மின்சாரமில்லாத ஒரு வாழ்க்கையை
எண்ணிப்பார்க்க இயலுமா நம்மால் ?! அப்படி நம் வாழ்க்கையோடு ஒன்றினைந்து விட்ட மின்சாரத்தை பற்றி உங்களுக்கு என்ன
தெரியும் ? மின்னணுக்களின் ஓட்டத்தினால் மின்சாரம் (electricity) உருவாகிறது. அல்லது மின்னணு ஓட்டத்தையே நாம்
மின்சாரம் என்று அழைகின்றோம். உதாரணமாக மின்னணுக்களின் ஓட்டமே
(மின்சாரமே)மின்னலுக்கு காரணமாகும். மின்சாரம் ஓர் மின்சுருளில்
பாய்ந்தால் அச்சுருள் மின்காந்த சக்தியை பெறுகிறது.
மின்சாரம் என்பது நம்மை சூழ்ந்துள்ள இயல்பாக ஏற்படும் ஒரு ஆற்றலாகும். மனிதர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இதைப்பற்றி அறிந்திருந்தனர். பண்டைய மனிதர்கள் அதை புரிந்து கொள்ள முடியாத
காரணத்தால் அதை ஒரு மாயாஜாலாமாக கருதியிருந்தனர். அம்பர் எனப்படும் ஒருவகை பிசினை
ஒரு துணியில் தேய்த்து அதை வைக்கோல் துண்டுகள் அருகில் கொண்டு சென்றால் அவற்றை
ஈர்ப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்கள் நிலை மின்சாரம் மற்றும் மின்னல்
போன்றவற்றில் ஏற்பட்ட
மின்சாரத்தின்
விளைவுகளை சுமார் 2500
வருடங்களுக்கு
முன்னரே பதிவு செய்து வைத்துள்ளனர்.
கி.பி. 1600 –ல் தான் முதன் முதலாக டாக்டர் வில்லியம்
கில்பர்ட் என்பவர் ’குறிப்பிட்ட ஒரு சில பொருட்களை அம்பரின் மீது
உரசினால் அது நிலைமின்னூட்டம் பெறுகிறது என்பதை குறிப்பிட ”எலெக்ட்ரிகா” “electrica,” என்ற வார்த்தையை உருவாக்கினார். இந்த
வார்த்தையே பின்பு மின்சாரம் “electricity” என்ற வார்த்தை உருவாக காரணியாக அமைந்திருக்கலாம். மின்சாரமும், காந்த சக்தியும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பினைந்தவை. காந்த சக்தியை பற்றி
விரிவாக தனி பாடத்தில் காண்போம். மின்சாரத்தைப்பற்றி புரிந்து கொள்ள இன்னொரு
முக்கியமான இப்பிரபஞ்சத்தின் அடிப்படை பொருளாகிய மிகச்சிறிய பொருள் ஒன்றைப்பற்றி
தெரிந்து கொண்டாக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக