குளிர்சாதனைப் பெட்டியை எப்போதும் காற்றோட்டமான இடத்தில் தான் வைக்க வேண்டும். அடுப்புகளுக்கருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து கசியும் வாய்வானது குளிர் சாதனப்பெட்டியில் இருந்து வரும் சிறு தீப்பொறி உடன் சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சூரிய ஓளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக்கூடாது.
குளிர் சாதனைப்பெட்டியை அடிக்கடி தேவையில்லாமல் திறந்தால் மின்சார செலவு அதிகமாகும். குளிர்சாதனப் பெட்டி ஓசை எழுப்பினால் defrast செய்வதற்கு முன்பு அதிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டால் சுத்தப்படுத்துவது எளிது. குளிர் சாதன பெட்டி ஓசை எழுப்பினால் உடனடியாக மெக்கானிக்கை அழைத்து வந்து சரிபார்க்கவும். ஃப்ரீஸரில் உள்ள ஐஸ்கட்டிகளை எடுக்க கத்தியை கொண்டு குத்தக்கூடாது.
tray யை வைக்கும் முன் ஒரு பழைய காஸ்கட்டை சிறிய கல் உப்பைத் தூவியோ அல்லது எண்ணெய் தடவியோ வைத்தால் எளிதில் எடுக்க வரும். குளிர் சாதன பெட்டியில் சில கரித்துண்டுகளை போட்டு வைத்தால் துர்நாற்றம் மறைந்துவிடும். கீர் வகைகள், பழபாயாசம், போன்றவைகளை விரைவாகக் குளிர்ச்சியாக்க அடி அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்தால் 5 நிமிடங்களில் குளிர்ச்சியாக்கிவிடும்.
குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்களை மூடியே வைக்க வேண்டும். சூடான பொருட்களை வைக்ககூடாது. அப்பளத்தை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துப் பொரித்தால் எண்ணெய் அதிகம் குடிக்காது.
நன்றி - dinakaran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக