வீட்டு மின்சார அளவுகள்
இதைப்பற்றி முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன். இதில் நான் அதை விட மிக எளிமையான
முறையில் எழுதியுள்ளேன். சரி பாடத்திற்குப் போவோம் : நாம் அனைவருமே வீட்டு கரண்டு பிள்ளை இரண்டுமாதத்திற்கு ஒருமுறை கட்டுகிறோம். ஆனால் நம்மில் பலபேருக்கு வீட்டில் நாம் எவ்வளவு கரண்டு பயன்படுத்துகின்றோம்
என்று தெரியாது. இரண்டு யூனிட் முற்று
யூனிட் என்று வாய்வழியாக பேசிக்கொள்வோம் ஆனால் யூட் என்றால் என்னவென்று தெரியாது. கவனமாக பாருங்கள்.
முதலில் வீட்டில் நாம் பயன்படுத்தும் light
மற்றும் fan -ன் வாட்ஸ் எவ்வளவு
என்று பார்க்க வேண்டும். light -ன் வாட்ஸ் பார்ப்பதற்கு அந்த light -ன் முகப்பிலே 60watts அல்லது 40watts ஏற்று இருக்கும் . நான்கு 60watts பல்பு மற்று நான்கு 80watts பேன்கள் உங்கள் வீட்டில் நீங்கள் பயன்படுத்தினால் எவ்வளவு கரண்டு வரும்
என்பதைப் பார்ப்போம்.
நான்கு பல்பு 60watts , நான்கு பேன் 80watts
ஒரு பல்பு 60watts என்றால் நான்கு பல்பு
=240watts ஆகும்.
ஒரு பேன் 80watts என்றால் நான்கு பேன் =320watts ஆகும்.
240+320=560 வாட்ஸ் .560watts * 4 மணிநேரம் = 2240watts ஆகும் .
இந்த வாட்சை -1000 த்தால்
வகுக்கவேண்டும் . ஏனென்றால் ஒரு யூனிட் என்பது 1000waats
ஆகும். அப்படிவகுத்தால் நமக்கு 2 .24 யூனிட் கிடைக்கும் அப்படி என்றால் நாம் ஒருநாளைக்கு 2 .24 யூனிட்
பயன்படுத்துகிறோம் ஏற்று அர்த்தம். ஒருமாதத்திற்கு 30*2.24=67.2 யூனிட் ஆகும். 67 .2 யூனிட் ஒருமாதத்திற்கு பயன்படுத்துகிறோம் என்று அர்த்தம். ஒரு யூனிட் 1.80 பைசா என்றால் 67.2 யூனிட்டுக்கு 120.96 ரூபாய் ஆகும்.[67.2 * 1.80=120.96 RS] என்ன நண்பர்களே இதைப்பார்த்து புரிந்துகொண்டு உங்களால்
முடிந்தவரை மின்சாரத்தை சேமியுங்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக