என்னும் மின் கசிவு தடுக்கும் கருவியை பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்த்திடுங்கள். உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை மாற்றி விடுங்கள். டி.வி. ஆண்டனாகேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள். மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழைக்காலங்களில் மின் மாற்றிகள்(டிரான்ஸ்பார்மர்கள்)மின்கம்பங்கள்மின்பகிர்வு பெட்டிகள்ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம்.

மழை மற்றும் பெரும் காற்றினால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டும்போதுபோதுமான இடைவெளி விட்டு கட்டவும்.

மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்காதீர்கள். இடி மற்றும் மின்னலின்போதுவெட்டவெளியில் இருக்காதீர்கள்தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் நிற்காதீர்கள். மேலும் மின் கம்பிகள்மின் கம்பங்கள்மரங்கள்உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத இடங்களில் தஞ்சம் அடையுங்கள்.

டி.வி.மிக்ஸிகிரைண்டர்கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை மழை மற்றும் மின்னல் நேரங்களில் பயன்படுத்தாதீர்கள். மின் சர்க்யுட்டுகளில் அளவுக்கு மீறி பளு ஏற்றக் கூடாது. சுவிட்ச் மற்றும் பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது சரியானஅளவு திறன் கொண்டவற்றை பொறுத்த வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அரசு தலைமை மின் ஆய்வாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு தலைமை மின் ஆய்வாளர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக எனது நன்றி
நன்றி- www.nakkheeran.in

கருத்துகள் இல்லை: