சனி, 31 ஆகஸ்ட், 2013

சோலார் மின்சாரத்தின் அடக்க விலை..

சோலார் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் சாதனங்கள் (1) சோலார் பேனல்கள், (2) பேட்டரி, (3)சார்ஜ் கண்டிரோலர் + இன்வெர்ட்டர் அல்லது பவர் கண்டிஷ்னர்.

சோலார் பேனல்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும். எனவே இந்த சிஸ்டத்தின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் என வைத்துக்கொள்ள வேண்டும்.



இந்த 1KW சோலார் சிஸ்டம் நாள் ஒன்றுக்கு 5KW மின்சாரத்தை உற்பத்தி செய்யும். 20 ஆண்டுகளில் இதன் மொத்த உற்பத்தி 36,500 ( 5x 365x 20) யூனிட்களாகும்.

பாட்டரிக்கு 4 வருட உத்திரவாதம் உண்டு. 5 ஆண்டுகள் உழைக்கும். எனவே 5 ஆண்டுக்கு ஒருமுறை என பாட்டரியை மாற்றினால் 20 ஆண்டுகளில் 4 தடவை மாற்ற வேண்டியிருக்கும். அதாவது 8 பாட்டரிகள்.

இன்வெர்ட்டரை பொருத்தவரை டிவி போலத்தான். எளிதில் ரிப்பேர் ஆகாது. அப்படி ஆகும் பொழுது சரி செய்ய வேண்டும். மிகவும் பழையதாகும் பொழுது மாற்ற வேண்டும்.

பல கம்பெனிகள் இதை அமைத்து கொடுக்கிறார்கள். அவற்றில் குறைந்த ரேட்டை அடக்க விலை நிர்ணயம் செய்ய எடுக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள பட்டியலை பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் மின்சாரத்தின் விலை ரூ.6.38 ஆகும். இந்த அடக்க விலை பொருட்களின் இன்றைய விலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: