வியாழன், 24 அக்டோபர், 2013

மின்சாரத்தை சிக்கனம் செய்யும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

மின்தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வீடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது சோலார் வாட்டர் ஹீட்டர். வீடுகளின் தேவைக்கு பயன்படுத்த 100 லிட்டர் அளவில் இந்த வாட்டர் ஹீட்டர்கள் உள்ளன. தேவையை பொறுத்து 500 மற்றும் 1000 லிட்டர் கொள்ளவு உள்ள வாட்டர் ஹீட்டர்களும் உள்ளன. தொழில் நிறுவனங்களின் தேவைக்கு 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்டர் ஹீட்டர்கள் உள்ளன.
100 லிட்டர் கொள்ளவு உள்ள வாட்டர் ஹீட்டர்கள் 20,000 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த வாட்டர் ஹீட்டர் மாதம் தோறும் 820 ரூபாய் மின் கட்டணத்தை சேமிக்கிறது. மொத்த செலவையும் இரண்டு ஆண்டு மின் செலவினால் ஈடுகட்ட முடியும். இந்த வாட்டர் ஹீட்டர் 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படும் திறன்கொண்டது. ஆண்டுக்கு 2000 யூனிட் மின்சாரத்தையும், 20 ஆண்டுகளில் 48,000 யூனிட் மின்சாரத்தையும் சேமிக்கிறது. விறகுகளை எரித்து அதிலிருந்து வெளியேறும் 72 டன் கார்பன்டை ஆக்சைடு காற்றில் கலப்பதும் தடுக்கப்படுகிறது.

ஓட்டல்கள், மருத்துவமனைகள், விடுதிகள், ஜவுளி தொழில், உணவு எண்ணெய் நிறுவனங்களில் சுடு தண்ணீர் பயன்பாடு தவிர்க்க முடியாதாக உள்ளது. ஹோட்டல்களில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துவதால் 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. ஜவுளி தொழில் நிறுவனங்களில 80 சதவீத நிறுவனங்கள், விறகுகளை பயன்படுத்துகின்றன. இதில் சோலார் வாட்டர் ஹீட்டர் முறையை பயன்படுத்தும்போது பாய்லருக்கான மொத்த செலவில் 50 சதவீதம் குறையும். வீடுகளில் இந்த அமைப்பை நிறுவ குறைந்த செலவே ஆகிறது. தொழில் நிறுவனங்களில் இதனை அமைக்க வங்கிகள் கடனுதவியும் அளிக்கின்றன.

தொழில் நிறுவனங்களில் 10 சதவீதம், சோலார் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தினால் ஆண்டிக்கு 200 மில்லியன் லிட்டர் எரிபொருள்( டீசல், பெட்ரோல்), 1000 மில்லியன் கிலோவோல்ட் மின்சாரம் மற்றும் நாட்டிற்கு ரூ.2400 கோடி அளவுக்கு சேமிப்பு கிடைக்கும். இந்த சேமிப்பை நமது வீட்டிலிருந்து தொடங்கி வைக்க ஒவ்வொருவரும் முன்வரலாம்.
உங்கள் கருத்துகளை கேள்விகளை பின்னுட்டமிடுங்கள் PLEASE SHARE YOUR COMMENTS (அ) என்னை தொடர்புகொள்ளவும் தொடர்புக்கு MINSARAULAGAM@GMAIL.COM DEENZR@GMAIL.COM

கருத்துகள் இல்லை: