2-வே சுவிட்ச் இணைப்பை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக வீடுகளில் படுக்கை அறை, வராண்டா, மாடிப்படி ஆகிய இடங்களில் உள்ள விளக்குகளுக்கு 2-வே சுவிட்ச் பயன்படுத்தப்படும். படுக்கை அறையை பொறுத்தவரை மின் விசிறிக்கும் பயன்படுத்தப்படும்.
உதாரணத்திற்கு வராண்டா விளக்கு இணைப்பை எடுத்துக்கொள்ளலாம். இந்த சர்கியூட்டிற்கு 2-வே (Two Way) சுவிட்ச் இணைப்பு எப்படி கொடுக்கப்படுகிறது, அது எப்படி செயல்படுகிறது, அதன் உபயோகம் இவற்றை பார்க்கலாம்.
நாம் குடும்பத்துடன் வெளியில் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புகிறோம் என வைத்துக்கொள்வோம். வராண்டா லைட்டுக்கு வராண்டா சுவிட்ச் போர்டில் ஒரு 2-வே சுவிட்ச்சும், ஹாலில் உள்ள சுவிட்ச் போர்டில் ஒரு 2-வே சுவிட்ச்சும் பொருத்தப்பட்டிருக்கும். லைட் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் நிலையில் 2-வே சர்கியூட் எந்த நிலையில் இருக்கும் என்பதை கீழே உள்ள படம் காட்டுகிறது.
.
படத்தில் இடது கைப்பக்கம் உள்ளது வராண்டாவில் உள்ள சுவிட்ச் போர்டில் பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் ஆகும். வலது பக்கம் உள்ள சுவிட்ச் ஹாலில் உள்ள சுவிட்ச் போர்டில் பொருத்தப்பட்டுள்ளது ஆகும்.
இந்த இரண்டு சுவிட்ச்சுகளுமே ஆஃப் நிலையில் உள்ளது. நியூட்ரல் சப்ளையானது நேரடியாக சப்ளையிலிருந்து(சுவிட்ச் போர்டிலிருந்து) சீலிங் ரோஸ் வழியாக பல்ப் அல்லது டியூப் லைட்டுக்கு செல்கிறது.
2-வே சுவிட்ச்சில் 1,0,2 என மூன்று டெர்மினல் அல்லது காண்டாக் உண்டு. "0" என்ற நடுவில் உள்ள காண்டாக் பொதுவானது. வராண்டாவில் உள்ள சுவிட்ச்சின் "2" என அடையாளமிடப்பட்ட காண்டாக்ட், ஹாலில் உள்ள சுவிட்ச்சின் "1" என அடையாளமிடப்பட்டுள்ள காண்டாக்டுடன் வயர் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதை போலவே வராண்டா சுவிட்ச்சின் "1" என அடையாளமிடப்பட்டுள்ள காண்டாக்ட் ஹாலில் உள்ள சுவிட்ச்சின் "2" என்ற காண்டாக்டுடன் வயரால் இணைக்கப்பட்டுள்ளது.
சப்ளையின் பேஸ் முனை, வரண்டா சுவிட்ச்சின் "0" என்ற காண்டாக்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆஃப் நிலையில் "0" மற்றும் "1" ஆகிய இரு டெர்மினல் களுக்கும் இணைப்பு இருப்பதால் பேஸ் சப்ளை காண்டாக்ட் "2" லிருந்து வயர் வழியாக ஹாலில் உள்ள சுவிட்ச்சின் காண்டாக்ட் "1" -க்கு செல்லும். அந்த சுவிட்ச் ஆஃப் நிலையில் இருப்பதால் அந்த சுவிட்ச்சின் காண்டாக்ட் "0" -க்கு செல்ல முடியாது. எனவே பேஸ் சப்ளை லைட்டுக்கு கிடைக்காததினால் லைட் எரியாது.
இனி இரண்டாம் நிலையை பார்க்கலாம். நீங்கள் வராண்டாவில் உள்ள சுவிட்ச்சை ஆன் செய்யும் பொழுது எப்படி இணைப்பு மாறுகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.
வராண்டா சுவிட்ச்சை ஆன் செய்தவுடன் அந்த சுவிட்ச்சில் "0" & "1" ஆகிய இரு காண்டாக்டுக்கும் இணைப்பு ஏற்பட்டு பேஸ் சப்ளை "1"-வது காண்டாக்டிலிருந்து வயர் மூலம் ஹாலில் உள்ள சுவிட்ச்சின் காண்டாக்ட்"2"-ஐ அடைகிறது. அந்த சுவிட்ச்சின் காண்டாக்டுகள் "2" & "0" இணைப்பில் உள்ளதால், பேஸ் சப்ளை லைட்டுக்கு செல்லும். எனவே லைட் எரியும். அந்த லைட் வெளிச்சத்தில் ஹால் கதவை (மெயின் டோர்) திறந்து உள்ளே போய் விடுவோம்
இனி மூன்றாவது நிலையை பார்ப்போம். ஹாலில் இருக்கும் வராண்டா லைட்டிற்கான சுவிட்ச் ஆஃப் நிலையில் இருக்கும். ஆனால் வராண்டா லைட் எரிந்து கொண்டிருக்கும். லைட்டை அணைக்க வேண்டுமானால் ஹாலில் உள்ள இந்த சுவிட்ச்சை ஆன் நிலைக்கு மாற்றினால் போதும். லைட்டுக்கு செல்லும் பேஸ் சப்ளை துண்டிக்கப்பட்டுவிடும். இதை கீழே உள்ள படம் விளக்குகிறது.
இனி நான்காவது நிலையை பார்க்கலாம். இப்பொழுது வரண்டா லைட் ஆஃப் நிலையில் உள்ளது. வராண்டாவில் உள்ள சுவிட்ச்சும் ஹாலில் உள்ள சுவிட்ச்சும் ஆன் நிலையில் உள்ளது. இப்பொழுது வராண்டாவில் உள்ள சுவிட்ச்சை ஆன் நிலையில் இருந்து ஆஃப் நிலைக்கு மாற்றினால் லைட்டுக்கு பேஸ் சப்ளை கிடைத்து லைட் எரியும். இதை கீழே உள்ள படம் விளக்குகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால், 2-வே இணைப்பில் இரு சுவிச்சுகளும் ஒரே நிலையில் இருந்தால் லைட் எரியாது. அதாவது ஒரு சுவிட்ச் ஆஃப் நிலையிலும் மற்றது ஆன் நிலையிலும் இருக்க வேண்டும். இதுதான் 2-வே சர்க்கியூட்டின் கொள்கை.
மீண்டும் சந்திப்போம்.....................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக