லீக்கேஜ் (Leakage)
பேஸ் ஒயரிலிருந்து நியூட்ரல் ஒயருக்கோ, எர்த் கன்டக்டருக்கோ அல்லது அருகில் உள்ள மெட்டலுக்கோ மின் கசிவு ஏற்படுவதையே லீக்கேஜ் கரண்ட் எனக் குறிப்பிடுகிறோம்.
கொடுக்கப்படும் வோல்டேஜ்-யை தாங்கும் அளவிற்கு கன்டக்டரின் மேலுள்ள இன்சுலேஷன் இல்லாதிருத்தல்.
ஓயாரானது அதிக வெயில், ஈரப்பதம், இரசாயன புகை இவற்றில் அதிக நாட்கள் இருப்பதால் இன்சுலேஷன் பாதிப்படைந்து இருத்தல்.
ஒயர் வேறு காரணங்களால் பழுதடைந்தாலும், லீக்கேஜ் கரண்ட் ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒபன் சர்க்யூட் (Open Circuit)
சர்க்யூட்டின் தொடர்ச்சி துண்டிக்கப்படுவது ஒபன் சர்க்யூட் எனப்படும்.
இணைப்பு முனைகளில் உள்ள ஸ்குரு தளர்வடைவது.
இடையிலுள்ள பியூஸ் ஒயர் உருகி போய் இருப்பது.
மெக்கானிக்கல் டேமேஜினால் துண்டிப்பு ஏற்பட்டு இருப்பது போன்ற காரணங்களினால் ஒபன் சர்க்யூட் ஏற்படும்.
சார்ட் சர்க்யூட் (Short Circuit)
பேஸ் ஒயருடன் நியூட்ரல் மற்றும் ஏர்த்துக்கு இடையே இருக்க வேண்டிய ரெசிஸ்டன்ஸ் அளவு மிகவும் குறைந்து நேரடியாக தொடர்பு கொள்வதையே சார்ட் சர்க்யூட் என்கிறோம்.
அதிகமான லோடின் காரணமாக.
ஒயரிங் செய்யும்போது ஏற்படும் தவறான இணைப்புகள் காரணமாக.
ஒயரிங் இன்சுலேஷன் பழுதடைவது போன்ற காரணங்களினால் சார்ட் சர்க்யூட் ஏற்படலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக