வியாழன், 29 ஆகஸ்ட், 2013

டிஸ்ட்ரிபூசன் டிரான்ஸ்பார்மர்


Distribution Transformer
டிரான்ஸ்மிசன் லைனில் இருந்து வரக்கூடிய அதிகமான வோல்டேஜ்-ஐ நாம் பயன்படுத்தக் கூடிய ஸ்டேன்டர்டு வோல்டேஜ் அளவுகளாக அதாவது 1 பேஸ் 230 V, 3 பேஸ் 440 V அளவுக்கு குறைத்து தரக்கூடியதற்கு டிஸ்ட்ரிபூசன் டிரான்ஸ்பார்மர் என்று பெயர்.


இதில் 220 KVA வரையிலான டிரான்ஸ்பார்மர்கள் பயன்படுகிறது. லோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் இயக்கத்திலேயே இருக்கும். ஆகவே இவ்வகை டிரான்ஸ்பார்மர்களில் அயன் லாஸ் நாள் முழுவதும் ஏற்படும். அதேபோல் காப்பர் லாஸ் ஆனது லோடு உள்ள நேரங்களில் மட்டும் ஏற்படும். ஆனால் புல்லோடு காப்பர் லாஸ் அளவுடன் ஒப்பிடும் போது அயன் லாஸ்யின் அளவு மிகக்குறைவு. இத்தகைய குறைந்த அயன் லாஸ் காரணமாக டிரான்ஸ்பார்மர் அதிக ஆல்டே எபிசென்சி கொண்டதாக இருக்கும். இவை
நல்ல வோல்டேஜ் ரெகுலேசன் கொண்டதாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: