வெளி நாடுகளில் அநேகமாக எல்லா சாதனங்களையும் ஒருவர் யாருடைய உதவியும் இல்லாமல் தானாக செய்து பார்க்கும் வகையில் தெளிவான விளக்கப்படங்களுடன் Do-It-Yourself என்ற ரக புத்தகங்கள் கிடைக்கின்றன. அதற்கு தேவையான பொருட்களும் தொகுப்பு (Kit Form) வடிவில் கிடைக்கின்றன. நம் நாட்டின் சாபக்கேடு, இவை எதுவுமே இங்கு கிடைப்பதில்லை.
சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் சிஸ்டத்தை செய்வது, ராக்கெட் தொழில் நுட்பத்தை போல சிரமமானது என்பது போன்ற ஒரு தவறான எண்ணத்தை, அரசிடம் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன. இதற்கு காரணம் 100% லாபம் சம்பாதிக்கும் நோக்கமே ஆகும். அரசும், பொதுமக்களை நம்பாமல் இது போன்ற இடை தரகர்கள் மூலம் அமைத்தால்தான் மானியம் உண்டு என நிபந்தனையை வைத்திருப்பதும் மற்றொரு காரணம் ஆகும். இதை உடைத்து, இதை அமைப்பது பாட்டி வடை சுடுவதை விட சுலபமான வேலை என்பதையும், அவர்கள் சொல்லும் ரேட்டில் பாதி செலவில் தரமான முறையில் நீங்கள் செய்ய முடியும் என்பதையும் புரியவைக்கவே இந்த Do-It-Yourself என்ற இந்த தொடர் பதிவு. இந்த சோலார் சிஸ்டம் 48V. டி.சி மின்சாரத்தில்இயங்கும் வகையில் அல்லது 24V டி.சி மின்சாரத்தில் இயங்கும் வகையில் அமைக்கலாம். முதலில் 24V-ல் இயங்கக்கூடிய சிஸ்டத்தை அமைப்பதை பார்ப்போம்.
பேனலின் பின்பக்கத்தில், மேல் புறத்தில் சதுர வடிவிலான க்ருப்பு நிறத்தில் வயருடன் உள்ள ஒரு பெட்டி இருக்கிறது. இது ஜங்ஷன் பாக்ஸ் ஆகும். இதன் உட்புறம் பேனலிருந்து வெளி வரும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் இதிலுள்ள கனெக்டரில் பொருத்தப்பட்டிருக்கும். அதோடு பாதுகாப்புக்கான பை-பாஸ்(By-Pass) டையோடுகளும்(Diode) இணைக்கப்பட்டிருக்கும். வெளியே வரும் வயரின் நுனிகளில் பாஸிடிவ் வயரின் நுனியில் MC4 கனெக்டரின் MALE பகுதியும், நெகடிவ் வயரின் நுனியில் FEMALE கனெக்டரின் பகுதியும் இணைக்கப்பட்டிருக்கும். MC4 கனெக்டரின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலே உல்ள படத்தில் முதலில் இருப்பது Female பகுதியின் வெளிப்பகுதியாகும். அடுத்து இருக்கும் மெட்டல் பின் என்பது வயரை இணைக்கும் உலோகத்திலான பின் ஆகும். 3-வது ஆக இருக்கும் படம் Male Part-ன் வயரை இணைக்கும் உலோகப்பகுதியாகும். 4-வது ஆக இருப்பது Male Part-ன் வெளிப்பகுதிஆகும்.
இனி, சோலார் பேனலின் பின்பக்க அமைப்பை விளக்கும் படத்தை(Block Diagram) பாருங்கள். அதில் JB என குறிப்பிடப்பட்டுள்ளது ஜங்ஷன் பாக்ஸ் ஆகும். அதிலிருந்து வெளி வரும் P, N என்ற வயர்கள் முறையே சோலார் பேனலில் உற்பத்தி ஆகும் டி.சி கரண்டை தரும் வயர்களாகும். பாசிடிவ் வயரின் நுனி MC4 கனெக்ட்டரின் Male கனெக்ட்டருடனும், நெகடிவ் வயர் Female கனெக்ட்டருடனும் இணைக்கப்பட்டிருக்கும். இதை உறுதிபடுத்த இரண்டு வழிகள் உண்டு. மல்டி மீட்டரை உபயோகித்து (Polarity) தெரிந்து கொள்ளலாம். அல்லது, ஜங்ஷன் பாக்ஸ்-ன் மூடியை கழட்டி உள்ளே பார்த்தால், வயர் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்குரு-ன் அருகில் +, - ( Plus, Minus) அடையாளம் இருக்கும். இதை பார்த்தும் உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்து படத்தின் இடது பக்கம்(Left) A,E,B என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை துளைகள்(Holes) ஆகும். இதைப்போலவே வலது பக்கமும்(Right) C,E,D என மூன்று துளைகள் உள்ளன. இரண்டு பக்கமும் இருக்கும் E என்ற துளைகள் சோலார் பேனலை எர்த் செய்வதற்கு பயன்படும்.
A,B,C,D ஆகிய நான்கு துளைகள் சோலார் பேனலை, அதற்கான இரும்பினால் செய்யப்பட்ட சட்டத்தில் (FRAME) போல்ட்& நட் உபயோகித்து பொருத்துவதற்கான துளைகள் ஆகும். இதில் A-க்கும் B-க்கும் இடைப்பட்ட தூரமும் , C-க்கும் D-க்கும் இடைப்பட்ட தூரமும் சமமாக இருக்கும். அதை போலவே A-க்கும் C-க்கும் இடைப்பட்ட தூரமும், B-க்கும் D-க்கும் இடைப்பட்ட தூரமும் சமமாக இருக்கும்.
நாம் செய்யப்போகும் 1KW-24V சோலார் சிஸ்டத்திற்கு தேவை 250W உள்ள 4 சோலார் பேனல்கள். இவற்றை ஒரு சட்டத்தில் இணைத்து அவற்றை பேரலெல் முறையில் இணைப்பு கொடுக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் நான்கு சோலார் பேனல்களும் வரிசையாக நீள வாக்கில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விதம் இல்லாமல் மேல்பக்கம் இரண்டு, கீழ் பக்கம் இரண்டு எனவும் அமைக்கலாம்.
கீழே உள்ள படம் WAAREE கம்பெனியின் 250W பேனல்களை(166cm x 99cm) நீளவாக்கில் அமைத்தால் நமக்கு கிடைக்கும் ஆரே-ஐ காட்டுகிறது. Array-என்பது பல பேனல்களை நம் தேவைக்கான வாட்ஸ் கிடைக்கும் வகையில் ஒன்றாக இணைக்கும் பொழுது ஏற்படும் அமைப்பே ஆகும். இந்த ஆரே-ன் நீளம் 166 cm(65.354 inch) & அகலம் 396cm(155.9inch) ஆக இருக்கும். அதாவது கிட்டத்தட்ட ஐந்தரை அடி நீளமும், பதிமூன்று அடி அகலமும் உடையதாக இருக்கும்.
மேல் பக்கத்தில் இரண்டு கீழ் பக்கம் இரண்டு என அமைத்தால் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள படம் காட்டுகிறது. இவ்விதம் அமைத்தால் கிடைக்கும் ஆரே-ன் நீளம் 332 cm(130.7inch) x அகலம் 198cm(78 inch) ஆக இருக்கும். அதாவது சுமார் 11 அடி நீளமும் 6.5 அடி அகலமும் உள்ளதாக இருக்கும்.
இனி அடுத்த முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இந்த பேனல்கள் தெற்கு திசையை நோக்கி(SOUTH FACING) பார்க்கும் படி இருக்கவேண்டும். அதோடுபேனல் 15 டிகிரி கீழ் நோக்கி சரிவாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பின்பக்க காலகள் உயரமாகவும், முன் பக்க கால்கள் உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும். படத்தை பாருங்கள்.

1KW-24V சோலார் சிஸ்டம்.
சோலார் பேனலின் முன்பக்கம்
இது சோலார் பேனலின் பின் பக்கம்.
பேனலின் பின்பக்கத்தில், மேல் புறத்தில் சதுர வடிவிலான க்ருப்பு நிறத்தில் வயருடன் உள்ள ஒரு பெட்டி இருக்கிறது. இது ஜங்ஷன் பாக்ஸ் ஆகும். இதன் உட்புறம் பேனலிருந்து வெளி வரும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் இதிலுள்ள கனெக்டரில் பொருத்தப்பட்டிருக்கும். அதோடு பாதுகாப்புக்கான பை-பாஸ்(By-Pass) டையோடுகளும்(Diode) இணைக்கப்பட்டிருக்கும். வெளியே வரும் வயரின் நுனிகளில் பாஸிடிவ் வயரின் நுனியில் MC4 கனெக்டரின் MALE பகுதியும், நெகடிவ் வயரின் நுனியில் FEMALE கனெக்டரின் பகுதியும் இணைக்கப்பட்டிருக்கும். MC4 கனெக்டரின் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
MC4 CONNECTOR
மேலே உல்ள படத்தில் முதலில் இருப்பது Female பகுதியின் வெளிப்பகுதியாகும். அடுத்து இருக்கும் மெட்டல் பின் என்பது வயரை இணைக்கும் உலோகத்திலான பின் ஆகும். 3-வது ஆக இருக்கும் படம் Male Part-ன் வயரை இணைக்கும் உலோகப்பகுதியாகும். 4-வது ஆக இருப்பது Male Part-ன் வெளிப்பகுதிஆகும்.
இனி, சோலார் பேனலின் பின்பக்க அமைப்பை விளக்கும் படத்தை(Block Diagram) பாருங்கள். அதில் JB என குறிப்பிடப்பட்டுள்ளது ஜங்ஷன் பாக்ஸ் ஆகும். அதிலிருந்து வெளி வரும் P, N என்ற வயர்கள் முறையே சோலார் பேனலில் உற்பத்தி ஆகும் டி.சி கரண்டை தரும் வயர்களாகும். பாசிடிவ் வயரின் நுனி MC4 கனெக்ட்டரின் Male கனெக்ட்டருடனும், நெகடிவ் வயர் Female கனெக்ட்டருடனும் இணைக்கப்பட்டிருக்கும். இதை உறுதிபடுத்த இரண்டு வழிகள் உண்டு. மல்டி மீட்டரை உபயோகித்து (Polarity) தெரிந்து கொள்ளலாம். அல்லது, ஜங்ஷன் பாக்ஸ்-ன் மூடியை கழட்டி உள்ளே பார்த்தால், வயர் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்குரு-ன் அருகில் +, - ( Plus, Minus) அடையாளம் இருக்கும். இதை பார்த்தும் உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்து படத்தின் இடது பக்கம்(Left) A,E,B என குறிப்பிடப்பட்டுள்ளது. இவை துளைகள்(Holes) ஆகும். இதைப்போலவே வலது பக்கமும்(Right) C,E,D என மூன்று துளைகள் உள்ளன. இரண்டு பக்கமும் இருக்கும் E என்ற துளைகள் சோலார் பேனலை எர்த் செய்வதற்கு பயன்படும்.
A,B,C,D ஆகிய நான்கு துளைகள் சோலார் பேனலை, அதற்கான இரும்பினால் செய்யப்பட்ட சட்டத்தில் (FRAME) போல்ட்& நட் உபயோகித்து பொருத்துவதற்கான துளைகள் ஆகும். இதில் A-க்கும் B-க்கும் இடைப்பட்ட தூரமும் , C-க்கும் D-க்கும் இடைப்பட்ட தூரமும் சமமாக இருக்கும். அதை போலவே A-க்கும் C-க்கும் இடைப்பட்ட தூரமும், B-க்கும் D-க்கும் இடைப்பட்ட தூரமும் சமமாக இருக்கும்.
நாம் செய்யப்போகும் 1KW-24V சோலார் சிஸ்டத்திற்கு தேவை 250W உள்ள 4 சோலார் பேனல்கள். இவற்றை ஒரு சட்டத்தில் இணைத்து அவற்றை பேரலெல் முறையில் இணைப்பு கொடுக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் நான்கு சோலார் பேனல்களும் வரிசையாக நீள வாக்கில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விதம் இல்லாமல் மேல்பக்கம் இரண்டு, கீழ் பக்கம் இரண்டு எனவும் அமைக்கலாம்.
கீழே உள்ள படம் WAAREE கம்பெனியின் 250W பேனல்களை(166cm x 99cm) நீளவாக்கில் அமைத்தால் நமக்கு கிடைக்கும் ஆரே-ஐ காட்டுகிறது. Array-என்பது பல பேனல்களை நம் தேவைக்கான வாட்ஸ் கிடைக்கும் வகையில் ஒன்றாக இணைக்கும் பொழுது ஏற்படும் அமைப்பே ஆகும். இந்த ஆரே-ன் நீளம் 166 cm(65.354 inch) & அகலம் 396cm(155.9inch) ஆக இருக்கும். அதாவது கிட்டத்தட்ட ஐந்தரை அடி நீளமும், பதிமூன்று அடி அகலமும் உடையதாக இருக்கும்.
மேல் பக்கத்தில் இரண்டு கீழ் பக்கம் இரண்டு என அமைத்தால் எப்படி இருக்கும் என்பதை கீழே உள்ள படம் காட்டுகிறது. இவ்விதம் அமைத்தால் கிடைக்கும் ஆரே-ன் நீளம் 332 cm(130.7inch) x அகலம் 198cm(78 inch) ஆக இருக்கும். அதாவது சுமார் 11 அடி நீளமும் 6.5 அடி அகலமும் உள்ளதாக இருக்கும்.
இதில் எந்த முறை நீங்கள் அமைக்கவிருக்கும் இடத்திற்கு வசதியானதாக இருக்குமோ அதை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.வரிசையாக நீட்டுவாக்கில் 4 பேனல்களை வைக்கும் வகையில் அமைக்கும் ஆரே-க்கு உரிய இரும்பு ஆங்கிள் -ஆல் ஆன அமைப்பின் மேல் பகுதி பிரேம் எப்படி இருக்கும் என்பதற்கான படத்தை கீழே கொடுத்துள்ளேன். அதில் உள்ள வெள்ளை புள்ளிகள் பேனல்களை பொருத்துவதற்கான துளைகளாகும். இந்த பிரேம், கால் இவற்றை அமைப்பதற்கு நீங்கள் சிரமப்பட வேண்டியது இல்லை. உங்கள் ஊரில் இரும்பு கேட், ஜன்னல் கிரீல் செய்யும் பட்டறைகாரர்களிடம் பேனலை காட்டி நீள வசமாக அல்லது மேல் பக்கம் இரண்டு கீழ் பக்கம் இரண்டு என்ற விதத்திலா என்று கூறிவிட்டால் அவர்கள் அழகாக செய்து தருவார்கள். இதை செய்து தர பீஸ் ரேட் கிடையாது. கிரில் வேலைக்கு எப்படி கிலோ ரேட் போடுவார்களோ அதை போன்றுதான்.
இனி அடுத்த முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இந்த பேனல்கள் தெற்கு திசையை நோக்கி(SOUTH FACING) பார்க்கும் படி இருக்கவேண்டும். அதோடுபேனல் 15 டிகிரி கீழ் நோக்கி சரிவாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப பின்பக்க காலகள் உயரமாகவும், முன் பக்க கால்கள் உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும். படத்தை பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக