புதன், 28 ஆகஸ்ட், 2013

ஹைட்ரோமீட்டர் - Hydrometer

இதன் மூலம் எலக்ட்ரோலைட்டின் ஸ்பெசிபிக் கிராவிட்டியை அறியலாம். படத்தில் காட்டியபடி நீண்ட கண்ணாடி குழாயின் ஒரு முனையில் ரப்பர் பல்பும் மற்றொரு முனையில் ரப்பர் நாசிலும் (Nazzle) இணைக்கப்பட்டிருக்கும். ஹைட்ரோமீட்டரின் அடிபாகத்தில் சிறிய லெட் உருண்டைகள் செல்லாக்கின் உதவியுடன் அமைக்கப்பட்டும், மேல்பகுதியில் அளவுகள் குறிக்கப்பட்ட அல்லது கலர் கோடுகளுடன் கூடிய தால் உள்ளே ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஹைட்ரோமீட்டர் எலக்ட்ரோலைட்டில் மிதக்கும்படி பெரிய கண்ணாடி குழாயின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும். ரப்பர் பல்பு உதவியால் பெரிய குழாயில் எலக்ட்ரோலைட் ஆனது உறிஞ்சப்படுகிறது. அதன் அடர்த்தியைப் பொறுத்து உள் அமைக்கப்பட்ட ஹைட்ரோமீட்டர் மிதக்கும் அளவு மாறுபடுகிறது. கண்ணாடி குழாயில் உள்ள எலக்ட்ரோலைட்டில் ஹைட்ரோமீட்டர் எந்த அளவில் மிதக்கிறதோ அதுவே எலக்ட்ரோலைட்டின் ஸ்பெசிபிக் கிராவிட்டி ஆகும். இதில் அளவுகள் 1180 முதல் 1300 வரை குறிக்கப்பட்டிருக்கும் அல்லது கலர் கோடில் சிவப்பு (டெட்), மஞ்சள் (அப் சார்ஜ்), பச்சை (புல் சார்ஜ்) என கலரில் குறிக்கப்பட்டிருக்கும்.

கருத்துகள் இல்லை: