கடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட ) . இது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . சில தினங்களுக்கு முன்பு இந்த மின்சார சேமிப்பை குறித்து எனது நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் , இந்த கட்டுரை எழுதலாம் என முற்ப்பட்டேன் .
மின்சாரம் பொதுவாக யூனிட் என்ற அளவுகளில் நாம் அறிந்திருக்கிறோம் . அந்த யூனிட் அளவுகளுக்கு தான் நாம் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்துகிறோம் . எனவே யூனிட் என்றால் என்ன என்று நாம் அறிந்து கொள்ளுவோம் . மின்சாரத்தை நாம் WATTS ( பல்புகளில் பார்ப்போமே ) என்ற அளவுகளில் கணக்கிடுகிறோம் . ஒரு மணி நேரத்தில் 1000 வாட் மின்சாரம் பயன்படுத்தினால் அதுவே ஒரு யூனிட் என்று அழைக்கப்படுகிறது . இதை ஒரு கிலோ வாட் என்றும் அழைக்கலாம் .
சரி இப்பொழுது கவனிப்போம் . குண்டு பல்புகள் குறைந்தது 40W , 60W , 100 W என்ற அளவுகளில் இருக்கிறது என்று வைத்து கொள்ளுவோம் . நீங்கள் 40W பல்பு ஒன்றை 25 மணி நேரம் எரியவிட்டால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் ( 40 x 25 = 1000 ). ஆனால் அதே நேரம் 18 W CFL பல்பு உபயோகப் படுத்தினால் கிட்டத்தட்ட 55 மணி நேரம் எரியவிட்டால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் ( 55 .5 x 18 = 1000 ). . எனவே குண்டு பல்புகளை நாம் மாற்றினால் நாம் மின்சாரம் சேமிக்கலாம் . இந்த சேமிப்பு இருந்தால் போதுமே , அணுமின் நிலயங்கள் எதற்கு என்பது தான் எனது நண்பர்களின் வாதம் .
சரி அப்படியானால் நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களை ஏன் நீங்கள் நினைத்து பார்க்கவில்லை என்று கேட்டேன் . அவர்களுக்கு விளங்கவில்லை . நமது வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு ஆகும் மின்சார செலவை கணக்கிட ஆரம்பித்தேன் . சில உங்கள் பார்வைக்கும் ...
Appliances
|
Watts
| |
Electric Heater
|
-
|
5000
|
Refrigerator - 20 Cu Ft
|
-
|
800
|
Freezer - 20 Cu Ft
|
-
|
550
|
Well Pump ½ HP
|
-
|
1000
|
Well Pump 1HP
|
-
|
2000
|
Microwave Oven 800W
|
-
|
1200
|
Microwave Oven 1000W
|
-
|
1500
|
Coffee Maker
|
-
|
900
|
Toaster
|
-
|
900
|
Computer
|
-
|
250
|
TV - 32" Color
|
-
|
170
|
Stereo System
|
-
|
140
|
Clothes Iron
|
-
|
1100
|
Washing Machine
|
-
|
1000
|
Electric Clothes Dryer
|
-
|
6000
|
Hair Dryer
|
-
|
1600
|
Air Conditioning 1 Ton
|
-
|
2000
|
Air Conditioning 2 Ton
|
-
|
3000
|
Air Conditioning 3 Ton
|
-
|
4500
|
Window A/C
|
-
|
2000
|
Ceiling Fan
|
-
|
100
|
Vacuum Cleaner
|
-
|
780
|
Central Vacuum
|
-
|
1750
|
இப்பொழுது சொல்லுங்கள் , நமது தேவை எவ்வளவு என்று ..? யாரும் பதில் சொல்லவில்லை . நாம் சேமித்தாலும் நமது தேவையை எட்டமுடியாத தொலைவில் உள்ளோம் என்று சொன்ன போது கொஞ்சம் புரியாமல் விழித்தார்கள் . நான் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன் .
இந்தியாவில் சராசரி தனிமனித பயன்பாடு 800 Kwh அதாவது 800 யூனிட் ஒரு ஆண்டிற்கு . ஆனால் அமெரிக்காவில் 5000 யூனிட்டும் , ஐரோப்பிய நாடுகளில் தனி மனித பயன்பாடு சராசரியாக 10000 யூனிட்டும் உள்ளது . உலக அளவில் சராசரியாக தனிமனித பயன்பாடு கிட்டத்தட்ட 3000 யூனிட் . இந்தியா அந்த 3000 யூனிட் சராசரி பயன்பாட்டை அடைய வேண்டும் எனில் 500 GWe மின்சாரம் தேவை . அதாவது 500000 MWe மின்சாரம் தேவை . ஆனால் தற்பொழுது இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களின் அளவும் 182 GWe மின்சாரம் மட்டுமே . அதாவது 182000 MWe மின்சாரம் மட்டுமே . இன்னும் நமது தேவை கிட்டத்தட்ட 150 சதவீதம் அதிகம் என்ற பொழுது ஒரு திகைப்பு அவர்களுக்கு ஏற்ப்பட்டது .
உடனே கேட்டார்கள் ... அப்படியெனில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் எல்லாம் சரியாகி விடுமா என்று ... அவர்கள் கேள்வியில் நியாயம் உள்ளது . நமது தேவையை இன்னும் அதிகம் சந்திக்கலாம் . 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுவதால் அணுமின் நிலையங்கள் நிறைந்த பலனை கொடுக்கும் என்ற பொழுது எப்படி என்ற கேள்வி தான் மேலோங்கி நின்றது .
சரி ... விளக்குவோம் என்று ஆரம்பித்தேன் . கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி அளவு 1000 MWe என்பது நமக்கு தெரியும் . 1 MWe என்றால் 1000 கிலோ வாட் / மணி அதாவது ஆயிரம் யூனிட் . ஒரு மணி நேரத்தில் 1000 MWe என்றால் 10 லட்சம் யூனிட் ( அதாவது 1000 x 1000 ). அப்படியெனில் 24 மணி நேரத்தில் அதாவதுஒரு நாளில் 240 லட்சம் ( அதாவது 24000000 யூனிட் ) யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வல்லமை கொண்டது . அதாவது ஒருமாதத்தில் 72 கோடி யூனிட் ( 720000000 ) மின்சாரம் தயாரிக்க முடியும் . இப்பொழுது புரிகிறதா .... வளரும் இந்திய மின் தேவைக்கு அணுமின் நிலையங்களின் பங்கு என்றபொழுது .... அனைவரும் ஒருமித்து சொன்ன பதில் ஆம் என்பது ......
மின்சாரத்தை சேமிப்போம் , அணுமின் நிலையங்களை நாம் வரவேற்ப்போம் . எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம் என்பது இந்த இந்தியனின் கோரிக்கை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக