பெரும்பாலானோர் டயோடை மல்டிமீட்டர் வைத்தே சோதித்துப் பார்பார்கள் .இந்தமுறையானது மிகவும் நன்றாக எலக்ட்ரானிகல் தெரிந்தவர்கள் மட்டுமே கையாளும் முறையாகும்.
ஆனால் நான் கண்டுபிடித்தது இது மிகவும் எளிது முதலில் மின்தடை1K 1/4w ஒன்று, 9 v battery ஒன்று , LED ஒன்று இவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும். படத்தில் காட்டியவாறு இணைக்க வேண்டும். படத்தில் உள்ளது போல் டயோடை சோதனை செய்யும் போது LED ஆனது எரியும். இப்போது டயோடானது நல்லமுறையில் இருக்கிறது என்று அர்த்தம் .LED ஆனது எரியவில்லை என்றால் டயோடானது நல்லமுறையில் இல்லை என்று அர்த்தம் . இதை வைத்து தெளிவான முறையில் நாம் டயோடை டெஸ்ட் செய்ய முடியும் .
LED = ( Light emitting diode ) ஒளி உமிழும் டையோடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக