சனி, 31 ஆகஸ்ட், 2013

டிரான்ஸ்பார்மரில் ஏற்படும் இழப்புகள் - Losses in a Transformer

டிரான்ஸ்பார்மரில் சுழலக் கூடிய பாகம் இல்லாததால் உராய்வின் காரணமாக ஏற்படும் இழப்போ (Frictional Losses) அல்லது காற்றின் அழுத்தத்தால் ஏற்படும் இழப்போ (Windage Losses) கிடையாது. ஆனால் வேறு இரு இழப்புகள் உள்ளன.

Iron or Core Loss Copper Loss or Winding Loss

அயன்லாஸ் (Iron or Core Loss)
அயன் கோரில் ஆல்டர்நேட்டிங் மேக்னடிக் பிளக்ஸ் காரணமாக ஹிஸ்டரிசஸ் மற்றும் எடிகரண்ட் லாஸ்-ம் ஏற்படுகின்றன. இந்த இரு லாஸ்-ம் பிரிகுவன்சி மற்றும் பிளக்ஸ் டென்சிட்டியை பொறுத்து இருக்கும். எல்லா லோடு அளவுகளிலும் பிரிகுவன்சி மற்றும் பிளக்ஸ் டென்சிட்டி நிலையானதாக இருப்பதால் அயன் லாஸ்-ன் அளவு நிலையானது ஆகும். அயன் லாஸ்-யினால் டிரான்ஸ்பார்மர் கோர் வெப்பமடையும். அதனைக் குறைக்க லேமினேட் சிலிக்கான் ஸ்டீல் தகடுகளை கோராக பயன்படுத்த வேண்டும். டிரான்ஸ்பார்மரில் ஏற்படும் அயன் லாஸ்-ஐ ஒபன் சர்க்யூட் டெஸ்ட் மூலம் கணக்கிடலாம்.

ஒபன் சர்க்யூட் டெஸ்ட் (Open Circuit Test)
டிரான்ஸ்பார்மரின் லோ டென்சன் சைடில் (LT) வோல்ட் மீட்டர், அம்மீட்டர், வாட் மீட்டர் இவைகளை இணைக்கவேண்டும். டிரான்ஸ்பார்மரின் LT சைடில் ரேட்டேடு வோல்டேஜ் கொடுக்கப்பட வேண்டும். HT சைடானது ஒபன் ஆக இருக்க வேண்டும். லோடு இல்லாத இந்நிலையில் டிரான்ஸ்பார்மர் குறைந்தளவு மின்னோட்டம் எடுப்பதால் வைண்டிங்கில் ஏற்படும் காப்பர் லாஸ்யின் அளவு மிகக் குறைவு. எனவே அதை கணக்கில் கொள்ளாத போது வாட் மீட்டர் காட்டும் அளவானது அயன் லாஸ்-ஐ குறிக்கும். அம்மீட்டர் ஆனது நோ லோடு மின்னோட்டத்தை குறிக்கும்.

காப்பர் அல்லது வைண்டிங் லாஸ் (Copper or Winding Loss)
டிரான்ஸ்பார்மரின் வைண்டிங் மின்தடை காரணமாக ஏற்படும் லாஸ் காப்பர் லாஸ் எனப்படும். இந்த லாஸ் ஆனது மின்தடை (R) மற்றும் மின்னோட்டத்தின் வர்க்கம் (I2) இரண்டின் பெருக்கு தொகைக்கு நேர் விகிதத்தில் இருக்கும். இந்த லாஸ் ஆனது லோடின் அளவுக்கு ஏற்ப மாறுபடும். இதனை சார்ட் சர்க்யூட் டெஸ்ட் செய்வதன் மூலம் கணக்கிடலாம்.

சார்ட் சர்க்யூட் டெஸ்ட் (Short Circuit Test)
டிரான்ஸ்பார்மரின் LT சைடானது சார்ட் சர்க்யூட் செய்யப்பட வேண்டும். HT சைடில் அம்மீட்டர், வோல்ட் மீட்டர் மற்றும் வாட் மீட்டர் இணைக்கப்பட்டு குறைந்தளவு வோல்டேஜ் ஆனது ஆட்டோ டிரான்ஸ்பார்மர் மூலம் கொடுக்கப்பட வேண்டும். LT சைடில் புல் லோடு கரண்ட் செல்லும் அளவிற்கு வோல்டேஜ் அதிகரிக்கப்பட வேண்டும். இந்நிலையில் வாட் மீட்டர் காட்டும் அளவு காப்பர் லாஸ்யினை குறிக்கும்.

கருத்துகள் இல்லை: