சனி, 31 ஆகஸ்ட், 2013

இன்வெர்ட்டர் இயங்கும்போது அவசரத் தேவைக்கு மிக்ஸி பயன்படுத்தலாமா?

தொடர் மின்வெட்டு. இன்வெர்ட்டர் இயங்கும்போது அவசரத் தேவைக்கு அயர்ன் பாக்ஸ், மிக்ஸி போன்றவற்றைப் பயன்படுத்தலாமா?

கருத்துச் சொல்கிறார் இன்வெர்ட்டர் டீலர் கணேஷ்குமார்...

இன்வெர்ட்டர் என்பது உங்கள் வீட்டின் அடிப்படை மின் தேவைக்குத்தான். 4 ஃபேன், 4 லைட் இயங்குவதற்கு ஏற்ற இன்வெர்ட்டர்கள் கிடைக்கின்றன. சில வீடுகளில் 4 ஃபேன் இருக்காது. அதை சரி செய்யும் வகையில் பிளக் பாயின்ட் கனெக்ஷன் கொடுத்திருப்பார்கள்.


அந்த பிளக் பாயின்ட்டில் செல்போன் சார்ஜர் பயன்படுத்தினால் பாதிப்பு இல்லை. அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தினால், இன்வெர்ட்டர் ஓவர் லோட் ஆகி தானாகவே ஆஃப் ஆகிவிடும். 675 வாட்ஸுக்கும் குறைவான திறனுள்ள இன்வெர்ட்டரை வீட்டில் பயன்படுத்தினால் மற்ற பொருட்களைப் பயன்படுத்த முடியாது.

அயர்ன் பாக்ஸ், ஃப்ரிட்ஜ், இன்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் அவன், கீசர், டிவி, ஏசி போன்ற அதிக மின்சாரம் செலவாகும் சாதனங்களைப் பயன்படுத்தினால் இன்வெர்ட்டர் பாழாகிவிடும். குறைந்தது 1.5 கிலோ வாட் திறனுள்ள இன்வெர்ட்டர் இருந்தால் மிக்ஸி பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை: