அதிக அளவிலான வோல்டேஜ் மற்றும் கரண்டை அளக்க இத்தகைய டிரான்ஸ்பார்மர் பயன்படுகின்றது. இது இரு வகைப்படும்.
பொட்டன்சியல் டிரான்ஸ்பார்மர்
பொட்டன்சியல் டிரான்ஸ்பார்மர்
கரண்ட் டிரான்ஸ்பார்மர்
பொட்டன்சியல் டிரான்ஸ்பார்மர் (Potential Transformer)
ஒரு வோல்ட் மீட்டருடன் கூடிய இந்த டிரான்ஸ்பார்மர் ஆனது மிக அதிகமான வோல்டேஜை அளக்க உதவுகிறது. இதில் மெல்லிய ஒயரால் அதிக சுற்றுக்கள் கொண்ட பிரைமரி வைண்டிங்கானது அளக்கப்பட வேண்டிய HT லைன்க்கு பேரலல் ஆக இணைக்கப்பட வேண்டும். தடித்த ஒயரால் சில சுற்றுக்களே கொண்ட செகண்டரி வைண்டிங் ஆனது வோல்ட் மீட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஏதாவது லூஸ் கனெக்சன் காரணமாக அதிக வோல்டேஜ் ஏற்படாமல் தடுப்பதற்காக செகண்டரியின் ஒரு முனை எர்த் செய்யப்பட வேண்டும். பிரைமரியில் செல்லும் வோல்டேஜ் அளவுக்கேற்ப செகண்டரியில் உள்ள வோல்ட் மீட்டர் காலிபிரேட் செய்யப்பட்டிருக்கும்.
கரண்ட் டிரான்ஸ்பார்மர் (Current Transformer)
HT லைன்-ல் செல்லும் அதிகமான மின்னோட்டத்தை அளக்க கரண்ட் டிரான்ஸ்பார்மர் பயன்படுகிறது.
ஒன்று அல்லது இரண்டு சுற்றுக்களைக் கொண்ட பிரைமரி வைண்டிங் அளவிடப்பட வேண்டிய லைன்க்கு சீரிஸாக இணைக்கப்பட வேண்டும். அதிக சுற்றுக்கள் கொண்ட செகண்டரி வைண்டிங் ஆனது அம்மீட்டருடன் இணைக்கப்பட்டு அதன் ஒரு முனை எர்த் செய்யப்பட்டிருக்கும். பிரைமரியில் செல்லும் மின்னோட்டத்தை அளப்பதற்கு ஏதுவாக செகண்டரியில் உள்ள அம்மீட்டர் அளவுகள் காலிபிரேட் செய்யப்பட்டிருக்கும்.
செகண்டரியில் இணைக்கப்பட்டுள்ள அம்மீட்டரின் ரெசிஸ்டன்ஸ் மிக மிக குறைவு என்பதால் செகண்டரி சார்ட் சர்க்யூட் செய்யப்பட்டதை போன்று இருக்கும். பிரைமரியில் உருவாகும் பிளக்ஸ் ஆனது லோடு மின்னோட்டத்தைப் பொறுத்து இருக்கும். அவ்வாறு உருவாகும் பிளக்சை செகண்டரி வைண்டிங்-ல் உருவாகும் பிளக்ஸ் ஈடு செய்து சமப்படுத்துவதால், டிரான்ஸ்பார்மர் கோரின் ரிசல்ட்டன் பிளக்ஸ் அளவு மிகவும் குறைவு ஆகும். ஒருவேளை செகண்டரியில் உள்ள அம்மீட்டரை நீக்கினாலோ அல்லது செகண்டரி சர்க்யூட்டை ஓபன் செய்தாலோ, செகண்டரியின் பிளக்ஸ் பூஜ்யம் ஆகும். அப்போது டிரான்ஸ்பார்மரின் ரிசல்ட்டன் பிளக்ஸ் என்பது பிரைமரியில் உருவாகும் பிளக்ஸ் அளவு ஆகும். இந்த ரிசல்ட்டன் பிளக்ஸ் மிக மிக அதிகமாக இருப்பதால் செகண்டரி வைண்டிங்-ல் அதிகமாக வோல்டேஜ் உருவாகி, இன்சுலேஷன் பாதிப்படைய செய்து டிரான்ஸ்பார்மரை எரித்து விடும்.
எனவே டிரான்ஸ்பார்மரின் செகண்டரி வைண்டிங் எந்த சூழ்நிலையிலும் ஓபன் ஆக இருக்கக் கூடாது. அம்மீட்டரை எடுக்க வேண்டியிருந்தால் செகண்டரியில் அம்மீட்டர் இணைக்கப்பட்ட முனைகளை சார்ட் செய்து விட்டு தான் எடுக்க வேண்டும்.
Applications
கிளிப் ஆன் (Clip On) மீட்டர் இம்முறையில் செயல்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக