சனி, 29 ஜூன், 2013

மின்சாரம் பற்றிய வரலாறு -1

minsaraulagam   இப்போதைய துருக்கியின் மேற்கு கடற்கரை ஓரம் இருந்த நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன் மின்சாரத்தின் கதை ஆரம்பமாகிறது. அந்த இடத்தில் மக்னேசியா என்ற ஒரு நகரம். அங்கு மக்கள் கிரேக்க மொழி பேசினார்கள் . அங்கு ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் ஆடுகளை பார்த்து கொண்டிருந்தான் கல்சுவர்கள், தடுப்புகள் ஏறுவதற்கு அவன் ஒரு இரும்பு நுனி வைத்த ஒரு கழியை உபயோகித்தான் .


ஒரு நாள் அவன் ஒரு கல்மேல் இரும்பு நுனியை தொட்டான் .கழி சிறிது ஒட்டிக்கொண்ட மாதிரி இருந்தது. கல்லில் ஒட்டிக்கொள்ளும் வஸ்து எதாவது உள்ளதோ ? விரலால்த் தொட்டுபார்த்தான். ஒட்டிக்கொள்ளும் படி ஒன்றும் இல்லை. இரும்பு நுனி மட்டுமே ஒட்டிக்கொண்டது. ஆடு மேய்க்கும் சிறுவன் இந்த கல்லை பற்றி மற்றவர்களிடம் சொன்னான் . அதே இடத்தில் தேல்ஸ் என்ற அறிஞர் வசித்து வந்தார்.இன்றைக்கு அவர் விஞ்ஞானி என்று கூறப்படுவார். மேக்னேசியாவின் கல் பற்றி கேள்விப்பட்டு அந்த மாதிரி ஒருகல்லை கொண்டுவர செய்தார் .அந்த கல் இரும்பு  பொருள்களை   மட்டுமே ஈர்த்தது . மற்றவை ஒன்றுமே அது ஈர்க்கவில்லை .தேல்ஸ் அதை 'மக்னெடிக் கல்' என்று அந்த நகரத்தின் பெயரையே சூட்டினார்.  நாம் இன்று அதை ஆங்கிலத்தில் மேக்னெட் ( தமிழில் கந்தகம்) என்று சொல்கிறோம்.

தேல்ஸ் அதை ஊர் பெயர்க் கொண்டு மேக்னடிக் கல் என்றார். ஆங்கிலத்தில் நாம் அதை மேக்னட் என்றும் தமிழில் கந்தகம் என்றும் சொல்கிறோம். ஒரு கல் எப்படி மற்ற பொருள்களை ஈர்க்க முடியும் என்று தேல்ஸ் வியப்படைந்தார். அது ஏன் இரும்பை மட்டும் ஈர்க்க வேண்டும் என்பதும் புதிராக இருந்தது. மற்ற வஸ்துக்களில் இந்த ஈர்ப்பு சக்தி உள்ளதா என்று தேல்ஸ் ஆராய்ந்தார் அவர் ஆராய்ந்த ஒரு பொருள் கண்ணாடி போன்ற “ஆம்பர்” எனப்படும் ஒரு பொருள் கிரேக்க மொழியில் அதற்கு எலக்ட்ரான் என்ற பெயர். ஆம்பர் இரும்பை ஈர்க்கவில்லை ஆனால் அதை தேய்த்தால் ஒரு நறுமணம் வந்தது தேய்த்தபிறகு அது நூல், பருத்தி, பறவை இறகு, உடைந்த மரத்துண்டுகள், இவைகளை ஈர்த்தது. தேல்ஸ் தாம் செய்த ஆராய்ச்சிகளை எழுதி வைத்தார். அதை படித்தவர்கள் அதை பற்றி சிந்தித்தனர். கந்தககற்கள் உபயோகமாய் இருந்தன. மாலுமிகள் அதை உபயோகித்தினர். ஒரு இரும்பு ஊசியை கந்தகக்கல்லினால் தேய்த்தால் அந்த ஊசியும் கந்தக சக்தி பெற்றது.

minsaraulagamகந்தக சக்தி பெற்ற இரும்பு ஊசி இரும்பை ஈர்த்தது. அதற்கு மற்ற உபயோகம் திசை காட்டுதலில் வந்தது. ஒரு கந்தக ஊசியை தண்ணீரில் மிதக்க விட்டாலோ அல்லது அது சுதந்திரமாக திரும்புமாறு செய்தாலோ அதன் ஒருமுனை வடதிசையை காட்டியது. இந்த மாதிரி திசை காட்டும் கந்தக ஊசியை மாலுமிகள் எந்த திசையில் போகிறோம் என்று கரையே தெரியாத போது கூட அறிய உதவியது. அதை “காம்பஸ்” என்று அழைத்தனர். கி.பி. 1400 – களில் மாலுமிகள் பெருங்கடல்களை கடக்கும் போது திசை காட்ட அவைகளை வெகுவாக உபயோகித்தனர் இந்த காம்பஸ் திசை உதவி இல்லாமல் கொலம்பஸ் 1492 ல் அமெரிக்காவுக்கு போவது வெகு கஷ்டமாய் இருந்திருக்கும். சரி, ஆம்பர் கதை என்ன ? அதற்கு கந்தகம் போல் அவ்வளவு உபயோகம் இல்லை என்பதால் மக்கள் அதைப்பற்றி வெகுவாக பொருட்படுத்தவில்லை. கி.பி. 1570 – ல் கில்பர்ட் என்ற ஆங்கிலேயர் காந்தத்துடன் ஆராய்ச்சிகள் செய்தார். ஆம்பர் பற்றியும் சிந்தித்தார். அதை தேய்த்தால் அது ஏன் பொருள்களை ஈர்க்கிறது.

ஆம்பர் வெகு அழகாய் இருந்ததால் அதை நகை செய்வதற்கு உபயோகித்தனர். மற்ற நகைப் பொருள்களை கில்பர்ட் தேய்த்து அவை பொருள்களை ஈர்க்குமா என்று ஆராய்ந்தார். வைரக்கல், நீலவைரக்கல் இவைகளும் ஆம்பர் போல் பொருள்களை ஈர்த்தன. மற்ற சில படிக கற்களும் பொருள்களை ஈர்த்தன. ஆம்பர் கிரேக்க மொழியில் எலெக்ட்ரம் என்றும் சொல்லப்பட்டது. அதனால் கில்பர்ட் தேய்த்தால் ஈர்க்கும் ஆம்பர் போன்றப் பொருட்களை “எலக்ட்ரிக்ஸ்” என்று பெயரிட்டார். இவைகள் எல்லாவற்றுக்கும் ஆம்பர் போன்ற ஈர்ப்பு சக்தி இருந்தது. ஈர்ப்பு சக்தியை எப்படி கூப்பிடுவது ? தேய்த்த பொருட்களிடம் பேப்பர் போன்ற சிறு பொருட்களை ஈர்த்து பிடித்துக் கொள்ளும் ஒரு அதிசய சக்தி எப்படி வந்தது ? கி.பி. 1650 – ல் வால்டர் சார்லெடான் இதை “எலக்டிரிசிடி” என்று பெயரிட்டார். இந்த காலத்தில் ஐரோப்பிய மக்களுக்கு இயற்கை சத்ரிகளின் மேல் ஆர்வம் இருந்தது. ஏன் என்ற கேள்வியுடன் அவர்கள் இயற்கையின் வினோதங்களை ஆராய ஆரம்பித்தனர்.

ஆம்பரை தேய்த்தால் அதற்கு ஈர்ப்பு சக்தி வருகிறது. வெகு அழுத்தமாக தேய்த்தால் வெகு வலுவான ஈர்ப்பு சக்தி வருமா ? ஆம்பரிடம் “எலக்டிரிசிடி” மேலும் வலுவாக வருமா ? இந்த ஆராய்ச்சியை ஆட்டோ வான் கெரிக் என்ற ஜெர்மன் செய்தார். அவர் ஆம்பரை வெகு அழுத்தமாக ஒரு துணியை வைத்து தேய்த்தார். அதை விரல்களின் நடுவில் செலுத்திய போது சிறு வெடிப்பு சத்தம் போல் கேட்டது. ஆம்பரை விரல்களின் நடுவில் அழுத்தினால் இருட்டில் ஒரு சிறு வெளிச்சம் தெரிந்தது. சிறு ஒசையுடன் சிறு வெளிச்சமும் தெரிந்தது.

ஆம்பர் வஸ்து எலக்டிரிசிடியை வைத்துக் கொள்ள முடிய வில்லையோ ? அதனால் அது வெளியே வழிந்ததோ ? அதனால் சிறு ஓசையும், வெளிச்சமும் தெரிந்ததோ ? ஆம்பர் சிறு வெளிச்சம், சிறு வெடி ஓசை மட்டும் கொடுத்தால் வான் கிரிக் திருப்தி அடையவில்லை. பெரும் வெளிச்சம், சத்தம் உண்டாக்க பெரிய அளவு ஆம்பர் தேவைப்பட்டது. அதில் அதிக “எலக்டிரிசிடி” தங்கும் ஆனால் ஆம்பர் விலை உயர்ந்த பொருளாக இருந்தது.

கெரிக் மஞ்சள் கந்தகத்தை பல சிறு கட்டிகளாக உடைத்து ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு சூடாக்கினார். கந்தகம் உருகி திரவமாகியது. கெரிக் மேலும் மேலும் கந்தகம் சேர்த்து குடுவை முழுவதும் கந்தக திரவம் இருக்குமாறு செய்தார் அதில் ஒரு மர கைப்பிடி போட்டார். பிறகு கந்தகத்தை ஆரவிட்டார். ஆரிய கந்தகம் குடுவையில் ஒரு பந்தாக மரப்பிடியுடன் இருந்தது. கெரிக் கண்ணாடியை உடைத்து கைப்பிடியுடன் கூடிய கந்தக மஞ்சள் பந்தை எடுத்துக்கொண்டார். அந்த கந்தக பந்தை ஒரு மரப்பெட்டியில் வைத்தார். மர கைப்பிடியால் அந்த பந்தை உருட்ட முடிந்தது.

அந்த பந்தை கைப்பிடிக் கொண்டு உருட்டி இன்னொரு கையால் அதை தேய்த்தார். அது கந்தக பந்தை “எலக்டிரிசிடி” (மின்சாரம் என்று இப்போது சொல்கிறோம்) கொண்டு நிறைந்தது. அதுவரை யாருமே அவ்வளவு மின்சாரத்தை சேகரித்தது இல்லை. மின்சாரம் சேகரித்த கந்தக பந்து சிறு வெடி சத்தம், சிறு வெளிச்சம் இரண்டும் செய்தது. ஒளி பகல் வேளையிலும் பார்க்கும் அளவுக்கு வெளிச்சமாக இருந்தது. கெரிக் முதன் முதலில் “மின்சாரம்” செய்வதற்கு “தேய்க்கும் இயந்திரம்” செய்தவர் ஆவார்.

கருத்துகள் இல்லை: