மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்சாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 அக்டோபர், 2013

ஸ்விட்ச் பாக்ஸ் சிக்கனம் தேவை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக
தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதுமே மின் தட்டுப்பாடு அதிகம். மின் செலவை குறைப்பதற்கேற்ற வகையில் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.

மின்சாரத்தை சிக்கனம் செய்யும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக

மின்தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க வீடுகளுக்கு மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது சோலார் வாட்டர் ஹீட்டர். வீடுகளின் தேவைக்கு பயன்படுத்த 100 லிட்டர் அளவில் இந்த வாட்டர் ஹீட்டர்கள் உள்ளன. தேவையை பொறுத்து 500 மற்றும் 1000 லிட்டர் கொள்ளவு உள்ள வாட்டர் ஹீட்டர்களும் உள்ளன. தொழில் நிறுவனங்களின் தேவைக்கு 1 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட ராட்டர் ஹீட்டர்கள் உள்ளன.

இடி, மின்னல் நேரங்களில் டிவி, மிக்ஸி, கணினி, போனை பயன்படுத்தாதீர்கள்: மின் ஆய்வாளர் வேண்டுகோள்

இடி மற்றும் மின்னல் நேரங்களில்டி.வி.மிக்ஸிகிரைண்டர்கணினி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தாதீர்கள் என்று தமிழ்நாடு அரசு தலைமை மின் ஆய்வாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது பருவமழைபுயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மின்சார பாதுகாப்பிற்கு பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் விவரம் வருமாறு:

புதன், 16 அக்டோபர், 2013

வீட்டு மின்சார அளவுகள்



 1000watts என்பது 1kwatts ஆகும் (1000watts=1unit).ஒரு மணி நேரத்திற்கு நாம் 1kwh(1000watts) பயன்படுத்தினோம் என்றால் அது 1unit ஆகும்.

1kwtts*1hours=1unit

1wh=1watt*1hour

CHARGE & FLUX உருவாகும் விதம்


பொதுவாக electron  +ve , -ve சார்ஜ்களை கொண்டிருக்கும். E (-VE) ,  P (+VE) is the same atom   இப்படி இருந்தால் negative charge ஆகும் electron- னில் -ve அதிகமாகவும் proton- னில் +ve அதிகமாக இருக்கும் பொது static electric charge உருவாகிறது . இதுவே E(-VE) low and P(+VE) high இப்படி இருந்தாலும் charge உருவாகிறது.

அடிப்படை மின்னியல்

electrical engineering என்பது ஒரு energy யை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எப்படி transfer  செய்வது (one form to another form  one point another point) என்பதை பற்றி படிப்பதாகும் இதில் நன்றாக பார்க்க வேண்டிய மூன்று அடிப்படை       particles: 1.  neutron 2. proton 3. electron என்பனவாகும்.

சனி, 14 செப்டம்பர், 2013

மின்சாரம் என்றால் என்ன ?

மின்சாரமில்லாத ஒரு வாழ்க்கையை எண்ணிப்பார்க்க இயலுமா நம்மால் ?! அப்படி நம் வாழ்க்கையோடு ஒன்றினைந்து விட்ட மின்சாரத்தை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் மின்னணுக்களின் ஓட்டத்தினால் மின்சாரம் (electricity) உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம் மின்சாரம் என்று அழைகின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே (மின்சாரமே)மின்னலுக்கு காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருள் மின்காந்த சக்தியை பெறுகிறது.

மின்சாரம் நின்றுவிட்டால் நான் என்ன செய்வது?

சில வேளைகளில் பாரிய ஒரு புயல்காற்று அல்லது விபத்து ஒன்றினால் மின்சாரம் பாயும் கம்பிகள் சேதமடையும் பொழுதுமின்சக்தி நின்று விடும். மின்சாரத்தை வழங்கும் நிறுவனம் திருத்த வேலைகளைச் செய்வதற்காக மின்வழங்குவதை நிறுத்தி விடும் சந்தர்ப்பத்திலும்பரவலான மின்துண்டிப்பு ஏற்படலாம். மின்சாரத்தை வழங்கும் வியாபார நிறுவனம் முடிந்த அளவு விரைவாக மின்சாரம் மீண்டும் வழங்குவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்யும். இருந்தபோதிலும், மின்சக்தி திரும்புவதற்குச் சில மணித்தியாலங்கள் அல்லது சில நாட்கள் கூட எடுக்கலாம். இப்படியாக மின்சாரம் தடைப்படும் பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும் .

மின்சார சிக்கனம் கட்டாயமாக்கப்படுமா?

By சா.​ ஷேக் அப்துல்காதர் DINAMANI.COM

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பற்றாக்குறை காரணமாக தினமும் 2 மணி நேரம் மின்தடை நடைமுறையில் உள்ளது. மின்சாரப் பயன்பாட்டின் தேவைக்கும், மின்சார உற்பத்திக்கும் இடைவெளி அதிகமாக இருப்பதால் 2000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இது 11 சதவீதப் பற்றாக்குறை என மின்வாரியம் கணக்கிட்டுள்ளது. இதன் காரணமாக நிரந்தரமான மின்தடையை நாம் அனுபவித்து வருகிறோம். இன்றைய சூழலில் ஒரு யூனிட் மின்சாரத்தைச் சேமித்தால் 2 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ததற்கு ஈடாகக் கருதப்படுகிறது.

நம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின் மின் அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நம் வீட்டில் அன்றாடம் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மின்சாதன (எலக்ட்ரானிக்) பொருட்களின் மின்சார அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

நண்பர் ஒருவர் புதிதாக இன்வெர்டர் ( Inverter ) வாங்கி இருப்பதாகவும் வீட்டினுள் எந்த பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துகொள்கிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப்பற்றியும் கேட்டிருந்தார் அவருக்காக மட்டுமின்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நம் வீட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் பொருட்கள் எவ்வளவு மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்க ஒரு தளம் நமக்கு உதவுகிறது.

புதன், 11 செப்டம்பர், 2013

மின்சாரம் தாக்கினால்..?

மையல் அறையில் ஆரம்பித்து குளியல் அறை வரையிலும் மின்சாரத்தில் இயங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. மின்சார விபத்துச் சூழல்களைத் தவிர்ப்பது குறித்தும் முதல் உதவிச் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ராமச்சந்திரன்.  ''பொதுவாக விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது சமயோசிதப் புத்தியோடு மின்னல் வேகத்தில் செயல்பட வேண்டும். மின்சாரத்தின் தாக்கம் எத்தனை அளவு (வோல்ட்) என்பதைப் பொருத்தும் உடலில் மின்சாரம் பாயும் பாதையின் மின் தடைத் திறனைப் பொறுத்தும் ஆபத்தின் அளவுகள் இருக்கும். குளியல் அறை, சமையல் அறை போன்ற ஈரமான சூழலில் உடல் மீது மின்சாரம்

சனி, 7 செப்டம்பர், 2013

மின்சார சேமிப்பு..!!


மின்சாரமே இல்லை அப்புறம் எப்படின்னு கேக்காதீங்க..!! இதை நாம ஒவ்வொருத்தரும் ஃபாலோ பண்ணுனா.. நிச்சயம் மின்தேவை/மின்பற்றாக்குறைய பாதியா குறைக்க முடியும்..!! 

மின்சாரமும் அதை சேமிப்பதற்கான வழிகளும்.


மின்சாரத்தை சேமிப்பது தொடர்பாக நாங்கள் தீர்மானிக்கும் போது இரு காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.தற்போதய மின்சார விலைப்பட்டியல்: பாவிக்கும் மின்சாரக் கூறுகள்( KwH ) மற்றும்,மின்சார பாவிப்பு விகிதம் ஆகியவற்றில் தங்கி உள்ளது. உதாரணத்திற்கு நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மின்சார அலகுகளை 10 நாற்களில் பாவிப்பதற்கும் அதே அளவு மின்சார அலகுகளை 20 நாற்களில் பாவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. 

சனி, 29 ஜூன், 2013

தடையில்லா மின்சாரம் சாத்தியமா? - 2


அணுமின்சாரம் வேண்டுமா? வேண்டாமா? என காரசாரமாக விவாதித்து வரும் இவ்வேளையில் இந்த தடையில்லா நிரந்தர இலவச மின்சாரத்தை பற்றிய பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.இன்று வருடத்தின் பெரும்பாலான நாட்கள் சூரிய ஒளியையே காண முடியாத ஐரோப்பிய நாடுகளில், சூரிய கதிர்களால் செயல்படும் மின்சார சக்தியை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கிலாந்தில் இது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகமோ அனல் பறக்கும் சூரிய ஒளிக்கதிர்களை கொண்டிருந்தும் இந்த சூரிய ஒளிக்கதிர்களால் இயங்கும் மின்சாரத்தை அமல்படுத்தவில்லை.

தடையில்லா மின்சாரம் சாத்தியமா?


தடையில்லா மின்சாரம் சாத்தியமேஎப்படி?

தமிழக மின்சார தடை குறித்து எக்கச்சக்கமாக ஆதங்கப்பட்டு விட்டோம். நம் ஆதங்கத்தை எழுத்துக்களாக கொட்டிவிட்டோம். சரி, இதற்கு தீர்வு என்ன? மக்களாகிய நாம் இது குறித்த நம்முடைய எண்ணங்களை அரசாங்கத்திடம் பகிரலாமே? தடையில்லா மின்சாரம் சாத்தியமா?…. இம்மாதிரியான கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான  கருத்துக்களை முன்வைக்க முயற்சிக்கின்றது இந்த கட்டுரை…. எட்டு மணிநேர மின் வெட்டு தமிழக மக்களுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

மின்சாரம் பற்றிய வரலாறு -5

மின்சார சோதனைகள் 1771 ம் வருடம் ஒரு புது திருப்பு முனை அடைந்தன. லுய்கி கால்வானி என்ற இத்தாலிய உயிரியல் ஆராய்ச்சியாளர் லேடன் குடுவைகளுடன் ஆராய்ச்சி செய்து வந்தார். அவர் உயிரியல் ஆராய்ச்சியில் சில தவளை கால்களுடனும் ஆராய்ச்சி செய்து வந்தார். இவைகளுக்கும் மின்சாரத்துக்கும் ஏதும் தொடர்பு இல்லை. என்ன நடந்தது ? லேடன் குடுவையிலிருந்து ஒரு மின்பொறி ஒரு தவளை காலை தாக்கியது. தாக்கியதும் அந்த தவளை கால் துடித்தது. கால்வானி ஆச்சரியப்பட்டார். உயிருள்ள தசைகள் மட்டுமே இவ்வாறு துடிக்கும். மின்பொறி உயிரற்ற தசைகள் உயிருள்ளது போல் நடக்க வைத்தது. மின்சாரத்துக்கும் உயிருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா ? மின்னல் ஒரு பெரிய மின்சார பொறி என்று ப்ராங்கலின் சோதனையிலிருந்து கால்வானி அறிந்திருந்தார்.

மின்சாரம் பற்றிய வரலாறு -4

minsaraulagamமின்சார சோதனைகளின் செய்தி அட்லாண்டிக் தாண்டி அமெரிக்காவை அடைந்தது. பென்சில் வேனியா என்ற இடத்தில் 1747 ம் வருடம் பெஞ்சமின் பிராங்களின் என்ற அமெரிக்கர் ஒரு லேடன் குடுவையை பெற்றார். எங்கிருந்து மின்சாரம் வருகிறது என்பது அவருக்கு வியப்பு ஊட்டியது. கண்ணாடியை உரசினால் மின்சாரம் நிரம்புகிறது. அது உரசின கையில் இருந்து வந்ததா ? கைக்கு எங்கிருந்து மின்சாரம் வந்தது ? பூமியிலிருந்தா ? பிராங்களின் இதை சோதிக்க விரும்பினார்.

மின்சாரம் பற்றிய வரலாறு -3

கிரேயின் பரிசோதனைகள் செய்தி ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு பரவியது, பிரான்ஸ் நாட்டில் சார்லஸ் பிரான்சில் டூ பே என்ற பிரஞ்சுகாரர் தானே சில சோதனைகளை செய்ய ஆரம்பித்தார். 1733 வருடம் டூ பே ஒரு தக்கையை எடுத்து அதை மெல்லிய தங்கத்தால் பூசினார். அந்த தக்கையை மேலிருந்து ஒரு பட்டு நூலால் தொங்கவிட்டார். தக்கையை ஒரு மின்சாரம் பாய்ச்சப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்ட கம்பியால் தொட்டால் தக்கையின் தங்க முலாம் பகுதி முழுவதும் மின்சாரம் பரவியது தக்கை நல்ல கடத்தி என்பதால் இது நடந்தது. கடத்தியையும் தங்க முலாமையும் பட்டு நூல் மட்டும் தான் தொட்டது. அதனால் மின்சாரம் அதிலிருந்து தப்பிக்க இயலவில்லை.

மின்சாரம் பற்றிய வரலாறு -2

கெரிக்கின் சோதனைக்கு பிறகு மக்களுக்கு மின்சாரத்தின் மேல் ஆர்வம் வந்து அதை பற்றி அறிய ஆரம்பித்தார்கள். ஸ்டீபன் கிரே என்ற ஆங்கிலேயர் தானும் சில சோதனைகளை மேற்கொண்டார். அவர் கண்ணாடியை ‘எலக்டிரிக்’ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார் அது பெரிய அளவிலும் மலிவாக கிடைத்தது. கெரிக்குக்கு கண்ணாடி ஒரு நல்ல ‘எலக்டிரிக்’ என்று தெரிந்து இருந்தால் அவர் அதை உடைத்து இருக்க மாட்டார். கண்ணாடி உபயோகித்து கந்தகத்தை தவிர்த்து இருப்பார். கிரே ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு காலி கண்ணாடி குழாயை தேய்த்தார். அது இறகுகளை ஈர்த்தது தேய்க்கல் மின்சாரம் அதில் ஏறி இருந்தது. கண்ணாடி குழாய் இரண்டு முனைகளிலும் திறந்து இருந்ததால் தூசி முதலியவை அவருடைய சோதனையை கெடுக்கும் என்ற கிரே எண்ணினார். அதனால் இருமுனைகளிலும் கார்க் கொண்டு அடைத்தார். (தக்கை) என்ன ஆச்சரியம் தக்கையும் இறகுகளை ஈர்த்தது.

மின்சாரம் பற்றிய வரலாறு -1

minsaraulagam   இப்போதைய துருக்கியின் மேற்கு கடற்கரை ஓரம் இருந்த நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன் மின்சாரத்தின் கதை ஆரம்பமாகிறது. அந்த இடத்தில் மக்னேசியா என்ற ஒரு நகரம். அங்கு மக்கள் கிரேக்க மொழி பேசினார்கள் . அங்கு ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஆடுகளை பார்த்து கொண்டிருந்தான் கல்சுவர்கள், தடுப்புகள் ஏறுவதற்கு அவன் ஒரு இரும்பு நுனி வைத்த ஒரு கழியை உபயோகித்தான் .