மில்க் குக்கர் உபயோகமின்றி இருந்தால் அதில் கொத்தமல்லி காய்கறி, கீரை, முதலியவற்றை வைத்து விசில் பகுதியில் ஐஸ் வாட்டரை ஊற்றி வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடாது.
மிக்ஸியை தரையில் அல்லது மர ஸ்டூலில் வைத்துத் தான் இயக்க வேண்டும். பிளாஸ்டிக் துணியில் வைத்து இயக்க கூடாது. மிக்ஸியை இயக்கும்போது தூசுகளும், தண்ணீரும் அதன் மோட்டாரில் படாமல் இருக்க சுத்தமான உலர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
மிக்ஸியை பருப்பு வகைகள் ஊறவைத்த அரிசி போன்றவற்றை அரைக்கும் போது எல்லாவற்றையும் கொட்டி அரைக்காமல் குறிப்பிட்ட அளவுக்குத்தான் அரைக்க வேண்டும். மிக்ஸி ஜாடியின் பக்கங்களில் உள்ள துகள்களை தள்ளுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பட்டைக் கத்தியை இணைப்பைத் துண்டித்த பிறகு தான் உபயோகிக்க வேண்டும்.
பழவகைகள் வேகவைத்த காய்கறிகள் மாமிசம் போன்றவற்றை மிக்ஸியில் போடுவதற்கு முன் குளிரவைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மிக்ஸியை பராமரிக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக