சப்ளையை மெயினிலிருந்து பல பகுதிகளுக்கும் பின்வரும் மூன்று முறைகளில் கொண்டு செல்லலாம்.
Tree System Ring Main System Distribution Board System
ட்ரி சிஸ்டம் (Tree System)
மெயின் சர்க்யூட்டில் இருந்து நமக்கு தேவைப்படகூடிய இடத்தில் டேப்பிங் எடுத்து சப்-சர்க்யூட்கள் அமைக்கும் முறையாகும்.
அடுக்கு மாடி கட்டிடங்களில் ஒவ்வொரு மாடிக்கும் தேவையான சப்ளை இம்முறையிலேயே இணைக்கப்படுகிறது. கீழ்தளத்தில் அமைந்துள்ள மெயின் சுவிட்சில் இருந்து காப்பர் அல்லது அலுமினிய ஸ்டிரிப்கள் பஸ் பார் வடிவில் பயன்படுத்தப்பட்டு ரைசிங் மெயின் (Raising Main) அமைக்கப்படும். இந்த ரைசிங் மையினில் இருந்து ஒவ்வொரு மாடிக்கும் சப் மெயின்-க்கு கேபிள்களைப் பயன்படுத்தி சப்ளை பெறப்படுகிறது. ஒவ்வொரு மாடியிலும் உள்ள பல வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தனித்தனி எனர்ஜி மீட்டர் மற்றும் மெயின் சுவிட்ச் மூலம் சப்ளை அளிக்கப்படுகிறது.

Advantages
தேவைப்படும் ஒயரின் அளவு குறைவு.
அமைக்கும் செலவு குறைவு.
பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு இம்முறை ஏற்றது.
அமைக்கும் செலவு குறைவு.
பல அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு இம்முறை ஏற்றது.
Disadvantages
பழுது ஏற்பட்டுள்ள இடத்தை கண்டறிவது கடினம்.
வோல்டேஜ் டிராப்பின் காரணமாக டெர்மினல் வோல்டேஜ் அளவு ஒரே அளவாக இல்லாமல் மாறுபட்டு இருக்கும்.
பார்ப்பதற்கு அழகாக இருக்காது.
விலை குறைவு என்பதால் அலுமினியம் பஸ் பாரை பயன்படுத்துவதால் லூஸ் கனெக்சன் காரணமாக பவர் சப்ளை தடைபட வாய்ப்புண்டு.
ரிங் மெயின் சிஸ்டம் (Ring main System)
பேஸ், நியூட்ரல், எர்த் ஆகிய மூன்று ஒயர்களும் சப்-போர்டில் ஆரம்பித்து அந்த அறை முழுவதும் சுற்றி திரும்ப ஆரம்ப முனையுடனே ஒரு ரிங் போல அமைக்கப்படும். எனவே கரண்ட் இரு புறமும் செல்ல முடியுமாதலால் பயன்படுத்தப்படும் கேபிள் அளவு குறையும். இந்த ரிங் கேபிளில் நமக்கு தேவையான இடத்திலிருந்து சீலிங் ரோஸ், சாக்கெட் மற்றும் ஹோல்டிங் அசெஸ்சரி போன்றவைகளுக்கு எம்.சி.பி, பியூஸ் மற்றும் சுவிட்ச் மூலம் டேப்பிங் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு 100 சதுர மீட்டருக்கும் ஒரு தனி ரிங் சர்க்யூட் அமைக்கப்படவேண்டும். இதில் அமைக்கப்படும் பவர் பிராஞ்ச்களில் 2 பவர் பிளக் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். மொத்த கரண்ட் 30A க்கு மேல் செல்ல கூடாது.
டிஸ்ட்ரிபூசன் சிஸ்டம் (Distribution System)
மெயின் பாக்ஸ்-க்கு அடுத்து டிஸ்ட்ரிபூசன் மற்றும் சப்-டிஸ்ட்ரிபூசன் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து தேவைப்படும் சப்-சர்க்யூட்களுக்கு சப்ளை கொண்டு செல்லப்படும். இம்முறையில் சுவிட்ச், சீலிங் ரோஸ் மற்றும் ஜாய்ண்ட் பாக்ஸ் தவிர மற்ற இடங்களில் எந்த விதமான ஜாய்ண்ட்-வும் செய்யப்படுவதில்லை.
லூப்-ன் மெதேட் (Loop in Method)
லுப்பிங் எடுப்பது பல வழிகளில் செய்யப்படுகிறது.
எல்லா சீலிங் ரோஸ்களின் ஒரு முனையை தொடர்ச்சியாக இணைத்து அதில் நியூட்ரல் இணைப்பு ஏற்படுத்துவது.
எல்லா சுவிட்ச்களின் இன்புட் டெர்மினல்களைத் தொடர்ச்சியாக இணைத்து அதில் பேஸ் இணைப்பு ஏற்படுத்துவது.
எல்லா 3 பிளேட் சீலிங் ரோஸ்களின் ஒரு முனை தொடர்ச்சியாக இணைத்து அதில் பேஸ் இணைப்பு ஏற்படுத்துவது.
ஜங்ஷன் பாக்ஸ்-களிலிருந்து எல்லா லோடுகளுக்கும் தனித்தனியாக பேஸ் மற்றும் நியூட்ரல் இணைப்பு ஏற்படுத்துவது.
Advantages
பழுது ஏற்பட்டுள்ள இடத்தை கண்டறிவது எளிது.
சர்க்யூட்டின் இடையே இணைப்புகள் எதுவும் எடுக்காததால் வோல்டேஜ் டிராப் அதிகம் ஏற்படாது. எனவே வோல்டேஜ் ஆனது எல்லா இடங்களிலும் சமமாக இருக்கும்.
புதிய சப்-சர்க்யூட்கள் எளிதில் அமைக்கலாம்.
Disadvantages
ஒயரிங் செய்ய ஆகும் நேரம் மற்றும் செலவு அதிகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக