தேவையற்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின் விளக்குகள் மற்றும் கருவிகளை நிறுத்துவதே மின் சேமிப்பில் சிறந்த வழி. குளிர்பதன பெட்டியினை, சுவற்றில் இருந்து 30 செ.மீ தள்ளியும் வெப்பத்தை வெளியிடும் கருவிகளுக்கு அருகாமையில் இல்லாதவாறும் பொருத்தப்பட வேண்டும். கோடை வெப்பத்திலிருந்து விடுபட முதலில் உட்கூரை மின் விசிறி (சீலிங் பேன்) அல்லது மேசை விசிறியினைப் (டேபிள் பேன்) பயன்படுத்தலாம். உட்கூரை மின் விசிறிகளைப் பயன் படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு முப்பது பைசாக்கள் செலவாகும்.
மாறாக குளிர்சாதனக் கருவியினை பயன் படுத்தினால் ஒரு மணி நேரத்திற்கு பாத்து ரூபாய் செலவாகும். வெப்ப இழப்பினைத் தவிர்த்திட சுடுநீர் செல்லும் குழாய்களுக்கு குறிப்பாக குளிர்ந்த பகுதிகளில் செல்லும் போது தகுந்த வெப்ப பாதுகாப்பு உறை (Insulation Sleaves) போடப்படவேண்டும். மோனோ பிளாக் (Monoblock) பம்புகள் மிக செயல் திறன்மிக்கவை. எனவே கூடுமானவரை அவற்றைப் பயன் படுத்தவும். பம்பு தயாரிப்பாளர்களின் பரிந்துரையின்படி உறிஞ்சுதல் மற்றும் வெளியேற்றுதல் குழாய் (Suction and Delivery pipe dia metre) விட்ட அளவுகளை அமைத்து நீர்ப்பம்புகளின் செயல்திறனை அதிகரித்திடலாம். கணினியின் மானிட்டர் (Monitor) தேவைக்குப்பின் நிறுத்தம் செய்யப்படவேண்டும். ஏனெனில் அது கணினி பயன்படுத்தும் மின்சக்தி அளவில் பாதி அளவினை அது செலவழிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக