சனி, 31 ஆகஸ்ட், 2013

சோலார் டி.சி (DC) பவர் சிஸ்டம் - 1

பொதுவாக சோலார் பவர் சிஸ்டத்தை இரண்டு வகையாகபிரிக்கலாம்.

1. சோலார் பேனல்களிலிருந்து பெறப்படும் டி.சி மின்சாரத்தை சார்ஜ் கண்ட்ரோலர் மூலம் ஒழுங்கு படுத்தி 12 வோல்ட் பாட்டரிகளில் சேமித்து அதை கொண்டு 12 வோல்ட் டி.சி மின்சாரத்தில் இயங்கக்கூடிய விளக்கு, பேன் போன்றவற்றை இயக்க பயன்படுத்துவது டி.சி பவர் சிஸ்டம் .

2. மேற்கூறியவாறு பாட்டரிகளில் சேமிக்கப்பட்ட டிசி மின்சாரத்தை இன்வெர்ட்டர் என்ற சாதனத்தின் மூலம் 230வோல்ட் ஏசி மின்சாரமாக மாற்றி, நாம் உபயோகப்படுத்தும் மின் சாதனங்களை இயக்க பயன்படுத்துவது ஏசி பவர் சிஸ்டம்.


இதற்கு முந்தைய பதிவுகளில், இரண்டாவதாக கூறப்பட்டுள்ள 230 வோல்ட் ஏசி பவர் சிஸ்டத்தை பற்றி விரிவாக பார்த்து விட்டோம். இனி டிசி பவர் சிஸ்டத்தை பற்றி பார்க்கலாம்.கீழே காட்டப்பட்டுள்ள படம் டி.சி சோலார் பவர் சிஸ்டத்தின் அடிப்படை இணைப்பை விளக்குகிறது.

இதன் அடிப்படையில்தான் டிசி சோலார் பவர் சிஸ்டம் அமைக்கப்படுகிறது.

கீழே உள்ள லாந்தர் விளக்கு மாடல் சோலார் பவர் சிஸ்டத்தை பாருங்கள்.


இதில் சோலார் பேனல் நீங்கலாக பாட்டரி, சார்ஜ் கண்ட்ரோலர், சி.எஃப்.எல் பல்பு ஆகியவை விளக்கினுள் பொருத்தப்பட்டுள்ளது. சூரிய ஒளி படும்படி பகல் நேரத்தில் பேனலை வைத்து விட்டு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வயரை விளக்கில் இணைத்து விட வேண்டும். பாட்டரி சார்ஜ் ஆகிவிடும். இரவில் விளக்கை மட்டும் எடுத்து எமெர்ஜென்சி விலக்கு போல உபயோகப்படுத்தலாம். இந்த விளக்கு எரியும் நேரம் இதில் பொருத்தப்பட்டுள்ள பாட்டரி, சோலார் பேனலின் திறனை பொறுத்து வேறுபடும். உத்தேசமாக 10W/12V சோலார் பேனல், 7Ah /12V பாட்டரி, 7W CFL பல்பு கொண்ட லைட் 8-10 மணி நேரம் எரியும்.

பொதுவாக சோலார் டி.சி பவர் சிஸ்டத்தில் சி.எஃப்.எல் பல்பு அல்லது எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்படும். இவற்றின் வேறுபாடு, பயன் பற்றி இனி பார்ப்போம்.

மின் பல்புகளில் இருந்து வெளிவரும் வெளிச்சத்தின் அளவு லுமென்ஸ்(Lumens) என அழைக்கப்படும். அதைப்போலவே சாதாரண குண்டு பல்பு Incandescent Bulp எனப்படும். கீழே உள்ள அட்டவணையை பாருங்கள்.



40 வாட்ஸ் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தின் அளவு 450 லூமென்ஸ் ஆகும். ஆதே வெளிச்சத்தை 8-12 வாட்ஸ் சி.எஃப்.எல் பல்பும், 4-5 வாட்ஸ் எல்.இ.டி பல்பும் தருகிறது.


அதாவது குண்டு பல்புக்கு தேவைப்படும் மின்சாரத்தில் 5-ல் 1 பங்கு மின்சாரத்தை சி.எஃப்.எல் பல்பும், 8-ல் 1 பங்கு மின்சாரத்தை எல்.இ.டி பல்பும் எடுக்கிறது. அதே நேரத்தில் அதன் வாழ்நாளும் அதிகம். சாதாரண குண்டு பல்பின் ஆயுட் காலம் 1200 மணி நேரம். சி.எஃப்.எல் பல்பின் ஆயுட்காலம் 10,000 மணி நேரம். எல்.இ.டி பல்பின் ஆயுட்காலம் 50,000 மணி நேரம் ஆகும்.

இந்த சி.எஃப்.எல், எல்.இ.டி பல்புகள் நேரடியாக மின்சாரத்தில் இயங்கக்கூடியது அல்ல. 6V/12V DC மின்சாரத்தில் எரிய அதற்குரிய சோக் எனப்படும் எலெக்ட்ரானிக் பாலஸ்ட் இணைக்கப்பட்டிருக்கும். அதைப்போலவே நாம் உபயோகிக்கும் 230V ஏ.சி மின்சாரத்தில் எரியும் சி.எஃப்.எல் அல்லது எல்.இ.டி விளக்குகளில் அதற்கான பாலஸ்ட் இணைக்கப்பட்டிருக்கும்.

இனி மத்திய அரசு மானியம் பெற அங்கீகரிக்கப்பட்டுள்ள சிஸ்டம் மாடல்களை பற்றி பார்க்கலாம்.

1. SLOAR LANTERN

சோலார் பேனல் --------- 10W/12V
பாட்டரி---------------------7 AH/12V
பல்பு ------------------------7 W CFL
பாட்டரி சார்ஜிங் நேரம்------- 4 மணி நேரம்
உபயோகிக்கும் நேரம்---------12 மணி நேரம்.

2. CFL HOME LIGHTING SYSTEM

MODEL NO.1 - ONE LIGHT

சோலார் பேனல்---------------- 18W/12V
பாட்டரி------------------------- 20AH/12V
பல்பு ----------------------------- CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்

MODEL NO.2 - 2 LIGHT

சோலார் பேனல் --------------- 37 W/12V
பாட்டரி ------------------------ 40AH/12V
பல்பு ---------------------------- 2 Nos CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்

MODEL NO.3 - 2 LIGHT + 1 FAN

சோலார் பேனல் ------------------ 2 Nos 37W/12V or 1 No 74W/12V
பாட்டரி ----------------------------75AH/12V
பல்பு ---------------------------------2 Nos CFL 9W/11W
ஃபேன் ------------------------------20W - DC FAN
சார்ஜ் கண்ட்ரோலர்

MODEL NO.4 - 4 LIGHTS

சோலார் பேனல் ------------------- 2 Nos 37W/12V or 1 No 74W/12V
பாட்டரி ----------------------------75AH/12V
பல்பு ---------------------------------4 Nos CFL 9W/11W
சார்ஜ் கண்ட்ரோலர்

மேற்கூறிய மாடல்கள் அனைத்தும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சப்ளையர்களிடம் கிடைக்கும். அவர்களிடம் வாங்கினால் அரசு மானியம் கிடைக்கும். சப்ளையர் விபர பட்டியல் ஏற்கனவே கொடுத்துள்ளேன்.

கருத்துகள் இல்லை: