சனி, 29 ஜூன், 2013

மின்சாரம் பற்றிய வரலாறு -3

கிரேயின் பரிசோதனைகள் செய்தி ஐரோப்பாவின் மற்ற பகுதிகளுக்கு பரவியது, பிரான்ஸ் நாட்டில் சார்லஸ் பிரான்சில் டூ பே என்ற பிரஞ்சுகாரர் தானே சில சோதனைகளை செய்ய ஆரம்பித்தார். 1733 வருடம் டூ பே ஒரு தக்கையை எடுத்து அதை மெல்லிய தங்கத்தால் பூசினார். அந்த தக்கையை மேலிருந்து ஒரு பட்டு நூலால் தொங்கவிட்டார். தக்கையை ஒரு மின்சாரம் பாய்ச்சப்பட்ட உலோகத்தால் செய்யப்பட்ட கம்பியால் தொட்டால் தக்கையின் தங்க முலாம் பகுதி முழுவதும் மின்சாரம் பரவியது தக்கை நல்ல கடத்தி என்பதால் இது நடந்தது. கடத்தியையும் தங்க முலாமையும் பட்டு நூல் மட்டும் தான் தொட்டது. அதனால் மின்சாரம் அதிலிருந்து தப்பிக்க இயலவில்லை.


மின்சாரம் தக்கையில் இருந்து போக வேண்டுமென்றால் தக்கையை ஒரு உலோகத்தால் தொட்டால் போதும். மின்சாரம் உடனே தக்கையில் இருந்து வெளியேறியது. டூ பே இன்னொரு தக்கையை இதே மாதிரி மின்சார படுத்தி அதையும் ஒரு பட்டு நூலால் மேலிருந்து தொங்கவிட்டார். இப்போது இரண்டு பட்டு நூல்கள் ஒரு இடைவெளியில் தொங்கின. இரண்டு தக்கைகளும் காற்றினால் அலையாமல் நேராக தொங்கின. டூ பே யின் எண்ணம் ஒரு தக்கை மின்சாரப் படுத்தினால் அது மற்ற தக்கையை தன்பால் இழுக்கும். அவர் நினைத்தபடியே நடந்தது. அவர் ஒரு கண்ணாடி குச்சியை பட்டினால் உரசினார். அது மின்சார மயமானது அதனை தக்கையில் தொட்டார். மின்சாரம் தக்கைக்கு பரவியது.

மின்சாரப் படுத்திய தக்கை மின்சாரப் படுத்தாத தக்கையை இழுத்தது. நேராக தொங்காமல் பட்டு நூல்கள் ஒன்றையொன்று நோக்கி ஆடின. மின்சாரம் அவைகளை  ஈர்த்தது ஒன்றையொன்று நோக்கி நகர்ந்தன. இரண்டு தக்கைகளுமே மின்சார படுத்தினால் அவைகளின் ஈர்ப்பு இரண்டு மடங்காக வேண்டும் இல்லையா ? பட்டு நூல் தொங்கும் கோணம் அதிகமாகும். டூ பே அந்த முயற்சி செய்தார். ஆனால் இரண்டு  தக்கைகளை மின்சாரப் படுத்தினாலும் ஈர்ப்பு சக்தி மாறவில்லை. ஆச்சிரியம் ! ஈர்ப்பு இரண்டு மடங்கு ஆவதற்கு பதில் அவை ஒன்றையொன்று ‘தள்ளின’ ! ஈர்ப்பு மறுப்பாக மாறிவிட்டது. இது எப்படி ? மின்சாரம் இப்படிதான் குணம் கொண்டதா ? அல்லது உபயோகப் படுத்திய பொருள்களில் ஏதாவது தவறு ஏற்பட்டதா ?

அவர் உபயோகப் படுத்திய பொருள்களை மாற்றி பார்த்தார். ரெஸின், உல்லன் நூல் உபயோகப்படுத்தினார். மறுப்பு மறுபடியும் ஏற்பட்டது. டூ பே ஒரு கண்ணாடி குச்சியை பட்டு நூலால் உரசி மின்சார மயமாக்கினார். அதை தக்கையில் தொட்டார் பிறகு ரெஸின் குச்சியை பட்டினால் உரசி அதனால் இன்னொரு தக்கையை தொட்டார். இப்போது மறுபடியும் அவை ஈர்ப்பு சக்தி காண்பித்தன. மின்சார மயமான தக்கைகளும் மீண்டும் ஈர்த்தன.

இரண்டு வகையான மின்சாரங்கள் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு டூ பே வந்தார். கண்ணாடி தேய்வு மின்சாரம் ஒரு ரகம், ரெஸின் தேய்வு மின்சாரம் இன்னொரு வகை. ஒரே வகையான மின்சாரம் ஒன்றையொன்று விலக்கியது. வேறு வகையான மின்சாரம் ஒன்றையொன்று ஈர்த்தது. இதை மேலும் டூ பே ஆராய்ந்தார். மின்சாரமாக்கப்பட்ட கண்ணாடி குச்சியினால் தக்கையை தொட்டார். தக்கை இப்போது மின்சார மயமானது. கண்ணாடியை மெல்ல மெல்ல தக்கையிடம் கொண்டுவந்தார். தக்கையும் கண்ணாடியும் ஒரே வகை மின்சாரம் கொண்டிருந்தன. அதனால் ஒன்றையொன்று விலக்கின. தக்கையை ரெஸின் கொண்டு மின்சார மயமாக்கினால் எல்லாம் எதிர் மாறாக நடந்தது. ரெஸின் அதை விலக்கியது, கண்ணாடி அதை ஈர்த்தது. டூ பே வேறு பல பொருட்களை உபயோகித்து சோதனைகளை செய்தார். எல்லா பொருட்களும் இரண்டு வகை மின்சார மயமாக்கல் படியே நடந்தன.

கண்ணாடியால் மின்சார மயமாக்கப்பட்டால் அது கண்ணாடியை விலக்கியது. ரெஸின் மூலம் மின்சார மயமாக்கினால் அது ரெஸினை விலக்கியது. இரண்டு வகை மின்சாரம் மட்டும் தான் மூன்றாவதாக ஒன்றுமில்லை. மற்ற சோதனையாளர்கள் சிறு சிறு பொருட்களை மின்சார மயமாக்கும் முறையை கண்டுபிடித்தனர். 1745 வருட காலகட்டத்தில் உலோக முலாம் பூசப்பட்ட கண்ணாடி குடுவையை உபயோகித்து மின்சார சோதனைகளை தொடர்ந்தனர். கண்ணாடி குடுவையின் வாயில் ஒரு தக்கை வைக்கப்பட்டது. உலோக கம்பியும் உலோக சங்கிலியும் உள்ளே இருந்த உலோக முலாமை தொடுமாறு இருந்தன. மின்சார மயமாக்கப்பட்ட ஒரு கம்பியை குடுவையில் இருந்த உலோக கம்பியை தொடுமாறு செய்தால் மின்சாரம் குடுவைக்குள் போகும். ஆனால் மின்சாரம் அதிலிருந்து வெளியேற முடியாது.

minsaraulagamகண்ணாடியும் தக்கையும் அரிதில் கடத்திகள் என்பதால் மின்சாரம் வெளியேற முடியாது. கண்ணாடி கம்பியை மறுபடியும் மின்சார மயமாக்கினால் மேலும் மின்சாரம் குடுவையில் பாயும். இதை மேலும் மேலும் செய்தால் கண்ணாடி குடுவையில் அடர்த்தியாக மின்சாரம் இருக்கும் இந்த மாதிரி கண்ணாடி குடுவை மின்சாரம் ஆராய்ச்சி செய்தவர், ஹாலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் பீட்டர். அவர் ஹாலந்து நாட்டின் லேடன் பல்கலைகழகத்தில் வேலை செய்தார். அதனால் அந்த குடுவை லேடன் குடுவை என்ற பெயர் பெற்றது குடுவையில் மேலும் மேலும் மின்சாரம் செலுத்தினால் மின்சாரம் வெளியே பாய முயற்சி செய்யும் பெட்டியில் துணி அடைப்பது போல் மேலும் மேலும் துணி அடைப்பது பெட்டியை மூடுவதற்கு தடை செய்யும். அழுத்தி மூடினால் ஒரு சமயம் பெட்டி மூடி தீடிரென்று திறந்து கொள்ளலாம்.

அப்படி மூடி திறந்தால் சில துணிகள் வெளியே வரும். லேடன் குடுவையும் அதே மாதிரி மின்சாரத்தை வெளியே தள்ளலாம் என்று எண்ணம் வந்தது. முதலில் லேடன் குடுவை ஆராய்ச்சி செய்தவர்கள் அதை முழுவதுமாக மின்சார மயமாக்கினால் அது ஆபத்தானது என்று அறிந்தார்கள். கவனக்குறைவாக அந்த உலோக கம்பியை தொட்டால் அதன் வழியாக மின்சாரம் வெளியே பாய்ந்து அதை தொட்ட கையில் பாய்ந்தது. ஆராய்ச்சியாளர்கள் பீட்டர் முதலில் இதை அறியாமல் முழுவதும் மின்சாரம் பாய்ச்சபட்ட லேடன் குடுவையை தொட்டார். மின்சாரம் அவரை தூக்கி எறிந்தது. இரண்டு நாட்கள் அவர் படுக்கையில் இருக்க வேண்டி இருந்தது. அதற்கு பிறகு அவர் லேடன் குடுவையை வெகு கவனமாக உபயோகித்தார்.

minsaraulagam லேடன் குடுவையில் இருந்து வேறு வகையில் மின்சாரம் பாயும் பொழுது என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்க்க முடிந்தது. லேடன் குடுவை மெலிதான  கம்பிகள் வழியாக மின்சாரத்தை செலுத்தினால் கம்பிகள் சூடாகி உருகின.  தொடாமலே மின்சாரம் பாயுமா ? லேடன் குடுவையை ஒரு உலோக கம்பி பக்கத்தில்  மெல்ல கொண்டு வந்தால் குடுவை மின்சாரத்துக்கும் கம்பிக்கும் நடுவில்  மின்சாரம் அரிதில் கடத்தியான காற்று உள்ளது. ஆனால் காற்று இருக்கும்  அகலம் குறைய குறைய அதன் கடத்தாத சக்தி குறைகிறது. அதாவது மெல்லிய காற்று  பாளம் மின்சாரம் பாயம் எதிர்ப்பு சக்தியை வெகு குறைவான அளவே கொண்டுள்ளது. மிக மிக அருகில் வந்தால் மின்சாரம் காற்று பாளத்தில் தடுக்க படுவதில்லை மின்சாரம் காற்று வழியாகவும் பரவுகிறது.

இது மாதிரி லேடன் குடுவை மின்சாரம் காற்றின் கடத்தாத சக்தியை மீறி பாயும் பொழுது மின்சாரம் காற்றை சூடாக்குகிறது. இந்த சூட்டினால் காற்று ஜொலிக்கிறது. சூடாக்கப்பட்ட காற்று விரிவடைகிறது, மீண்டும் அருகே வரும் பொழுது  ஒரு சிறு  வெடிப்பு சப்தம் போல் செய்கிறது. லேடன் குடுவை மின்சாரத்தை இவ்வாறு காற்று வழியாக செலுத்தும் போது ஒரு சிறு வெடிப்பும், ஒரு பொறியும் ஏற்படுகின்றன.

கருத்துகள் இல்லை: