வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 ஜூன், 2013

மைக்கேல் ஃபாரடே (1791 - 1867)


 இது மின்சார ஊழி. இந்த ஊழியைச் சில சமயம் விண்வெளி ஊழி என்றும் சில சமயம் அணு ஊழி என்றும் அழைப்பர். எனினும், விண்வெளிப் பயணம், அணு ஆயுதங்கள் ஆகியவற்றின் உள்ளார்ந்த முக்கியத்துவம் என்னவாக இருப்பினும் அவை நமது அன்றாட வாழ்வில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி விடவில்லை. ஆனால், மின்சாதனங்களை நாம் அன்றாடம் இடைவிடாமல் பயன் படுத்துகிறோம். உண்மையைக் கூறுவதாயின், நவீன உலகில் எந்த ஒரு தொழில் நுட்பமும், மின்சாரத்தின் பயன்பாட்டைப் போல் நம் வாழ்வில் ஊடுருவிப் புகுந்து பரவியிருக்கவில்லை.

மின்சாரம் பற்றிய வரலாறு -5

மின்சார சோதனைகள் 1771 ம் வருடம் ஒரு புது திருப்பு முனை அடைந்தன. லுய்கி கால்வானி என்ற இத்தாலிய உயிரியல் ஆராய்ச்சியாளர் லேடன் குடுவைகளுடன் ஆராய்ச்சி செய்து வந்தார். அவர் உயிரியல் ஆராய்ச்சியில் சில தவளை கால்களுடனும் ஆராய்ச்சி செய்து வந்தார். இவைகளுக்கும் மின்சாரத்துக்கும் ஏதும் தொடர்பு இல்லை. என்ன நடந்தது ? லேடன் குடுவையிலிருந்து ஒரு மின்பொறி ஒரு தவளை காலை தாக்கியது. தாக்கியதும் அந்த தவளை கால் துடித்தது. கால்வானி ஆச்சரியப்பட்டார். உயிருள்ள தசைகள் மட்டுமே இவ்வாறு துடிக்கும். மின்பொறி உயிரற்ற தசைகள் உயிருள்ளது போல் நடக்க வைத்தது. மின்சாரத்துக்கும் உயிருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா ? மின்னல் ஒரு பெரிய மின்சார பொறி என்று ப்ராங்கலின் சோதனையிலிருந்து கால்வானி அறிந்திருந்தார்.

மின்சாரம் பற்றிய வரலாறு -4

minsaraulagamமின்சார சோதனைகளின் செய்தி அட்லாண்டிக் தாண்டி அமெரிக்காவை அடைந்தது. பென்சில் வேனியா என்ற இடத்தில் 1747 ம் வருடம் பெஞ்சமின் பிராங்களின் என்ற அமெரிக்கர் ஒரு லேடன் குடுவையை பெற்றார். எங்கிருந்து மின்சாரம் வருகிறது என்பது அவருக்கு வியப்பு ஊட்டியது. கண்ணாடியை உரசினால் மின்சாரம் நிரம்புகிறது. அது உரசின கையில் இருந்து வந்ததா ? கைக்கு எங்கிருந்து மின்சாரம் வந்தது ? பூமியிலிருந்தா ? பிராங்களின் இதை சோதிக்க விரும்பினார்.

மின்சாரம் பற்றிய வரலாறு -3

கிரேயின் பரிசோதனைகள் செய்தி ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு பரவியது, பிரான்ஸ் நாட்டில் சார்லஸ் பிரான்சில் டூ பே என்ற பிரஞ்சுகாரர் தானே சில சோதனைகளை செய்ய ஆரம்பித்தார். 1733 வருடம் டூ பே ஒரு தக்கையை எடுத்து அதை மெல்லிய தங்கத்தால் பூசினார். அந்த தக்கையை மேலிருந்து ஒரு பட்டு நூலால் தொங்கவிட்டார். தக்கையை ஒரு மின்சாரம் பாய்ச்சப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்ட கம்பியால் தொட்டால் தக்கையின் தங்க முலாம் பகுதி முழுவதும் மின்சாரம் பரவியது தக்கை நல்ல கடத்தி என்பதால் இது நடந்தது. கடத்தியையும் தங்க முலாமையும் பட்டு நூல் மட்டும் தான் தொட்டது. அதனால் மின்சாரம் அதிலிருந்து தப்பிக்க இயலவில்லை.

மின்சாரம் பற்றிய வரலாறு -2

கெரிக்கின் சோதனைக்கு பிறகு மக்களுக்கு மின்சாரத்தின் மேல் ஆர்வம் வந்து அதை பற்றி அறிய ஆரம்பித்தார்கள். ஸ்டீபன் கிரே என்ற ஆங்கிலேயர் தானும் சில சோதனைகளை மேற்கொண்டார். அவர் கண்ணாடியை ‘எலக்டிரிக்’ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தினார் அது பெரிய அளவிலும் மலிவாக கிடைத்தது. கெரிக்குக்கு கண்ணாடி ஒரு நல்ல ‘எலக்டிரிக்’ என்று தெரிந்து இருந்தால் அவர் அதை உடைத்து இருக்க மாட்டார். கண்ணாடி உபயோகித்து கந்தகத்தை தவிர்த்து இருப்பார். கிரே ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு காலி கண்ணாடி குழாயை தேய்த்தார். அது இறகுகளை ஈர்த்தது தேய்க்கல் மின்சாரம் அதில் ஏறி இருந்தது. கண்ணாடி குழாய் இரண்டு முனைகளிலும் திறந்து இருந்ததால் தூசி முதலியவை அவருடைய சோதனையை கெடுக்கும் என்ற கிரே எண்ணினார். அதனால் இருமுனைகளிலும் கார்க் கொண்டு அடைத்தார். (தக்கை) என்ன ஆச்சரியம் தக்கையும் இறகுகளை ஈர்த்தது.

மின்சாரம் பற்றிய வரலாறு -1

minsaraulagam   இப்போதைய துருக்கியின் மேற்கு கடற்கரை ஓரம் இருந்த நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன் மின்சாரத்தின் கதை ஆரம்பமாகிறது. அந்த இடத்தில் மக்னேசியா என்ற ஒரு நகரம். அங்கு மக்கள் கிரேக்க மொழி பேசினார்கள் . அங்கு ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஆடுகளை பார்த்து கொண்டிருந்தான் கல்சுவர்கள், தடுப்புகள் ஏறுவதற்கு அவன் ஒரு இரும்பு நுனி வைத்த ஒரு கழியை உபயோகித்தான் .

வியாழன், 20 டிசம்பர், 2012

ஒரு சின்ன வரலாறு மின்னியல்(Electricity) பற்றி:-

6 ஆம் நூற்றாண்டு

மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்ஸ் என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்ஸ் அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், அப்பொருது அம்பரிருந்து 'கிரிக் கிரிக்' என்ற சத்தம் எழும், பின்பு அவர் அம்பரை குவிக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் அல்லது மர இழைகள் மீது ஒரு செமீ மேல் பிடிப்பார், அப்போது வைக்கோல் அல்லது மர இழைகள் அம்பரை நோக்கித் துள்ளும். இருட்டான அறையில் இச்சோதனையை நடத்தினால், சில நேரங்களில் அம்பரில் இருந்து தீப்பொறிகள் எழும். இலத்தீனில் அம்பரை எலக்டிரான் என்ழழைப்பர். இச்சொல்லே திரிந்து மின்சாரத்தை ஆங்கிலத்தில் "எலட்டிரிசிட்டி" என அழைக்கின்றனர். தேல்ஸ் கண்டுபிடித்த மின்சக்தியை நாம் இப்பொழுது நிலை மின்சக்தி என அழைக்கிறோம்.

1720 ல்:- ஸ்டீபன் கிரெ(Stephen Gray) என்பவர் நிலை மின்னூட்டங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தமுடியும் என நிரூபித்தார்

1750 ல்:- பெஞ்ஜமின் பிராங்க்ளின் அவர்க்ளின் ஒரு Fluid theory of Electricity மின்னியலின் ஆறிவியல் பூர்வமான செயல்முறைகளை ஒருமுகப்படுதியது. இதுவே புதிய மின்னியல் அடிப்படைக் கொள்கைகள்உருவாக அடித்தளம் அமைத்தது.

1800ல்:- அலெஸ்ஸான்ட்ரோ வொல்டா அருடைய புதிய கண்டுபிடிப்பாக மின்கலத்தை மீண்டும் பாரசீகர்களுக்கு பின் 1800 ஆண்டுகள் களித்து அறிமுகப்படுதினார்.

1820ல்:- ஹான்ஸ் ஓர்ஸ்டட் மின்காந்த தன்மையை தன்னுடைய பிரபலமான "காம்பஸ்(Compus) மற்றும்மின்சாரம் பாயும் கடத்தி"(current carying wire) சோதனை மூலம் கண்டறிந்தார்.

ஆண்ட்ரு -மேரி ஆம்பியர் மின்சாரம் மற்றும் மின்காந்தம் இவற்ரை வரையறை செய்தார். மேலும் மின்னோட்ட்டத்தை அளவிடும் "அம்மீட்டர்" என்னும் கருவியையும் கண்டறிந்தார்.

ஜார்ஜ் ஓம் மின்சாரம் பறிய ஆய்வுகளை வெளியிட்டார், அதில் அவரது புகழ் பெற்ற ஓம்'ன் விதி (Ohm's law) யும் அடக்கம்.

1830ல்:- மைக்கெல் பாராடெ ஆட்டத்தில் இறன்கினார். மனிதகுலதின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்த நவீன மின்னிய்ல் யுகம் தொடங்கியது....!

" No Cithy with out Electricity"


இன்னும் வரும்...