புதன், 28 ஆகஸ்ட், 2013

எர்த் ரெசிஸ்டன்ஸ்-ஐ குறைக்கும் முறைகள்

Methods of Reducing Earth Resistance

நீர் ஊற்றுவதன் மூலம் (By Pouring Water)
கோடை காலத்தில் எர்த் எலக்ட்ரோட்டை சுற்றி ஈரப்பதம் இல்லாமல் மிகவும் வறண்டு காணப்படுவதால் ரெசிஸ்டன்ஸ் அதிகரிக்கிறது. எனவே உப்பு கலந்த நீரை புனல் வழியாக குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஊற்றி வருவதன் மூலம் எர்த் ரெசிஸ்டன்ஸ் அளவை குறைக்க முடியும். இம்முறையில் ஒரு குறிப்பிட்ட அளவே ரேசிஸ்டன்ஸ்-ஐ குறைக்க முடியும்.


எர்த் பிளேட் ஏரியாவை அதிகரிப்பதன் மூலம் (By Increase Plate Area)
எர்த் ரெசிஸ்டன்ஸ் அளவை ஆறில் ஒரு பங்கு குறைக்க 36 மடங்கு பிளேட் பரப்பை அதிகரிக்க வேண்டும். எனவே இம்முறை அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை.

எர்த் ஆழத்தை அதிகரிப்பதன் மூலம் (By Increase In Depth)
எர்த் எலக்ட்ரோடு அமைக்கப்படும் ஆழத்தை அதிகரிக்கும்போது ரெசிஸ்டன்ஸ் குறைகிறது. இம்முறையில் மண்ணின் தன்மையை பொருத்து ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே ரெசிஸ்டன்ஸ்-ஐ குறைக்க முடியும்.

கரி, உப்பு இடுதல் மூலம் (By Powder Charcoal and Salt)
உப்பும் கரியும் 1 : 5 என்ற விகிதத்தில் கலந்து எர்த் எலக்ட்ரோடை சுற்றி இடப்படுவதன் மூலம் ரெசிஸ்டன்ஸ்-ஐ குறைக்கலாம். இந்த கலவை ஈரப்பதத்தை உறிஞ்சி வைத்துக்கொள்வதால் எர்த் எலக்ட்ரோடின் ரெசிஸ்டன்ஸ் அளவு குறைகிறது.

எர்த் எலக்ட்ரோடை பேரலல்-ஆக இணைத்தல் மூலம் (By Parallel Electrodes)
 ஒன்றுக்கு மேற்பட்ட எர்த் எலக்ட்ரோடுகள் 15 அடிக்கு குறையாத இடைவெளியில் அமைக்கப்பட்டு அவைகளின் எர்த் ஒயர்கள் பேரலல் ஆக இணைக்கப்பட வேண்டும். பேரலல் ஆக இணைக்கப்படும் எலக்ட்ரோட்டின் எண்ணிக்கையைப் பொருத்து ரெசிஸ்டன்ஸ் அளவு குறைந்து கொண்டே வரும். ஆனால் இதற்கு அதிகஅளவில் இடம் தேவைப்பட்டாலும் இம்முறையே பெரும்பாலும் எர்த் ரெசிஸ்டன்ஸ் அளவை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை: